Thursday, May 04, 2006

ஜகஜ்ஜால கில்லாடிகள்- V

ப்ரசூன் பாண்டே- விளம்பர உலகின் முடிசூடா மன்னன்...ஜகஜ்ஜால ஜாம்பவான். ப்ரஹலாத் கக்கர் விளம்பர டைரக்டர்களில் சூப்பர் ஸ்டார்னா, ப்ரசூன் பாண்டே விளம்பர 'உலக நாயகன்'. செயிண்ட் க்சேவியர் காலேஜ் மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிசைன் மாணவர். லிண்டாஸ்ல க்ரியேடிவ் டைரக்டரா இருந்துட்டு, ஹைலைட் ஃபிலிம்ஸ்ல டைரக்டரா பணிபுரிஞ்சாரு. அப்புறம் தனியா சில வருஷங்களுக்கு முன்னாடி கார்காய்ஸ்னு ஒரு ப்ரொடக்ஷன் கம்பெனிய தொடங்கி விளம்பரங்களை இயக்கிகிட்டு வர்றாரு. "கார்காய்ஸ்? அப்படின்னா என்ன? "ன்னு கேக்கறவங்களுக்கு ஒரு கொசுறுத் தகவல்: தனியா ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தை தொடங்கி, அதுக்கு என்ன பேரு வைக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கறப்பதான், ப்ரசூன் வீட்டுச் செல்லக் குட்டி.. அவரோட பொண்ணு, எதையோ வரைஞ்சி அப்பாகிட்ட காமிச்சா, அந்த பேப்பரைப் பாத்த ப்ரசூன் "அது என்ன?"ன்னு கேக்க, "இது தான் கார்காய்ஸ்"னு பதில் சொல்லிருக்கு பொண்ணு. ப்ரசூனுக்கு அந்த பேரும் வரைபடமும் பிடிச்சுப்போக, படம் லோகோவா மாற, கார்காய்ஸ் கம்பெனி பேரா உருவெடுத்தது. கார்காய்ஸ பாருங்க.. க்யூட்+டார்டாய்ஸ்= கார்காய்ஸ்?ப்ரசூன் வீட்டு சின்னக் குட்டியும் விளம்பர மொழி பேசுமோ?

One Black coffee please! - நான் காஃபி கேக்கலை.. எரிக்ஸன் விளம்பரத்தைப் பத்திதான் எழுதறேன்னு கரெக்டா கண்டுபிடிச்சிருப்பீங்க...That's the power of advertisement films! ஒரு டயலாக்க வெச்சே எந்த விளம்பரம்னு சொல்ல முடிஞ்சா, அதுவும் ஏறக்குறைய 8 வருஷங்களுக்கு அப்புறம் அது அந்த விளம்பர டைரக்டருக்கும் ஏஜென்சிக்கும் வெற்றிதானே? எனக்குத் தெரிஞ்சி, கிரிக்கெட் வர்ல்ட் கப் சமயம் அடிக்கடி ஒளிபரப்பான இந்த விளம்பரத்தை, அந்த ப்ளாக் காஃபி லைனுக்கும் அந்த லேடியோட [கவிதா கபூர்] எக்ஸ்பிரஷன் ப்ளஸ் நம்ம ஹீரோவோட embarassement கலந்த ஒரு மாதிரியான பெயர் சொல்ல முடியாத எக்ஸ்பிரஷனுக்கு மட்டுமே நிறைய பேர் ஃபேன்ஸ் ஆனாங்க. கோலிவுட் உலக நாயகன் ஆஸ்கர் அவார்டு வாங்குவாரோ இல்லையோ, நம்ம விளம்பர உலக நாயகன்தான் இந்தியாவுக்கான முதல் கான்ஸ் விருதை எரிக்ஸன் விளம்பரத்துக்காக வாங்கித்தந்தாரு!எவ்வளவு பெருமையான விஷயம் இல்ல?

Posted by Picasa அடுத்த விளம்பரத்தைப் பத்தி எழுதறத்துக்கு முன்னாடி ஒரு சின்ன apology.எல்லா SBI விளம்பரங்களையும் டைரக்ட் செஞ்சது நம்ம ஜகஜ்ஜால கில்லாடி-I அபிநய் தியோ-ன்னு நெனச்சு, அடுத்த வர்ற விளம்பரத்தை அவரோட பக்கத்துல தவறா போட்டு இருந்தேன். அதை டைரக்ட் செஞ்சது ப்ரசூன்.சீனியர் சிட்டிசன் வாலண்டைன்ஸ் டே கொண்டாடுறாங்க...பாருங்க.தாத்தா, பாட்டியோட நாச்சுரல் ஆக்டிங்க ரசியுங்க.

ஒரு குடும்பம் ஊருக்கு கிளம்ப எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு பஸ்லயும் டிரெயின்லயும் இடிபட்டு கடைசியா ஆட்டோவுல ஒரு பங்களாவுல வந்து இறங்கறாங்க. அதே சமயம் அந்த பங்களாவை விட்டு ஒரு கார் போகறதை அவங்க பாக்கல. இவங்க கதவை தட்ட தட்ட அந்த வீட்டுலேர்ந்து no response."ஏங்க நாம வர்றோம்ன்னு கடுதாசி போட்டீங்கல்ல"ன்னு கணவனைப் பாத்து மனைவி கேக்க, அப்ப ஸார் போஸ்ட் வந்து ஒரு கடுதாசிய இவங்க கையில திணிச்சுட்டு போகறாரு. பாவம்! இவங்க போட்ட லெட்டரை இவங்களே கலெக்ட் செஞ்சுக்க வேண்டிய பரிதாபம்! அப்செட்டா திரும்பவும் ஊருக்கே கிளம்பராங்க. வாய்ஸ் ஓவர் சொல்லுது "யாஹூ.சிஓ.ஐஎன்-ல ஒரு மெயில் அனுப்பலாமே?" கட் பண்ணா தலைவர் "டியர் பிரதர்..." னு ஈமெயில் அனுப்பத் தொடங்க[மெயில் சப்ஜெக்ட்:கமிங் ஃபார் ஏ ஹாலிடே], அந்த பக்கம் கட் பண்ணா, "உங்க தம்பி குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு வர்றாராம்"ன்னு ஈமெயில் படிச்சுகிட்டே அண்ணி, அண்ணன்கிட்ட சலிப்போட சொல்றாங்க. இதை கேட்ட அண்ணன்காரன் தன் பசங்ககிட்ட "எல்லாத்தையும் பேக் பண்ணுங்க.. ஓடணும்"ங்கிறார். "டூ யு யாஹூ?" ன்னு வாய்ஸ் ஓவர் சொல்ல படம் முடியுது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்ல படிச்சதால ப்ரசூனோட டீடெய்லிங் பக்காவா இருக்கும். யாஹூ குடும்பங்களை யதார்த்தமா சித்தரிச்சு, அவங்க காஸ்டியூம், ப்ராப்ஸ், வீடு, சிவப்பு கார், டேபிள் இன்ன பிற அயிட்டம் எல்லாத்தையும் கவனமா செஞ்சிருக்காரு டைரக்டர். இந்த காமெடி விளம்பரத்துல எந்த கதாபாத்திரமும் காரிகேச்சரா சித்தரிக்கப்படலை, யாருமே காமெடியா பேசவோ, நடிக்கவோ இல்ல. ஆனா விளம்பரத்தைப் பாத்தப்புறம் நம்மள அறியாம நம்ம முகத்துல ஒரு சின்ன ஸ்மைல் வர்றது உறுதி.

ட்ரக் மேல உக்காந்துகிட்டிருக்காரு ஒரு ராஜஸ்தானி கிராமத்து ஆள். அடுத்த ஷாட்டுல அந்த ஓடுற ட்ரக் மேல, அவருக்கு பக்கத்துல, பின்னாடி, முன்னாடி ஃபுல்லா ஆட்கள். ட்ரக் உள்ளாறயும் மக்கள்.. ட்ரக் வெளியில அதோட ஒட்டிக்கிட்டு ட்ரக்க புடிச்சுகிட்டே மக்கள்.. ஓருத்தர் மேல ஒருத்தர் உட்காராத குறையா மக்கள் மக்கள் மக்கள்.. ட்ரக் பின்னாடி கட் பண்ணா அங்க "ஃபெவிகால்-தி அல்டிமேட் அட்ஹெசிவ்" ன்னு எழுதியிருக்கு. ஆஹா! ஃபெவிகால்-னு எழுதியிருக்கும் போதே அதுக்கு இவ்வளவு பேரையும் விழாம பிடிச்சு வெச்சியிருக்கற சக்தியா? அட்றா சக்கை!அட்றா சக்கை!அட்றா சக்கை! பல அவார்டுகளை அள்ளிக் குடுத்த ப்ரசூனின் கைவண்ணம் இந்த விளம்பரம். ஃபெவிகாலுக்கு நெறைய விளம்பரங்கள் பண்ணியிருக்காரு ப்ரசூன். ஃபெவிகாலின் ஆஸ்தான விளம்பர இயக்குனர் இவரு.

நீங்க க்ளோசப்புக்கு மாறலையா? ப்ரசூன் அண்ணாச்சி கே.எல் சைகல் ஸ்டைல்ல பலகுரல் மன்னன் சேத்தன் சஷிதல்ல 'க்யா ஆஃப் க்ளோசப் கர்தே ஹே?' னு பாட வச்சு, தமிழுக்காக திருச்சி லோகநாதன் ஸ்டைல்ல 'க்ளோசப்புக்கு மாறலையா?' னு ஒரு ஜிங்கிள் வச்சு, அதுக்கு ஏத்த மாதிரி ரெட்ரோ ஸ்டைல்ல சூப்பரா விளம்பரம் பண்ணியும் நீங்க க்ளோசப்புக்கு மாறலயா?

அடுத்த விளம்பரத்தைப் பத்தி சொன்னா அவ்வளவுதான்! "கலக்கற ப்ரசூன்! புது ஜூரி, புது விளம்பரம், புது அவார்டு.. பிரமாதம்"-னு நீங்களே சொல்லப்போறீங்க! ஏஷியன் பெயிண்ட்ஸ்- பிரமாதம்!

மரணத்தின் பிடியில் ஒரு வயதான கிழவர். அவரோட பெட்டுக்கிட்ட ஒரு நர்ஸ், டாக்டர், லாயர், கிழவரோட உறவினர்கள்.. குறிப்பா, ரெளடி லுக்குல அவரோட பையன்.. பையங்கிட்ட உயில நீட்டுறாரு லாயர்.அதைப் படிச்ச பையனுக்கு செம அதிருப்தி."என்னப்பா இதுல என்னோட [இங்க] வந்து போகற செலவே ஆயிடுமே" ன்னு அப்பாகிட்ட சலிச்சுகறான் .அப்பா ம்சியல. அப்பா காதுல ஏதோ முணுமுணுக்குறான் அவன். உடனே பணிஞ்ச அப்பா கிழவர் உயில்ல ஏதோ எழுதறாரு... அதுதான் அவன் பங்குல மூணு எக்ஸ்ட்ரா ஜீரோவை.சந்தோஷமான பையன், நர்ஸ்கிட்ட "ம்ம்..அவருக்கு மருந்தை குடு" ன்னு ஆர்டர் போடறான். அப்படியே உயில கையுல எடுத்துகிட்டு அந்த ஜீரோக்களை கண்கொட்டாம பாத்துகிட்டு வந்த பையனோட மகிழ்ச்சியில, வில்லன் மாதிரி ஒழுகுற கூரைலேர்ந்து ஒரு துளி மழைத் தண்ணி.. அது அப்படியே வந்து உயில்ல இருக்கற பற்பல ஜீரோக்களுக்கு முன்னாடியிருக்குற '1'ங்கிற நம்பர அழிச்சிடுது...உயில்ல அவன் பேருக்கு நேரா ஆறு ஜீரோ மட்டுமே மிச்சமிருக்கு.. "ஒரு துளி நீர் உங்க வாழ்க்கையையே மாத்திடும்..வீட்டுல எப்போமே எம்-சீல் இருக்கட்டும்" ன்னு அறிவுறுத்துது வாய்ஸ் ஓவர்.கடைசி ஷாட்டுல பேக்ரவுண்டுல கிழவர் சாக, மகன் "அப்ப்ப்பா" ன்னு அழறான். அவன் எதுக்கு அழறான்னு சொல்லவும் வேணுமா?கிழவரா நடிக்க, மகனா மனோஜ் பாவா.விளம்பரத்துல ஆக்சுவல் சிச்சுவேஷன்- ஒரு ஆள் சாகக் கிடக்குறாரு. ஆனா அதை வச்சே காமெடி பண்ண முடியும்ன்னு நிரூபிச்சிருக்காரு ப்ரசூன்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, பெவி க்விக், பெமினா, பல அவார்டு வாங்கின செண்டர் ஷாக்.. இப்படி இவரு கைவண்ணத்தில் உருவான கார்காய்ஸ் காவியங்கள் ஏராளம்.. ஏராளம்!

ப்ரசூன்கிட்ட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம் ஏஜென்சி ஆளுங்கள அவரு ட்ரீட் பண்ணறவிதம். பொதுவாவே ஏஜென்சிலேர்ந்து க்ரியேட்டிவ், சர்வீஸிங், ஃபிலிம் டிபார்ட்மென்ட் மக்கள் எல்லாரும் தங்களை ஒரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி நெனச்சுப்பாங்க. அவங்க உடுர பீட்டரும், பேசற பேச்சும், 'அந்த ஷாட்டை இப்படி வை, அப்படி கட் பண்ணு'னு ஷூட்டிங், எடிட்டிங்-ல டைரக்டரோட வேலையில interfere பண்ணற ரவுசும் அனுபவப்பட்டாதான் தெரியும். டைரக்டருங்களும் இவங்கள பகைச்சுக்க முடியாம [அடுத்த ஃபிலிம் இவங்க தயவுல வேணுமே!] கல்யாணத்துல பொண்ணு வீட்டுக்காரங்க மாதிரி பூம் பூம் மாடு மாதிரி சொல்றதுக்கெல்லாம் தலைய ஆட்டுவாங்க. ஆனால் ப்ரசூன் அண்ணன் நேர் எதிர். இவருக்கு ஸ்கிரிப்ட் பிடிக்கலைன்னா படத்தை டைரக்ட் பண்ண மாட்டாரு. எடிட்டிங் ஸ்டூடியோவ விட்டு ஏஜென்சி ஆளுங்க ஒரு காத தூரம் தள்ளியே நிக்கணும்.ஃபிலிம் எடிட் பண்ணி முடிச்சப்புறம் ஃபைனல் ப்ரசென்டேஷன்போது மட்டுமே ஏஜென்சிக்கு என்ட்ரீ.ஏஜென்சி ஆளுங்க ரொம்ப ரவுசு விட்டா "போடா" ன்னு ஃபிலிம திரும்ப தந்திடுவாரு. மத்த டைரக்டருங்க எல்லாம் ஏஜென்சி வாசல்ல ஃபிலிம் பிச்சைக்காக ஏங்கி காத்திருக்க ப்ரசூன் மாதிரி, தாது, அபினய், ப்ரஹலாத் கக்கர் மாதிரி ஒரு சில டைரக்டர்ஸ் வாசல்ல மட்டுமே ஏஜென்சி ஆளுங்க தவங்கிடக்கறதை பாக்கலாம்.

ஒரு குட் நியூஸ்-இந்த வருஷம் கான்ஸ் விருது ஜூரியில ப்ரசூனும் ஒரு மெம்பர்.இவங்க குடும்பத்துல ஜூரியா இருக்கறது ஒண்ணும் புதுசில்ல. ப்ரசூனோட அண்ணன் விளம்பர வித்தகர் பியுஷ் பாண்டேவும் சில வருஷங்களுக்கு முன்னாடி ஜூரி மெம்பர்தான். ப்ரசூனோட அக்காதான் 'சோலி கே பீசே க்யா ஹை' புகழ் ஈலா அருண்.
"என்னங்க? ஜகஜ்ஜால கில்லாடில ஒரு லேடிகூட இல்லையா?"ன்னு நீங்க கேக்கறது காதுல விழுது. விளம்பர ராணி வந்துகிட்டே இருக்காங்க.

9 Responses:

ambi said...

An excellant post. i feel this is the best one so far u posted..
waiting for the next one.

Anonymous said...

அருமையான ப்ளாக். ரொம்ப அழகாக விஷயங்களுடன் எழுதி வருகிறீர்கள். எனக்கும் விளம்பரத் துறையில் ரொம்ப ஆர்வம் இருந்தது. முத்ராவில் சேர்ந்து அட்வர்டைஸிங் படிக்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. கடைசியில் எங்கோ போய் எங்கேயோ வந்து சேர்ந்திருக்கிறேன் :) (இன்னமும் ஒரு நாள் இறங்கவேண்டும் என்ற தாகம் இருக்கிறது பார்ப்போம் :))

Btwn I have linked your blog in Desipundit

http://www.desipundit.com/2006/05/04/advertising/

SLN said...

Came here seeing your comment Chennai Metblog. A very interesting subject and blog, in Tamil too. Great. Will have to stop here more often

Cheers
SLN

ambi said...

yeeh, as my brother mentioned me too had the urge to learn advertising. but track changed due to kalathin kattayam..
Hhhhmm, let me see, whether i cud make it in future...

Anonymous said...

Hi,
Your subject of interest is really a refreshing one. Congrats.

My days(Gops) said...
This comment has been removed by a blog administrator.
My days(Gops) said...

one black coffee please=> nokia'va illa ericson aah?

btw, unga blog romba nalla irruku'ngo

லதா said...

அவ்வப்போது நிகழும் நாட்டு நடப்பிற்கேற்ப ஸ்பென்சர் / ஆயிரம்விளக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் அமுல் மற்றும் ஏர் இந்தியா விளம்பரங்கள் பலருக்குப் புன்னகை வரவழைக்கும். அந்த விளம்பரங்கள் இப்போதும் வருகின்றனவா ?

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Madam,

Closeup ad tamil version, Trichy Loganathan or Chidambaram Jayaraman? I guess the second singers style :)