ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து இன்று அதே கலைஞானியை சந்தித்தேன். பெளத்தாயன் முகர்ஜி - கடந்த ஆறு மாதங்களாக Little Lamb films என்று சொந்தமாக விளம்பரப்பட நிறுவனத்தை நடத்திவருபவர்தான் அந்த மாபெரும் இயக்குனர் (ஐயோ! இவர் அவர் என்று எழுதவே ஒரு மாதிரி இருக்கிறது.) இருவரும் ஏறக்குறைய 8 வருடங்களுக்கு முன் ஒன்றாக பற்பல விளம்பரங்களில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்தோம். இப்போது விசாலமான தனி ஆஃபீஸ், விளம்பர ஷோரீலில் அவருடைய இயக்கத்தில் க்வாலிடியான 10 விளம்பரப்படங்கள், 2 துணை இயக்குனர்கள் என்று அவன்(ர்?) வளர்ச்சியைப் பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. வெகு நாட்களுக்குப் பிறகு இன்று இருவரும் சந்தித்ததால் விளம்பர-வெட்டி உலகின் வெட்டிப் பேச்சுடன் பார்வை அவனுடைய ஷோரீல் பக்கம் திரும்பியது.. அதில் ஓர் விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது.
"திரும்பவும் அதே அமுல் மாசோவுக்காக விளம்பரம்...ஆரம்பிச்சிட்டியாடா? " என்றேன். விளம்பரத்தைப் பார்த்தவுடன் "இந்த விளம்பரத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸை முடிக்க எத்தனை நாள் ஆனது? பட்ஜெட் என்ன?" என்ற என்னுடைய Nagging கேள்விக்கு பதிலளித்தான் சிரித்துக்கொண்டே! "இவ்விளம்பரத்தின் ஒரு ஷாட்டிற்குக் கூட எஃபெக்ட்ஸ் யூஸ் பண்ணலை, எல்லாமே ரியல் people.. er.. almost people" என்றான். "Whattttt? you must be kidding" , இது நான். அதே பிரமிப்புடன் இந்த பதிவை எழுதுகிறேன்.
Saints & Warriors - விளம்பர ஏஜென்சியின் கருத்தாக்கத்தின் விளைவுதான் இந்த அமுல் மாசோ பகுதி 2. ஸ்டோரி போர்டு கையில் கிடைத்தவுடன் இயக்குனர் தொடர்புகொண்டது இவர்களைத்தான். கூடவே, மனித குரங்குகளின் ஆக்ஷன்களை தன் அஸிஸ்டென்ட்ஸ் உதவியுடன் படம்பிடித்தார் இயக்குனர். அந்தப் பதிவு உடனடியாக குவாலாலம்பூர் அனுப்பப்பட்டது.
படப்பிடிப்பிற்கு எடுத்துக்கொண்ட நாட்கள்: மூன்று. ஒராங்குடான்களின் பயிற்சிக்காலம் : ஐந்து வாரங்கள். இரண்டே இரண்டு ஒராங்குடான்களை டூப் போட்டு ஐந்தாக்கிவிட்டார் இயக்குனர். ஒராங்குடான்களின் பயிற்சியாளர்கள் இருவர் - 'The good trainer' and 'the bad trainer'. அதாவது பயிற்சியின்போது சொல்பேச்சுக் கேட்காத ஒராங்குடான்களை திட்டுவார் bad trainer. உடனே ஒராங்குடான்கள் good trainer-ரிடம் "அவரு திட்றாரு..." என்று கம்ப்ளெயிண்ட் செய்ய, உடனே good trainer, "என் செல்லம்ல நீங்க... நான் bad trainer-அ 'பாத்துக்கறேன்'.. இப்ப நீங்க சமர்த்தா ஆக்ட் பண்ணுங்க....நான் உங்களுக்கு தின்ன எதாவது தர்றேன்" என்பாறாம். உடனே இரண்டும் சமர்த்தாக நடித்துக்கொடுக்குமாம். கேட்கவே வேடிக்கையாக இருக்குல்ல? இவ்விளம்பரத்தின் ஒளிப்பதிவாளர், அர்விந்த் கண்ணபிரான், மை பிரதர் நிகில் போன்ற படங்களை படம்பிடித்தவர் ஆவார்.
இவ்விளம்பரத்தின் ஹீரோக்கள் இருவருமே ஹீரோயின்கள்.. ஹி.. ஹி.. புரியலையா? ரெண்டுமே female orangutans. ஆண் ஒராங்குட்டான்கள் ரொம்ப wild, மேய்ப்பது கடினமாம். அதனால் இருவரில் ஒருவரை அலங்கார பூஷணியாக்கிவிட்டு மற்றொன்றிக்கு போஸ்ட் புரொடக்ஷனில் கொஞ்சம் கலர் ஏற்றி மெருகூட்டியுள்ளார்கள். பெளத்தாயன் முகர்ஜியின் மனதில் ஸ்டோரி போர்டு, எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்துமே தெள்ளத் தெளிவாக இருந்ததால், பல NG [Not good / not granted] டேக்குககளையும் ஒ.கே-வாக்கினார் அவர். உதாரணத்திற்கு ஒராங்குடான் கையை கீழிருந்து மேலுயர்த்தும் காட்சி ஒன்று ஒ.கே-ஆனது. அதை உல்டா செய்து ரிவர்ஸ் ஷாட்டில் மேலிருந்து கீழ்வருமாறு செய்த்துள்ளார். விளம்பரம் படம்பிடிக்கப்பட்ட இடம் : குவாலாலம்பூரிலிருந்து இரண்டு மணி நேரம் தொலைவிலுள்ள மலாக்கா. சரி, குரங்குகளின் சேட்டை விளம்பரத்தை இப்ப பார்க்கலாமா?
btw, இந்த ஒராங்க்குடான்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்கிறீர்களா? கேதரின் ஜீட்டா ஜோன்ஸ் - வீசா விளம்பரம்.. ஞாபகம் வருதா? அவரோடு நடித்த மரீனாதான் இருவரில் ஒரு அழகி. மரீனா இருக்க சனா கான் எதுக்கு?
PS # 1: வெகு நாட்களுக்குப் பிறகு தமிழில் பதிவு... மனநிறைவு!