Sunday, April 30, 2006

ஜே.ஜே

Posted by Picasa













நேத்து சன் டிவியில ஜே.ஜே படம் பாத்துகிட்டு இருந்தேன்.அப்பதான் நாமளும் இப்ப அட்வர்டைஸிங்ல ஃபேமஸ் ஆயிருக்கற ஜே.ஜே-வை பத்தி ஏன் எழுதக்கூடாதுன்னு தோணிச்சு.ஸோ, ப்ரெசென்டிங் ஜகஜ்ஜால ஜப்பானி (J.J) ஆமீர்கான்!!!

ஒரு டிபிக்கல் ஜப்பானி டூரிஸ்ட் [cap, காமிரா, chinki கண்கள் வீதம்] தங்களோட சாதாரண ஹோட்டலுக்கு நுழையறதைப் பார்த்த ஹோட்டல் சர்வர், மானேஜர் எல்லாம் செம குஷியாயிடறாங்க. உடனே அவர் கிட்ட மெனு கார்டை தர்றாங்க. அதுல எல்லா சாப்பாடு அமெளண்டுக்கு பக்கத்திலயும் ஒரு ஜீரோ எழுத்து மூலமா கூட்டப்பட்டிருக்கு.சமோசா - 100, பேல்பூரி - 200.. இந்த மாதிரி... "அத சாப்பிடு, இதை சாப்பிடு"ன்னு ஜப்பானிக்கு ஒரே ராஜ உபசாரம் பண்ணறாங்க.

அவர் எல்லாத்தையும் விட்டுட்டு "எனக்கு தண்டா(குளிர்ந்த) சமோசா வேணும்" ங்கிறார். "தண்டா சமோசாவா?" எல்லாரும் முழிக்க அவரு "ஆமாம் தண்டா சமோசாதான் வேணும்" ன்னு அடம் பிடிக்கறார். ஜில்லுன்னு ஒரு சமோசான்னு ஒண்ணு கிடையாதுன்னு அவங்க சொல்ல நம்மாளு கிச்சனுக்கு ஓடிப்போய் சமோசாவையும் ரெண்டு கோக் பாட்டிலையும் எடுத்துகிட்டுவந்து "இது என்ன?" ன்னு கோக் பாட்டிலைக் காமிச்சு ரெஸ்டாரன்ட் ஆளுங்ககிட்ட கேக்கறாரு. அவங்க "தண்டா" ன்னு சொல்ல, "இது என்ன" ன்னு சமோசாவைப் பாயிண்ட் பண்ணி கேக்கறார். அவங்களும் கோரஸா "சமோசா" ன்னு சொல்ல, ங்கிறார். ரெண்டுத்தயும் மாறி மாறி காமிக்க, அவங்க தண்டா-சமோசா ன்னு சொல்ல இவரு தண்டாவையும் சமோசாவும் கேட்டது புரிய வருது. ஒஹோ!அப்படியா சேதின்னு டியூப் லைட்டுங்களுக்கு உறைக்குது. அப்பறம் அந்த ஜப்பானி நெசம்மாவே ஜப்பானியா இல்லையாங்கிறது தான் சஸ்பென்ஸ்.

Asusual, ஆமிர் அண்ணாச்சி ஏ-கிளாஸ். மேக்-அப்பை கவனியுங்க. அட!அட! அட! உண்மையாவே ஜப்பானி மாதிரியே இருக்கறாரு. அவரோட ஆக்டிங் சிம்ப்ளி சிங் சங் சூ [ஸிபர்ப்-ங்கிறதை ஜப்பானியில சொன்னேன்..ஹி ஹி ஹி]ஓவ்வொரு கோக் விளம்பரத்திலயும் கலக்கறாரு.

எனக்கு ஒரு ஆசை. ஒரு தமிழனா "அய்யோ ஜீ! வாட்டு ஜீ" ன்னு , நெத்தியில விபூதிப் பட்டை போடாத டிபிக்கல் விளம்பரங்கள் potray பண்ணற தமிழ் ஆளா இல்லாம, ஒரு நார்மல் தமிழ் குடிமகனா ஆமிர் ஒரு கோக் அவதாரம் எடுக்கணும். என் ஆசை நிறைவேறுமா? பிரசூன் ஜோஷி சார்! ஆர் யூ லிஸனிங்?

Friday, April 28, 2006

ஜகஜ்ஜால கில்லாடிகள் - IV

Posted by Picasaஅபிஜித் சவுத்ரி a.k.a தாது(Dadu)- 2003 ஆம் வருஷத்தில் பெஸ்ட் டெப்யூ டைரக்டருக்கான இந்திரா காந்தி நேஷனல் அவார்டை வாங்குனவரு, அவரோட முதல் படமான பதால் கர்ருக்காக[பெங்காலி].

12 வருஷமா அட்வர்டைஸிங் ஏஜென்சியில வேலை செஞ்சிட்டு பிளாக் மேஜிக் மோஷன் பிக்சர் கம்பெனிய கொல்கத்தாவுல தொடங்கி ஏழு வருஷமா மும்பையில கமர்ஷியல்ஸ் டைரக்ட் பண்ணிகிட்டு இருக்காரு.

ஆமிர் கான் ஒரு வேலைய செஞ்சா பர்ஃபெக்டா பண்ணுவாருன்னு கேள்வி பட்ருக்கோம்.. ஆமிர் முதன்முதலா endorse பண்ண பெரிய பிராண்ட் கோகா கோலா. முதன் முதலா பஞ்சாபியா பஞ்சாபி குடிகளுக்கு முன்னாடி கோக் குடிச்சு, அப்புறம் நேபாளியா, பெங்காலியா, ஹைதரபாதியா, பீகாரியா.. போன வருஷம் பாபியா(அண்ணி) கலக்கினாரு. ஆமிர பாபி ஆக்கினது தாதுதான். ஒரு ஆண பெண்ணா வேடம் போட்டு சீரியஸா நடிக்கவைக்கறது கத்தி மேல நடக்கற மாதிரி. கொஞ்சம் இந்த பக்கம் வந்துட்டாலும் 'அந்த' மாதிரி அர்த்தம் ஆயிடும். ஒரு ப்ராடக்ட ஒரு ஆண், பெண் வேடமிட்டு endorse பண்ணது இதுதான் முதல் முறைன்னு நெனக்கறேன். தாது ஒரு illustrator-ஆ வேல செஞ்சதுனால, ஆமிரோட லுக்-க க்ரெக்டா visualize பண்ணி கொண்டு வர முடிஞ்சது அவரால.

இப்ப லேடஸ்டா வர்ற ஐஸ்வர்யா ராயோட கோக்-தண்டே கா தடுகா படத்தை இயக்கினவரும் தாதுதான். பெர்சனால எனக்கு ஐஸ்வர்யாவோட ஆக்டிங் கொஞ்சம் over the top ஆ தெரிஞ்சது. ஆனா அந்த சல்வார் கமீஸ் பொண்ணு டோஸ் குடுக்கற கேரக்டருக்கு அந்த ஆக்டிங் தேவைதான்னு தோணுது.

ஒரு கிராமத்து வேடமிட்ட பொண்ணு ஒரு ஃபோட்டோகிராபருக்காக ஸ்டூடியோவுல நிறைய போஸ் பண்ணறா.ஓவ்வொரு முறை போஸ் பண்ணும்போதும் அவ மூஞ்சியில ஃப்ளாஷ் அடிக்கறதை பாக்கறோம். கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் அவ "போதும்,நான் டயர்ட் ஆயிட்டேன்"ங்கிறா.போட்டோகிராபர் இதுதான் லாஸ்ட் ன்னு சொல்லிட்டு பக்கத்துல இருக்கற அவரோட அசிஸ்டென்ட் முகத்த கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணறாரு. அவன் உடனே அவன் வாயில எதையோ போட்டு மெல்லறான். போட்டோகிராபர் "இஸ்மையில்" ன்னு சொல்ல, அந்த அசிஸ்டென்ட் "ஈஈஈ..." ன்னு இளிக்க, அந்த பெருத்த புன்னகையே ஃபிளாஷா வொர்க் அவுட் ஆகுது. அவன் மென்னது ஹாப்பி டென்ட் வைட் கம் ன்னு தெரியுது. இந்த ஃபிலிம்-ல எனக்கு பிடிச்சது Detailing. படத்தை பாத்திங்கன்னா, பின்னாடி கர்டென்ஸ், ஸ்டூடியோ ஃபோட்டோஸ்,நடிகனோட ஸ்டூடியோ கட்-அவுட், அந்த ஃபோட்டோகிராபரோட antique காமிரா எல்லாமே பக்காவா இருக்கும். They add to the film in a lot of ways. ஃபோட்டோகிராபர்,அசிஸ்டென்ட், மாடல் - இவங்க எல்லாரோட காஸ்டியூம்ஸும் அழகாக வடிவமைக்கபட்டிருக்கு. தாது, ஒரு visualizer & illustratorஆ இருந்து டைரக்டராகினதுனால அவரோட input இந்த ஃபிலிம்ல நல்லா தெரியும்.
தாதுவோட இன்னொரு பாப்புலர் கமர்ஷியல் ஏஷியன் பெயிண்ட்ஸ். ஒரு விட்டுக்குள்ள யாரு இருக்காங்கறதை அந்த வீடே மெளனமா சொல்லும்கிற கான்செப்ட். புது வீட்டுக்குள் ஒரு தம்பதி மும்முரமா வேலை பாத்திட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணற மாதிரி அவங்க சின்ன பொண்ணு சுவர்ல ஏதோ வரையறா.அந்த கிறுக்கல்ல அவங்க அம்மாவும் சேர்ந்துக்க,ஒரு மாதிரியான அழகான மாடர்ன் ஆர்ட் உருவெடுக்குது. கடைசியில புதுமனை புகுவிழா பார்டிக்கு அந்த வீடு ரெடியாக, தன் மனைவிய ஆசையோட உச்சி முகர்றாரு ஹஸ்பென்ட். இதுல நடிச்சவங்க எல்லாருமே, Non-Models. இயல்பான நடிப்பு.Matter of fact விளம்பரம்.

பப்பர பப்பர பெய்ய்ய்ன்... விளம்பர உலகின் ஜாம்பவான் ஜகஜ்ஜால கில்லாடிகள் Part V-ல பராக் பராக் பராக்...

ஸ்ட்ரிங்ஸ்

சிதார்,சந்தூர்,சரோத்,தில்ருபா,சாரங்கி இந்த மாதிரி predominantly நார்த் இந்தியன் ஸ்ட்ரிங்ஸ் வாத்தியங்கள் தமிழ் சினிமா பாடல்கள்ள நிறையவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கு.

தளபதி படத்துல வரும் சின்னத்தாயவள் பாட்டுல உள்ள சோகத்த வெளிப்படுத்தின கரெக்டான வாத்தியம் சாரங்கிதான்.அந்த பாட்டுல beginning பீஸ்-லயும் நடுவுலயும் உஸ்தாத் சுல்தான் கான் வாசிப்புல சோகம் அப்படியே இழையோடும்.சுல்தான் கான் நல்லா பாடவும் செய்வாரு. அலைபாயுதே சினேகிதனே பாட்டுல "கானொரு காமரி காலு"ங்கிற அர்த்தமுள்ள(தெலுங்கு?) வரிகளை பாடினவர் உஸ்தாத் தான்.

ரீஸண்டா காக்க காக்க-ல 'உயிரின் உயிரே' பாடல்ல பாடகர் கே.கே[அட அட அட! என்ன வாய்ஸ்! அவர பத்தி தனி போஸ்ட் அப்புறம்] "முழுதும் வேர்க்கின்றேன்"ன்னு ரெண்டு வாட்டி பல்லவியில பாடி முடிச்சப்புறம் ஆரம்பிக்கற சிதார் மியூசிக் சாதாரணமா ஆரம்பிச்சு, அப்புறம் டிரம்ஸோட போட்டி போட, அத என்ஜாய் பண்ண ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி 'தடார்' ன்னு முடிஞ்சிடும். ஹாரிஸ்! ஜனார்தனன இன்னும் கொஞ்சம் நேரம் வாசிக்க விட்டுருக்கலாம்ல?

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்-ல 'கண்ணாமூச்சி ஏனடா' பாட்டுல, ஐஸ் அக்கா மயில் கழுத்து கலர் பாவாடை தாவாணில, மயில் தோகைய கையில வச்சு கெட்டு ஆடற sequenceல நிலாத்ரி குமாரின் சிதார் டான்ஸ் ஐஸ் டான்ஸவிட ஏ-கிளாஸ். ஆனா ஏ.ஆர். அங்கிளும் சிதாருக்கு இருபது செகண்ட் கூட கொடுக்காதது அநியாயம்!

தில்ரூபா-ன்னு ஒரு வாத்தியம் [பார்க்க படம் கீழே].உயிரே படத்துல (தமிழ் தில்சே) சந்தோஷ கண்ணீரே ங்கிற பாட்டுல அனுபல்லவிக்கு அப்புறம் சரோஜாவோட தில்ரூபா செம சூப்பர். இந்த மாதிரி ஒரு வாத்தியம் இருக்குன்னு இந்த பாட்டுக்கப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது. சரோஜாவ சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில பாத்ததா நியாபகம்

தமிழ் சினிமா பாடல்கள்ள உங்களுக்கு பிடிச்ச நார்த் இந்தியன் வாத்தியம் எது?

Wednesday, April 26, 2006

ஜகஜ்ஜால கில்லாடிகள் - III


ப்ளைவுட் விளம்பரம்ன்னாலே ரம்பமா இருக்கும்ங்கறத மாத்தி சூப்பரானா அட்வர்டைஸ்மென்ட் ஒண்ண க்ரீன்ப்ளை ப்ளைவுட்டுக்காக ஃபிலிம் பண்ணவங்கதான் பெங்களூரச் சேர்ந்த நிர்வாணா ஃபிலிம்ஸ், - ஸ்னேகா & ப்ரகாஷ் வர்மா.ஸ்னேகாதான் ப்ரொட்யூஸர், ப்ரகாஷ் டைரக்டர். இவங்க ரெண்டு பேருமே 'ட்ரெண்ட்ஸ்' விளம்பரப் பட கம்பெனியில பிரபல விளம்பர டைரக்டர் வி.கே.ப்ரகாஷ் கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டர்ஸா வேலை செஞ்சவங்க.சில வருஷங்களுக்கு முன்னாடி நிர்வாணா ஃபிலிம்ஸ தொடங்கி இப்ப சக்கை போடு போட்டுட்டு இருக்காங்க.

காரைக்குடியில ஒரு லோக்கல் பஸ்ஸுல அம்மா-அப்பாவோட போயிட்டிருக்குற ஒரு சர்தார்ஜி பையன் பழங்கால வீடு ஒண்ணுத்த பாத்ததுமே "வண்டி நிறுத்துங்க!!"ன்னு தமிழ்ல சொல்றான்.. அவனோட பேரண்ட்ஸ் 'இதென்ன புது பாஷை"ன்னு விழிக்க, அவன் அப்படியே இறங்கி, அந்த வீட்டுக்குள்ளாற போறான்..ஏதோ யோசிச்சுக்கிட்டே "என் வீடு! என் டேபிள்! என் சாவித்திரி" ன்னு ஒரு சின்ன மேஜையில 'சாவித்திரி'ன்னு எழுதியிருக்கிறத பாத்துகிட்டே சொல்லறான். வீட்டுக்குள்ள எல்லாரும் பேந்த பேந்த விழிக்க, ஃப்ளாஷ் பாக்குல கட் பண்ணா அந்த காலத்து ஜமீந்தார் லுக்கோட ஒரு இளைஞன் மேஜையில 'சாவித்திரி'ன்னு காதலோட எழுதிகிட்டு இருக்காரு. கட்-பேக் டு சின்ன பையன். அந்த வீட்டுல இருக்குற ஒரு செட்டிநாட்டுக் கிழவி "ஸ்வாமி! ஸ்வாமி!"ன்னு அந்த பையன்கிட்ட ஓடி வர்றா..அவனும் 'சாவித்திரி! சாவித்திரி' ன்னு பாட்டிய பாத்து உருகறான். கட் டு ஒரு பழங்கால தாத்தா ஃபோட்டோ-ஈஸி சேர்ல சாஞ்சபடி. கடைசி ஷாட்டுல சர்தார்ஜி பையனும், பாட்டியும் "சாவித்திரி! ஸ்வாமி" ன்னு உருகி உருகி சொல்லிகிட்டே இருக்காங்க. VO "க்ரீன்ப்ளை ப்ளைவுட்... ஜென்ம ஜென்மத்துக்கும் தொடரும் பந்தம்" ன்னு சொல்லி, படம் முடியுது. இருக்குற 30 (அ) 40 செகண்டுக்குள்ளாற கதையையும் சொல்லி, ப்ராடக்ட்ட நல்லா மக்கள் மனசுல பதிய வெக்கறது கஷ்டமான வேலைதான். இந்த ஃபிலிம்ல அந்த வேலைய ரொம்பவே சிறப்பா செஞ்சிருக்காங்க வர்மாஸ்.


ஹச் விளம்பரம் - ம்ம்ம்.. உங்க முகத்துல ஒரு wide smile தெரியுதே! பிரபல ஹச்- நாய் & பையன் விளம்பரத்துக்கு மயங்காதவங்க யாரு?"You and I.. in this beautiful world.. green grass, blue sky...in this beautiful world".அண்மையில காலமான ஓ&எம்-மின் க்ரீயேட்டிவ் டைரக்டர் வி.மகேஷோட கற்பனையில வளர்ந்த பையனுக்கும் நாய்க்கும் உயிர் கொடுத்தது வர்மாஸ்தான். இசை:ரூபர்ட். ஒளிப்பதிவு:டானி போப் .

நிர்வாணாவோட பாராஷுட் சம்பூர்ணாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது ஸ்கிரிப்டா, இல்ல படம் பண்ணப்பட்டவிதமா, மாடலோட எக்ஸ்ப்ரஷன்ஸான்னு pinpoint பண்ணி சொல்லத் தெரியல. overall, ஒரு கேஷுவல் அப்ரோச் இருக்கு இவங்க ஃபிலிம்ஸ்ல.

காஸ்டிங், காஸ்டிங் ன்னு நான் அடிக்கடி எழுதறேன்.கரெக்டான faces ஏன் முக்கியம்னு ப்ரகாஷ் சொல்லறத படிங்க... இங்க பாருங்க.

தொடங்கின மூணு வருஷத்துலயே இந்தியாவின் most sought after ஃபிலிம் மேக்கர்ஸ்ல ஒருத்தரா இருக்காரு ப்ரகாஷ். இவங்க ஷோரீல் உங்க பார்வைக்கு.

'கருப்பு மந்திரம்' பண்ணி ஒரு திரைப்படத்திற்காக பெஸ்ட் டெப்யூ டைரக்டருக்கான நேஷனல் அவார்டு வாங்கின பெங்காலி பாபுவை ஜ.கி IV-ல பாக்கலாமா?

Tuesday, April 11, 2006

ஜகஜ்ஜால கில்லாடிகள் -Part II

ஷிவேந்திர சிங் துங்கர்பூர் (ஷிவி) ஒரு ராஜ்புத்.என்னடா பேரு ரொம்ப கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? இவரு ராஜ்சிங் துங்கர்பூரோட nephew. ஷிவி, டூன் ஸ்கூல் alumni. புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுல [FTII] படிச்சுட்டு, பாடலாசிரியர், இயக்குனர் குல்ஜார்கிட்ட அசிஸ்டென்டா இருந்துட்டு சொந்த படம் இயக்க இருந்தாரு.பாதி ஷூட்டிங் முடிஞ்ச நிலைல, ப்ரொட்யூசர் பணத்தட்டுப்பாட்டுனால படம் நின்னுபோச்சு. ஃபிலிம் இன்டஸ்ட்ரியோட loss. அட்வர்டைசிங்கோட gain. இவரு விளம்பரப்பட இயக்க ஆரம்பிச்சுட்டாரு.
இவர அட்வர்டைசிங் இண்டஸ்ட்ரீ அடையாளங் கண்டுகிட்டது விம் பார் விளம்பரப் படம் மூலமாதான்.முதலிரவு அன்னிக்கு ஒரு young couple முதல் மாடியில இருக்கற அவங்க ரூமுல ஜல்சாவா இருக்கலாமுன்னு பாத்தா, அப்ப பாத்து நம்ம காமெடியன் (ராஜ்பால் யாதவ்) கீழ செங்கலயும் பொடியயும் யூஸ் பண்ணி 'கொர் கொர்'னு சத்தம் வர பெரிய அண்டா குண்டாவெல்லாம் தேச்சிகிட்டு இருக்காரு. இந்த சத்தத்தால எரிச்சலடைஞ்ச கல்யாண பொண்ணு ஒரு விம் பார அவன் மேல தூக்கி போடறா. அடுத்த ஷாட்டுல அந்த புதுமணத் தம்பதி ஒருத்தர ஒருத்தர் நிம்மதி கலந்த அன்போட பாக்க, அந்த நிம்மதி is shortlived.நம்ம காமெடியன் , விம்மால பாத்திரத்தையெல்லாம் துலக்கிட்டு, அதே சந்தோஷத்தோட பெரிய வாணலியில தாளம் போட்டுகிட்டே, உரத்த குரல்ல பாட ஆரம்பிக்குறாரு.
ஷிவியோட ப்ளஸ் பாயிண்ட் அவரோட casting. அப்புறம், நிறைய அட்வர்டைசிங் இயக்குனர்கள்கிட்ட பாக்கமுடியாத temper. சாந்த சொரூபி. அனாவசிய கத்தல் (read:கெட்ட வார்த்தை) கிடையாது. இந்த மாதிரி நல்ல temperன்னாலே குழந்தைங்ககிட்ட ஈஸியா வேலை வாங்க முடியும்.
சர்ஃப் ப்ளூவுல [ரெட்ட ரெட்டா வைக்கறதுக்கு ப்ளூ...] வர்ற குண்டு க்யூட் பையன டைரக்ட் செஞ்சது ஷிவிதான். ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணாம இயல்பா பண்ணிருப்பான் பையன்.
ஒரு போர்டிங் ஸ்கூல்ல தங்களோட ஸ்கூல் நாட்கள அசை போடும் நாப்பது வயது மிக்க மூணு ஃப்ரெண்ட்ஸ். அதுல ரெண்டு ஆண்கள் "சின்ன வயசுல என் டிபன் பாக்ஸ்ல இருந்த க்ராக் ஜாக் பிஸ்கட்ட நீதான் திருடுன, நீதான் திருடுன-ன்னு ஒருத்தர ஒருத்தர் accuse பண்ண, இதையெல்லம் பாத்துகிட்டு இருக்கற அவங்க க்ரூப்புல இருக்கற அந்த பொண்ணு , "நான் டிபனே கொண்டு வர மாட்டேன்.. அதுக்கு அவசியமே இருக்கல "ன்னு கூலா சொல்றா. அந்த ரெண்டு பாய்ஸோட க்ராக் ஜாக் பிஸ்கட்டயும் அவதான் திருடி சாப்பிட்டுகிட்டு இருந்தான்னு தெரிய வருது. கிட்டு கித்வானி, அந்த பொண்ணா ரொம்ப அருமையா நடிச்சு இருப்பாங்க. இந்த இயல்பான விளம்பர இயக்கினது ஷிவி.
இப்ப Air-ல வந்துகிட்டு இருக்கற இந்தியாவின் பற்பல கல்ர்ஸ யெல்லாம் காட்டும் வீல் கமர்ஷியல்.ஆஹா! அந்த கலரயெல்லாம் படம் பண்ணவிதத்துக்காகவே ஷிவிக்கு ஒரு ஷொட்டு!
க்ரீன் ப்ளை ப்ளைவுட்..ஊஹும்! அந்த சர்தார்ஜி பையன் விளம்பரம் இல்ல.இது புதுசு. ஒரு க்ளாஸ் ரூமுல வெறும் பெஞ்சுகளோட ஒரு ஸ்கூல் பையன் நின்னுகிட்டு இருக்கான். Voice-over [VO] சொல்லுது "ஸ்கூல்ல பெஞ்சுகளோட எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, காலேஜுல சீட்டுகளும் அதிகமாகுது" . ஒரு காலேஜ் பையனோட ஷாட்டை பாக்கறோம். அடுத்தடுத்த ஷாட்டுகள்ள ஆபீஸ், வீடு, ரெஸ்டாரண்டு, பாங்க்-ன்னு பாக்கறோம்.VO continues "ஆபீஸுகள்ள டிபார்ட்மென்ட்ஸ் அதிகமாகுது...கல்யாணம், வீடு எல்லாத்துலயும் ஃபர்னிச்சர் அதிகமாகுது...ரெஸ்டாரன்டுல இன்டீரியர்ஸ், பாங்குல கவுண்டர்ஸ் ஜாஸ்தியாகுது.. இப்படி அதிகமாக அதிகமாக, எவ்வளவோ எதிர்பார்புகளும் அதிகமாகுது... ஸ்கூல்ல பெஞ்சுகள் அதிகமாக, இந்தியாவோட நாங்களும் சோர்ந்து உயர்ரோம்..க்ரீன்ப்ளை இண்டஸ்ட்ரீஸ்-இந்தியாவின் மிகப்பெரிய இன்டீரியர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி" ன்னு படம் முடியுது. மோன் டாஜ் ஷாட்டுகளின் முடிசூடா மன்னர் ஷிவிதான்!
ம்ம்ம்...க்ரீன் ப்ளைன்னதுமே நம்ம series-ல அடுத்தது யாருன்னு தெரிஞ்சிருக்கும்..காத்திருங்க !

Monday, April 10, 2006

ஜகஜ்ஜால கில்லாடிகள்

விளம்பரப் பட script நல்லா இருந்தா மட்டும் போதாது. அத டைரக்ட் பண்ண நல்ல இயக்குனர்கள் இருந்தாதான், copywriter எழுதியிருக்குற script க்கே full effect கிடைக்கும்.இந்த ஜகஜ்ஜால கில்லாடிகள் பகுதியில உங்களுக்கு அறிமுகமில்லாத விளம்பரப்பட டைரக்டர்ஸ் பத்தி எழுதப் போறேன்.

இந்த seriesல முதல்ல அபிநய் தியோ.இவரு மும்பை ஒகில்வி&மேதர்-ல copywriterஆ இருந்துட்டு, அப்புறம்,ஹைலைட் விளம்பரப்பட தயாரிப்பு நிறுவனத்துல இயக்குனரா சில காலம் வேல செஞ்சாரு.அபிநய்யோட அப்பா ரமேஷ் தியோ,மராத்திய நடிகர், இயக்குநர்.அண்ணன் அஜின்க்யா தியோவும் மராத்திய நடிகர்தான்.
அபிநய்யோட ப்ளஸ் பாயிண்டு அவரோட ஸ்டைல். சில விளம்பரப்பட இயக்குனர்கள் மத்த adfilm டைரக்டர்ஸோட பாணிய அப்படியே ஃபாலோ பண்ணுவாங்க.ஆனா அபிநய்யோட விளம்பரப்படங்கள்ள, ஒவ்வொரு படமும் வித்தியாசமா இருக்கும். இது அபிநய் பாணின்னு க்ரெக்டா pinpoint பண்ணி சொல்லமுடியாம, ஸ்கிரிப்டுக்கு தகுந்த மாதிரி, ஸ்டைல் மாறும்.உதாரணத்துக்கு, சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது [Surf excel-Daag acche hein] படத்தை பார்ப்போம்.ஒரு சிம்பிள் ஸ்க்ரிப்ட்தான். ரெண்டு குழந்தைங்க - அண்ணா-தங்கை, மண் ரோடுல நடந்து போய்கிட்டு இருக்காங்க. கீழ விழுந்த தங்கச்சி ஓ-ன்னு அழ, அவளோட அண்ணன் அண்ணன் அந்த மண்-சகதியோட தாம் தூம்-ன்னு சண்டை போடறான்."ஏய், நீ இனிமே இப்படி பண்ணுவியா? ஸாரி சொல்லு, என் தங்கச்சிகிட்ட" ன்னு மண் ரோட்டை எட்டி உதைக்கிறான், குத்தறான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவனே தங்கச்சிகிட்ட வழிஞ்சுகிட்டே"ஸாரி சொல்லிடுச்சு" ன்னு சொல்ல, வாய்ஸ்-ஒவர் சொல்லுது "கறை படறதுன்னால நல்ல விஷயம் நடந்தா, கறை நல்லதுதானே? சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது".அப்புறம் அந்த அண்ணன பாக்கறோம்.. போறசாக்குல, அந்த puddleஅ பாத்துட்டு, "மறுபடியும் பண்ணாத"ன்னு ரவுஸ்விடறான். ஸ்க்ரிப்ட் படிக்க இன்ட்ரஸ்டிங்கா இல்லைன்னாலும், அதை அபிநய் படம்பிடிச்ச விதம், செம க்யூட். நிறைய டைரக்டர்ஸ், நம்ம பல விளம்பரங்கள்ள பாக்கற குழந்தைங்களையே வெச்சு படத்த ஒட்டிருவாங்க.அதனால, ஒரு 3 ரோஸஸ்ல வர்ற குழந்தை, க்ளினிக் ப்ளஸ்லயும், ஏஷியன் பெயிண்ட்லயும் இன்னபிற 100 விளம்பரத்துலயும் வரும்.சர்ஃப் எக்ஸல்ல நடிச்ச ரெண்டு குழந்தைங்களுமே புது முகங்கள். அதனால நமக்கு, ஏதோ நம்ம வீட்டு பசங்க நடிக்கறா மாதிரி தோணுது.இந்த படத்த பத்தி இங்கயும் பாருங்க.
உங்களுக்கு மிராஜ்கர்ர தெரியுமா?அந்த காலத்துல இந்திய ஒலிம்பிக் ஹாக்கி அணியில இடம்பெறாத ஒரு தாத்தா.. அவரு பேரன் ப்ரகாஷ் மிராஜ்கர் அண்மையில ஹாக்கி டீம்ல செலக்ட் ஆனதும், "மிராஜ்கர் ட்ராப்டு" ங்கிற அவரு காலத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஹெட்லைனயும் "ப்ரகாஷ் மிராஜ்கர் செலக்டட்" ங்கிற அன்னிக்கு வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா ஹெட்லைனயும் பக்கத்துல வெச்சு டான்ஸ் ஆடுவாரே? அந்த டான்ஸ டைரக்ட் செஞ்சது அபிநய் அண்ணாச்சி. தட்டுங்க. மிராஜ்கர பாருங்க. மிராஜ்கர் casting சூப்பர், இல்ல? அவர் expressions.. கலக்கிட்டாரு. மிராஜ்கர்ரா நடிச்சவரு ஒரு பிரபல மராத்திய மேடை நாடக நடிகர்.
பக்கத்து வீட்டு லைலாவ மரமேறி காதலிக்கும் டாடா ஏஐஜி, மஜ்னுவ பாருங்க, உபயம் :-அபிநய் தியோ. மேக்-அப்பை மறக்காம கவனியுங்க.
யாறிந்த டிகேன் வர்மான்னு இந்தியா ஃபுல்லா கேக்கவச்சு, டிகேனுக்கு ஓவரா பில்ட்-அப் குடுத்துட்டு கடைசில அவரு ஃப்ரூட்டி குடிக்குறாருங்கிற anti climax-அ படமெடுத்தவரும் அண்ணன்தான்.
ஒரு சின்ன பொண்ணு ஒரு ஃப்ளைட் கேப்டனுக்கே ப்ளேன்ல சீட் பெல்ட் எப்படி போடறதுன்னு சொல்லித்தர்றா. இந்தியன் ஏர்லைன்ஸ் க்காக அபிநய் படமெடுத்தத இங்க பாக்கலாம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கே புது இமேஜ் வந்துருச்சு இவரால..நா பெட்டு கட்டறேன்.இவரால மட்டும்தான் இந்த மாதிரி டைரக்ட் செஞ்சிருக்க முடியும்..
Amazing அபிநய்யோட மத்த விளம்பரப்படங்கள அவரோட வெப்ஸைட்டுல போயி என்ஜாய் பண்ணுங்க.

ok, என்னோட அடுத்த டைரக்டர் ஒரு ராஜ பரம்பரைய சேர்ந்தவர்....

Sunday, April 09, 2006

Aruval -vs- Blade




In the coming Assembly elections, the Mylapore constituency is witnessing the clash of the sharpeners - S Ve Shekar (AIADMK) and Napolean (DMK).

Neppo's mylapore manifesto (mm) includes a free veshti for every Mylaporean. The unique thing about the veshti is that it comes madichyfyed and can only be worn on top of a kodu potta drawer.You cannot un-madichyfy the veshti and it is apt for the Madras veyyil, so says Nepz.

S V's Mylapore manifesto, on the other hand, has a free orange colour t-shirt for every family. The speciality of the T-shirt is that if you are size 'Large', you will be given a 'Medium' size shirt, if you are an 'XL', 'L' for you and so on, and thus helps you show off your toppai. He promises that he will not use public money or for that matter,his own to buy the T-shirts.These T-shirts will be borrowed from Rex Fashions.
----------------------------------------------------------------------------------
If Neppo wins, he has promised a free aruval for every Mylaporean family..This will come handy for the Mylaporean taaikulam and they can use it during their 'Kozhayadi' sandais.The Aruva has a sound system attached to it and it says "Deeeei.." in Neppo's voice whenever one takes it out.

S V has promised to give a blade to each family. The blade too, comes with a sound sytem and whenever the blade is used by men for a shave or by women to ward off bus pokkiris, it will automatically say "Amma jinguchaa..." S V adds that the blade symbolizes his 'kadi' jokes.





Aruval-a Blade-a ?

Pongi ezhundu vaakaliyungal Mylapore makkalae!

Thursday, April 06, 2006

Brokeback Mountain - ஒரு கிழிசல்




இனிமே யாராவது "ப்ரோக்பாக் மவுன்டென் ஆஹா, ஒஹோ "ன்னு சொல்லட்டும்.. I will break their back! படமாய்யா அது? "ஆஸ்கர் நாமினி, sensitive potrayal of gays.. poignant...அது, இது"-ன்னு அளந்த அளப்பையெல்லாம் படிச்சுட்டு, அந்த பாழாப்போன ஆஸ்கர் அவார்டு ஃபங்ஷனையும் டிவில பாத்து உச்சு கொட்டிட்டு ("அய்யோ, ப்ரோக்பாக் மவுன்டென் வின் பண்ணலயே"ங்கிற ஏக்கத்துல), என்னை warn பண்ண புருஷனையும் அலட்சியப்படுத்திட்டு, அவுகளையும் கூட்டிட்டு, வேகாத வெய்யில்ல தியேட்டர்ல டிக்கட் வாங்கிட்டு இந்த கண்ட்றாவிய பாக்கப்போனேன்.

ராமராஜன்,தேவர் படத்துலயுந்தான் மிருகங்க காட்சி நெறய வருது.அதுக்காக, போட்ட காட்சியவே திரும்ப திரும்ப போடறாங்க? அந்த குதிரங்க மேயற காட்சியயே, எவ்ளோவாட்டிதாங்க பாக்குறது?

ரெண்டு ஹீரோவுல ஒருத்தன் பேசுறதே புரியமாட்டேங்குது ! அஷ்ஷு, புஷ்ஷு ன்னு பேசினான்.நா எதோ ஜார்ஜு புஷ்ஷப்பத்திதான் பேசுறானோன்னு நெனச்சுகிட்டிருந்தேன்..கெளபாய் ஆக்ஸெண்ட்டாமில்ல! மாட்டுப்பயக பேசுறது மனுஷனுக்கு எப்டீங்க புரியும்? கஷ்டம்டா!

குதிர மேயுறதயே காட்டி, படத்த ஒண்றர மணிக்கு இளுக்கறாங்க.அப்புறம் அந்த ரெண்டு பேரோட காதல், அவுக கஸ்மாலம், ச்ச்சீ![மொற பொண்ணுங்களோட] கண்ணாலம்,கொளந்த குட்டீ எல்லாத்தையும் காட்டிபுட்டாங்க.. அப்புறம் அந்த ரெண்டு மாட்டுப்பயக ஜாலிலோ ஜிம்கானா பண்ணறதையும் காட்டுறாங்க.

படம் முடியற 10 நிமிஷத்துக்கு முன்னாடி, எங்க தியேட்டருல, கரண்டு கட்டாயிடுச்சு! படம் முடிஞ்சிருச்சுன்னு நெனச்சு 20 பேரு கெளம்பிட்டாங்க! அப்பதான் தியேட்டர் மானேஜர் ஓடி வந்து "யோவ்! படம் இன்னும் முடியலய்யா" ன்னு ஞானோதயம் சொன்னாரு!" அதுதாங்க படத்துலயே ரொம்ப காமெடியான பார்ட்டு! அதுவரைக்கும் சோந்துருந்த தியேட்டர் மக்கள் ஒரே சிரிப்பு!

ப்ரோக்பாக் மவுன்டென பத்தி,பேப்பரு, டிவி, இன்டர்னெட்டு எல்லத்துலயுந்தான் படிச்சேன்.ஆனா ஒருத்தர் கூட ஷாட்டுக்கு ஷாட்டு கண்றாவியா ஸ்க்ரீனுல தெரியுற அந்த 'பூம் மைக்'கப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?நம்ம சவுண்டு பார்டியும் சத்தம் போடாம குந்திகுனுக்குறாரு?
ஆனா ஒண்னு நெசம்பா. ப்ரோக்பாக் மவுன்டெனுக்கு ஏன் 'பெஸ்டு ஃபிலிம்' ஆஸ்காரு கிடைக்கலன்னு எனக்கு இப்போ புரியுது. ஆஸ்காரு ஜூரி, படம் பாக்க உக்காந்தப்ப அங்க கரண்டு கட் ஆயிருக்கும். அவுகளும், படம் முடிஞ்சிருச்சுய்யா-ன்னு எளுந்து போயிருப்பாக! அப்படியே முளுசா படம் பாத்திருந்தாலும் அவுகளுக்கு புரிஞ்சிருக்குமா? அத விடுங்க டைரக்டர் ஆங் லீ அண்ணாச்சிக்கே புரிஞ்சிருக்குமான்னு சந்தேகந்தெய்ய்ன்!

இனிமே யாராவது ப்ரோக்பாக் மவுன்டென்-னு சொன்னா அவுக முதுக ஒடச்சுருவேன்!

Saturday, April 01, 2006

பாதுகாப்பான வளையல்


இந்த வளையல் தொலஞ்சே போகாது.. ஏன்னா இது 'Safety' pin னால செஞ்சது.
பாக்க ரொம்பவே அழகா இருக்கு, இல்லயா?