(Voice on Radio) “In the 1950s, as a young woman at the start of her reign, Queen Elizabeth was depicted as a glamorous "fairytale Queen"
டக்கென்று கார் ரேடியோ பட்டனை அழுத்தி, அடுத்த சேனலுக்கு தாவினாள் தீபா.
(“Voice on Radio) The Queen has two birthdays due to British weather..." தலையில் அடித்துக்கொண்டாள் தீபா. மறுபடியும் இன்னொரு சேனலுக்கு தாவ...
(Voice on Radio) “30 years ago, during the Covid pandemic, the Queen moved to Windsor Castle..."
டக்கென்று ஆஃப் செய்து, carplay வுக்கு மாறினாள்..
"திருவல்லிக்கேணி ராணி" --ஏ..ஆர்..ரகுமான் மியூசிக் கம்பீரமாக ஒலித்தது ஸ்ஃபாடிஃபை-லிருந்து.
தீபாவுக்கு தாங்க முடியவில்லை. ரம்யாவுக்கு ஃபோன் செய்தாள். ரம்யா - பெஸ்ட் ஃப்ரெண்ட். தன்னைப் போல் 15 வருடம் முன் லண்டனுக்கு குடிபெயர்ந்த சென்னையைட். வாரத்தில் ரம்யாவிடம் 5 முறையாவது பேசிவிடுவாள் தீபா.
”அடியேய்! Tell me something…What's this big fuss about the Queen and her birthday! மக்கள் எதுக்கு தய்யா தக்கான்னு குதிக்கறாங்க…எனக்கு ஒரு உண்மை தெரியணும்.நம்ம எலிசபெத் பாட்டி நெஜமாவே உயிரோட இருக்காங்களோ?” பொங்கிவிட்டாள் தீபா..
“Stop It I say. அபசகுனமா பேசாத” என்றாள் ரம்யா.
“C’mon we are in 2050… கடைசியா பாட்டி was at a public event 15 years ago. Then no sign of her after that no?”
“ஹஹஹஹா… உன்ன பாக்க ராணீ பாட்டி டெய்லி உங்க வீட்டுக்கு வருவாளா? போவியா…” சிரித்தாள் ரம்யா.
“வேணும்னா ஒண்ணு பண்ணு.. உங்க வீட்டு பக்கத்துலேர்ந்த Windsor Castle isn’t far.. ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடு…சரி நான் ஃபோன வைக்கறேன். Have a call now. Weekend பேசலாம்… Bye” என்றாள் ரம்யா.
“Bye ரம்ஸ்…” என்று ஜிம்மில் பார்க் செய்தாள் காரை, தீபா..
“உங்க வீட்டு பக்கத்துலேர்ந்து Windsor Castle isn’t far.. ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடு” - ரம்யா பேசியதை மறுபடி மறுபடி யோசித்தாள் தீபா..
“Lean forward. Hold tight… Engage your core….Love the energy…” - Spinning Instructor Ron சொல்வது எதுவுமே தீபாவுக்கு கேட்கவில்லை. நெனப்பெல்லாம் ராணிதான்.
அவசர அவசரமாக க்ளாஸை முடித்து ஜிம்மிலிருந்து கிளம்பி மோட்டர் வேயில் காரை செலுத்தினாள் Windsor Castle நோக்கி.
வழி நெடுக மக்கள் கூட்டம்… சும்மாவா? 15 வருஷத்துக்கு அப்புறம் ராணியின் Public Appearance.
எப்படியோ Public Parking-இல் பார்க்கிங் கெடச்சாச்சு.
“Five pounds” - என்றார், ராணி போட்ட கொடியை விற்கும் ஒருவர் கார் பக்கம் வந்து.
கொடியயும் வாங்கி கொண்டாகிவிட்டது. All set.
“திருவிழா கூட்டம் தோத்துப்போகும்…” என்று சொல்லிக்கொண்டே.. கூட்டத்தோடு அயிக்கியமானாள்.
ஒரு மணி நேரத்தில் சர்ர்ர்ர்.. சர்…. என 10 கார்கள்.
மக்கள் “ஹோ…”வென ஆர்ப்பரிக்க ஸ்டைலாக ஒப்பன் காரில்… அட! ராணி எலிசெபெத்தேதான்! தீபாவுக்குஆச்சரியம் தாங்க முடியவில்லை. “Is she for real?” என்று நினைத்துக் கொண்டே, மேலும் கீழும் குதித்தாள்.
“Hiiiiii….your Majestty..Ma’ammmmm” என்று over enthusiastic-ஆக கொடியை டபுள் ஸ்பீடில் அசைத்தாள்…
சட்டென எதிர்பாராமல், ராணியின் பார்வை தீபாவின் பக்கம் சாய “Where are you from?” காரிலிருந்தே ராணி.
“er…Maidenhead…er.. no.. Madras.. India..” என்றாள் தீபா, சந்தோஷம் தாங்க முடியாமல்..
எதையோ யோசித்த ராணி…ஒரு கணம் யோசித்தார்…”Me too.. Alwarpet..”
“…What… er… sorry Ma’am…er.. I.. you..?”தீபாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை…
தீபாவின் கண்ணை நேராக பார்த்து ராணி, பேஸ் வாய்ஸில் “…ஆரம்பிக்கலாமா?…” என்று சொல்லி முடிவதற்குள் அவருடைய கார் விர்ரென பறந்தது…
“எ..ன்..ன்..து? இது கமலகாசனா…”
மயங்கி விழுந்தாள் தீபா..
After The After
6 years ago