Showing posts with label அசத்தல் அட்வர்டைஸ்மென்ட். Show all posts
Showing posts with label அசத்தல் அட்வர்டைஸ்மென்ட். Show all posts

Wednesday, August 12, 2009

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 13

When I watch wonderful advertising films on television, I really wonder what I am doing sitting in front of the laptop tappu tipping the entire day instead of being on the sets of a film. Take the recent Vodafone - 'Set your own busy callertune' film. The idea of the film is very simple. But the execution is quite cute with the 'Aerosmith'-ey tune and 'normal' voices singing their busy callertunes. Would have loved to have worked on this kind of a film.

Today's Asatthal advertisement is not about Vodafone. The Times of India- A day in the life of Chennai film released at a time when the Nakka mukka fever was at its peak. Fell in love with the film completely when I saw it the first time on one of the tamizh channels. An ad for an English daily in Tamizh... with a tamizh song... How cool is that?

With a line like 'A day in the life of Chennai' one could have stuck to the cliche` - A collage film with images of Chennai starting with Marina beach, Kapali kovil, Jasmine flowers, Madisar maamis, Santhome church and so on. But this film portrays the same through the life of a cardboard cut-out which is so.... typically Madras.[finding it difficult to write Chennai time and again... could we stick to Madras please?]

In a minute and a half you watch the rise and fall of the cut-out. A leading actor's cut-out transforms itself into a leading politician's cut-out. Koothhu , kummalam , crackers happen as they celebrate their thalaivar's success. Police tadiyadi follows and the cut-out becomes a scare crow in the end. LOL! The most amazing part of adfilms is that they narrate stories in seconds and yes, minutes. Most adfilms are about thirty seconds long. This one's a minute and a half and the entire story is narrated in this time frame.

Honestly I thought it was directed by a Tamilian or atleast someone from the South. A little research and got to know that the director of the film is Shashanka Chaturvedi, known as Bob in the adfilm world. Vikram Kalra is the producer. Together they run this production house called Good morning films based out of Mumbai. Jason West, who was the cinematographer for Luck by Chance Rock on is the director of photography and Nitya Mehra, the chief assistant director on this film . The music is ofcourse by Vijay Anthony, sung by Madurai Chinnaponnu.

Senthil Kumar of JWT is the brain behind the core thought of the film. It was Bob who created the look and feel. A lot of research has gone into incorporating the nuances . For example ,the paal-abhishegam (milk-pouring on the cut-out) was Bob's idea and coming from a non-tam background, he must have put in a lot of work in detailing and it shows.Bob has no formal training in adfilms, is a college drop-out and started his career in Channel [V] in the production department . Later , he moved to Adfilmwallahs, a well-known production house that directs ad films, worked with them for eight years before branching out to start his own outfit 'Good morning films' along with Vikram.

Surprisingly, the choice of music did not come from the ad agency... it came from Bob who had heard in a night club in Malaysia. He didn't know the lyrics but knew how it sounded like and went hunting for the song. Senthil wrote the lyrics for the song in this film.

The guy in the cut-out was sourced through a casting agent and was chosen after photographing him in different outfits. Rajkumar, a friend of Bob's who had worked with them earlier helped them immensely in choosing the right locations for the film.

Winning a Golden Lion at the Cannes film festival is like winning an Oscar for the best film.When this film was being sent to the Cannes film festival, not many people [from the Indian adfilm industry] thought it would win. After all, it was competing against several other ad films across the world including our very own, Vodafone Zoozoos . Had worked with Senthil on another occasion and would wait for his facebook updates on the nominations for Film Lions. Was maha thrilled when I got to know that the Times of India film was nominated ... and Zoozoos weren't. he he. Even then, wasn't sure of its winning chances 'coz one hadn't seen the other films nominated in the same category from across the world. It was a double whammy when the film was nominated for the best use of music as well. What joy!

The suspense through the Cannes' grand finale weekend was killing me. Has the TOI film won? Will team JWT bring India's first Film lions? It was Sunday morning and TOI carried the good news on its front page. The Times of India Chennai film had won two golds - Gold Lions for the best ad film and for the best use of music! I was exhilarated! India's first Film Lions for a film based on Chennai. Yay!!!

But... but...unfortunately like in most cases, the agency has taken the entire credit for this film. Nowhere will you find references of Bob or Vikram or Good morning films. Though the Cannes entry has the name of the film-maker in the official records, the media has completely ignored the director and his crew. I agree its a great idea... a great script from the agency but without a director's vision, it would have been impossible to create this magic on screen. It is like giving credit of Slumdog millionaire's music to Danny Boyle. It saddens me when I hear the agency's creative headhoncho's name all over - some of the articles even giving the entire credit to the agency as the 'director of the film' and no mention of Bob anywhere. Read this , this and you will understand what I am saying.

That's the sad part of adfilms unlike feature films. The director / production house never get the credit. Its so typical of agency guys to snatch the credit from the people who deserve it the most.

This is a small attempt to give some sort of coverage to the guys who brought glory to India by winning our first Film Lions at the Cannes. Bob and team... you rock!

Presenting, the twin-Gold winner at Cannes - The Times of India- A day in the life of Chennai...

Friday, November 14, 2008

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 12

Guess who's reading the Hindustan Times?

தமிழ்நாட்டின் 'தல-தளபதி' மோதலைவிட சுவாரஸ்யமானது Hindustan Times(HT) -Times of India (TOI) "நீயா நானா" போட்டி. வருடாவருடம் IRS-இன்( Indian Readership Survey) முடிவுகள் வெளியானவுடன் தில்லியில் நான்தான் நெ.1 என்று HT சொல்வதும், TOI அதை மறுத்து நானே நெ.1 என்று மார்தட்டிக் கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்த வருடமும் ட்ரெண்ட் மாறாமல் குடுமிப்பிடி சண்டை ஆரம்பம். இந்த சூப்பர் சண்டைக்கு பிள்ளையார் சுழியாக HT-யின் விளம்பரத்தில் ஒரு தாத்தா HT படித்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரென்று தெரிகிறதா? TOI-யின் மிகப்பிரபலமான R K Laxman-இன் Common man தான்! TOI-யின் முதற் பக்கத்தில் நாட்டு நடப்புகளை டெய்லி கார்டூன் வழியாக சொல்லும் மிகப் பிரபலமான மிஸ்டர். பொது ஜனம்தான் இந்த Common man.

Common man-இன் முழு உருவத்தையும் போடாமல் அவருடைய ட்ரேட் மார்க் கண்ணாடியின் ஒரு பகுதி + தலைமுடியின் ஒரு Hint-உடன் establish செய்துள்ளனர். TOI-இன் (almost) மாஸ்க்ட்டான அவரே HT படிக்கிறாராம்... ஏனைய மக்களும்தான், என்கிறது இவ்விளம்பரம்.


ஒரு 30 வினாடி விளம்பரப்படம் கூறும் கருத்தை ஒரே பக்கத்தில், ஒரு புகைப்படமோ, வாக்கியமோ அல்லது சின்ன வார்த்தையோ சொல்ல வேண்டும். அதுதான் நாளேடுகளில் வரும் விளம்பரங்களின் சவால்.

தில்லியின் நெ.1 ஆன HT , இப்போது மும்பையிலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை ஒரே கார்டூன், ஒரே வரி மூலம் சொல்கிறது இவ்விளம்பரம். இதற்கு TOI-யின் பதில் என்ன? ப்ளாகேஸ்வரி காத்திருக்கிறாள். அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 13 draft ரெடி. ad-அ கொண்டுவாங்கப்பா, TOI மக்களே!

Thursday, November 13, 2008

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 11

"இனி எவ்வளவு நாட்கள்தான் அதே பல் இளிக்கும் மாடல்களையும், ச்சோ ச்வீட் குட்டிப்பசங்களையும், சிக்ஸ் பேக் டூட்களையும் விளம்பரங்களில் பார்த்துக்கொண்டிருப்பது? ஒரு சேஞ்ச் வேண்டாமா? விளம்பரங்கள்ள ஏதாவது புதுசா யோசிங்கப்பா!", என்று என்னைப் போல் சலித்துக் கொள்பவரா நீங்கள்? கவலை வேண்டாம் ! ( சே! எனக்கும் அதே பழைய அட்வர்டைசிங் ஸ்டைல் வருது!)

பட்ட சித்ர கதா தெரியுமா? ஆயிரம் வருட புராதன படங்கள் வாயிலாக கதை சொல்லும் கலை. காய்ந்த இலைகளிலும், துணிகளிலும் பட்ட சித்ர சித்திரங்கள் வரையப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இக்கலையின் பிறப்பிடம் ஒரிஸ்ஸா மாநிலத்தின் இரு கிராமங்கள் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அண்மைக்கால மெஷின் பெயிண்டிங்கில் காணாமல் போன அரிய கலைகளுள் ஒன்றான பட்ட சித்ரத்தை மாடர்ன் அனிமேஷன் மூலம் கண்முன் நிறுத்தியுள்ளது ஒரு விளம்பரம்.

2008 -இல் அர்ச்சுனன் வாழ்ந்திருந்தால் அவனுடைய லைஃப் இப்படிதான் இருந்திருக்குமோ? என்று நிஜமாகவே நான் நினைக்கும் வண்ணம் இவ்விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Sulekha.com க்காக JWT India-வின் கருத்தாக்கத்தில் அமைந்த விளம்பரத்திற்கு மும்பையின் ஃபேமஸ் ஹவுஸ் ஆஃப் அனிமேஷன், தங்கள் அனிமேஷன் மூலம் உயிரளித்துள்ளார்கள் .


டெக்னாலஜியையும் மிதாலஜியையும் கலந்தளித்துள்ள விளம்பரம் இதோ:



அவார்டுக்காக வடிவமைக்கப்பட்ட விளம்பரம் என்ற எண்ணம் நமக்கு வருவதை மறுப்பதற்கில்லை. எனினும் படம் பார்த்தவுடன் எங்கோ ஒரு சிறிய ஸ்மைல் முகத்தில் தோன்றுவது உண்மை.

இயக்குநர், தயாரிப்பாளர் : ஈ.சுரேஷ்

க்ரியேட்டிவ் ரைட்டர் : செந்தில் குமார்

ஹெட் ஆஃப் ப்ரொடக்ஷன்: ஷரத் ஷங்கர்

இசை : ஜாலி ஜோசப் & ஈ. சுரேஷ்

ஏஜென்சி ப்ரொட்யூசர்: மார்க் மானுவெல்

அனிமேட்டர்கள் : ஃபேமஸ் அனிமேஷன் டீம்

ஏஜென்சி : ஜே டபிள்யூ டீ இந்தியா

க்ளையிண்ட்: Sulekha.com

க்ளோபல் மார்க்கெட்டிங் டைரக்டர் : ஸ்ரீதர் பாலசுப்ரமணியன்

அக்கவுண்ட் டைரக்டர்: விஸ்வநாதன் கணேசன்

அக்கவுண்ட் எக்ஸிக்யூட்டிவ் : தனூஜா ஜெயலக்ஷமி

இப்படியெல்லாம் அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் பதிவை எழுத தூண்டும் விளம்பரங்களை உருவாக்கி adfilms-ஐ ரொம்பத்தான் மிஸ் பண்ணவைக்கறீங்கப்பா!
--------------------------------------------------------------------------------------------------------------------------Bloglines still open for விளம்பர விளையாட்டு 28 . Kollywood Kostan # 2 - It is not Anbulla Appa.

Saturday, July 19, 2008

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 10 - Mirchi Kaan awards

மிர்ச்சி கான் அவார்டு - Cannes அல்ல Kaan. Kaan என்றால் இந்தியில் காது என்று பொருள். வானொலி விளம்பரங்களுக்காகவே ப்ரத்யேகமாக அளிக்கப்படும் 5th Mirchi KAAN Awards நேற்று மும்பையில் அளிக்கப்பட்டன.

இவ்விழாவில் பல இந்தி மற்றும் ஆங்கில வானொலி விளம்பரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. என்னைக் கவர்ந்த இரு விளம்பரங்கள் இதோ:

இவ்விரு விளம்பரங்களிலுமே ஒரு similarity. ஃபேன்ஸி வாய்ஸ் ஓவர் இல்லை, complicated lingo இல்லை, தாம் தூம் ஜிங்கிள் இல்லை. ஒரு வரி மெசேஜை சிம்பிளாக தெரிவித்துள்ளனர்.

முதலில், ஒரு குறிப்பிட்ட category-யில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற விளம்பரம். வாய்ஸ் க்ளாரிடி என்ற கருத்தை neat-ஆகக் கூறியுள்ளனர். குரல் கொடுத்தவர் - என்னுடைய most favourite voice artiste நினாத் காமத்!
அடுத்து, ஒரு அற்புதமான விளம்பரம்.... உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் விழாவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற பக்தி மணம் கமழும் விளம்பரம்...மிர்ச்சி கான் அவார்டில் சிறந்த விளம்பரத்திற்கான க்ரிஸ்டல் விருதைப் பெற்ற விளம்பரம்.
விளம்பரங்கள் தொடரும்... Watch this space!

Tuesday, May 27, 2008

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 9

தொலைக்காட்சி விளம்பரத்தைவிட,வானொலி விளம்பரம் எழுதுவது கடினம். ஏனெனில், என்னைப் பொறுத்தவரை எண்ணங்களை காட்சி வாயிலாக கொண்டுவருவது எளிது... ஒரே ஒரு சிறிய ஷாட்டின் மூலம் ஒரு பொருளை எளிதாக விளம்பரப்படுத்தமுடியும். ஆனால் வானொலி விளம்பரம் என்பது சொற்கள், இசை, சவுண்ட் எஃபெக்ட்ஸ் அனைத்தையும் உள்ளடக்கியது. எண்ணங்களை ஒலி வாயிலாக வெளிப்படுத்துதல் எளிதன்று.

ஆனால் இப்போது பண்பலை வானொலி நிலையங்களின் ஒலிபரப்பப்படும் பெரும்பாலான விளம்பரங்களில் ஒரு நடிகர் /நடிகை /கிரிக்கெட் வீரரின் குரல் நகலைப் பயன்படுத்தி டீ முதல் டீவி வரை அனைத்துமே விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஏனெனில், ஒரு பிரபலத்தின் குரலைப் பயன்படுத்தினால் கேட்பவரின் கவனத்தை ஈர்த்து சொல்லவந்த கருத்தை சுலபமாகக் கூறமுடியும். ஆனால் imitate செய்யப்படும் பிரபலத்தின் குரல் original குரலோடு ஒத்துப்போவது மிக அவசியம்.

மும்பையில் குரல் மன்னர்களான சேத்தன் ஷஷிதல் மற்றும் நினாத் காமத் இருவரும் imitate செய்யாத குரல்களே இல்லை எனலாம். நம்பினால் நம்புங்கள். நீங்கள் தினமும் டிவியில் பார்க்கும் ஷாருக், அமிதாப், சச்சின், தோனி,யுவராஜ் போன்றோர் இடம்பெறும் விளம்பரங்களில் 80% இவர்கள் டப் செய்ததே.

அண்மையில் தயாரிக்கப்பட்ட லைஃப்பாய் ரேடியோ விளம்பரம் இது. லைஃப் சோப்பின் brand ambassador யுவராஜ் சிங்க். யுவராஜ்ஜின் சுட்டித்தனத்தை சமாளிக்க முடியாத அவருடைய அம்மா அவரைத் திட்ட, அம்மாவிடமிருந்து அவரை காப்பாற்ற மக்களிடமிருந்து ஐடியா கேட்கிறார் யுவராஜ் - இதுதான் விளம்பரத்தின் முதல் பகுதி.

இதன் Phase II- வாக ரஜினி, அமீர்கான், டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் யுவராஜ்ஜிற்கு ஐடியா தருகிறார்கள். யுவராஜ், டெண்டுல்கர் போன்றோருக்கு குரல் கொடுத்தவர் நினாத் காமத். இறுதியில் வரும் வாய்ஸ்-ஓவரும் அவரே. விளம்பரத்தை கூர்ந்து கேளுங்கள். ..குறிப்பாக டெண்டுல்கரின் அட்வைஸ் - இதில் அவர் endorseசெய்யும் எல்லா பிராடக்டுகளைப் பற்றி கிண்டலடிக்கிறார்கள்.அமீர்கான் நடிக்கும் படங்களில் அந்தந்த இயக்குனர்களை dominate செய்யும் அவரது வழக்கத்தையும் விட்டுவைக்கவில்லை லைஃப்பாய்.

லைஃப்பாய் விளம்பரங்கள்

ஏஜென்சி : லோ (முன்னாளில் லிண்டாஸ்)
எண்ணமும் எழுத்தும் : மனோஜ் தபாடியா

குரல்கள் : நினாத் காமத் (யூவி, சச்சின், ஆமிர் கான், வாய்ஸ் ஓவர்), விஜயராகவன் (ரஜினி)



Lifebouy - Sachin ...



Get this widget Track details eSnips Social DNA


Lifebouy - Amir Yu...

Monday, March 17, 2008

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 8

இந்த விளம்பரத்தை முதன்முதலில் பார்த்தபோது "எவன் அந்த டைரக்டர்?" என்று கத்தவேண்டும் போலிருந்தது. பின்னொரு நாளில் ஒரு நெருங்கிய நண்பர்-கம்-விளம்பர இயக்குனரிடம் இவ்விளம்பரத்தைப் பற்றி 20 நிமிடங்கள் விளாசியபிறகு "நான்தான் அந்த கலைப்பொக்கிஷத்தை இயக்கினேன்!" என்றான் அவன். "பாவி, பரதேசி... I disown you!" என்றேன் நான், சிரித்துக்கொண்டே. பிறகு, இவ்விளம்பரத்தின் நெளிவு சுளிவுகளை அக்குவேர்-ஆணிவேரா அலசினோம். ஆண்டவா!

ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து இன்று அதே கலைஞானியை சந்தித்தேன். பெளத்தாயன் முகர்ஜி - கடந்த ஆறு மாதங்களாக Little Lamb films என்று சொந்தமாக விளம்பரப்பட நிறுவனத்தை நடத்திவருபவர்தான் அந்த மாபெரும் இயக்குனர் (ஐயோ! இவர் அவர் என்று எழுதவே ஒரு மாதிரி இருக்கிறது.) இருவரும் ஏறக்குறைய 8 வருடங்களுக்கு முன் ஒன்றாக பற்பல விளம்பரங்களில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்தோம். இப்போது விசாலமான தனி ஆஃபீஸ், விளம்பர ஷோரீலில் அவருடைய இயக்கத்தில் க்வாலிடியான 10 விளம்பரப்படங்கள், 2 துணை இயக்குனர்கள் என்று அவன்(ர்?) வளர்ச்சியைப் பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. வெகு நாட்களுக்குப் பிறகு இன்று இருவரும் சந்தித்ததால் விளம்பர-வெட்டி உலகின் வெட்டிப் பேச்சுடன் பார்வை அவனுடைய ஷோரீல் பக்கம் திரும்பியது.. அதில் ஓர் விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது.

"திரும்பவும் அதே அமுல் மாசோவுக்காக விளம்பரம்...ஆரம்பிச்சிட்டியாடா? " என்றேன். விளம்பரத்தைப் பார்த்தவுடன் "இந்த விளம்பரத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸை முடிக்க எத்தனை நாள் ஆனது? பட்ஜெட் என்ன?" என்ற என்னுடைய Nagging கேள்விக்கு பதிலளித்தான் சிரித்துக்கொண்டே! "இவ்விளம்பரத்தின் ஒரு ஷாட்டிற்குக் கூட எஃபெக்ட்ஸ் யூஸ் பண்ணலை, எல்லாமே ரியல் people.. er.. almost people" என்றான். "Whattttt? you must be kidding" , இது நான். அதே பிரமிப்புடன் இந்த பதிவை எழுதுகிறேன்.

Saints & Warriors - விளம்பர ஏஜென்சியின் கருத்தாக்கத்தின் விளைவுதான் இந்த அமுல் மாசோ பகுதி 2. ஸ்டோரி போர்டு கையில் கிடைத்தவுடன் இயக்குனர் தொடர்புகொண்டது இவர்களைத்தான். கூடவே, மனித குரங்குகளின் ஆக்ஷன்களை தன் அஸிஸ்டென்ட்ஸ் உதவியுடன் படம்பிடித்தார் இயக்குனர். அந்தப் பதிவு உடனடியாக குவாலாலம்பூர் அனுப்பப்பட்டது.

படப்பிடிப்பிற்கு எடுத்துக்கொண்ட நாட்கள்: மூன்று. ஒராங்குடான்களின் பயிற்சிக்காலம் : ஐந்து வாரங்கள். இரண்டே இரண்டு ஒராங்குடான்களை டூப் போட்டு ஐந்தாக்கிவிட்டார் இயக்குனர். ஒராங்குடான்களின் பயிற்சியாளர்கள் இருவர் - 'The good trainer' and 'the bad trainer'. அதாவது பயிற்சியின்போது சொல்பேச்சுக் கேட்காத ஒராங்குடான்களை திட்டுவார் bad trainer. உடனே ஒராங்குடான்கள் good trainer-ரிடம் "அவரு திட்றாரு..." என்று கம்ப்ளெயிண்ட் செய்ய, உடனே good trainer, "என் செல்லம்ல நீங்க... நான் bad trainer-அ 'பாத்துக்கறேன்'.. இப்ப நீங்க சமர்த்தா ஆக்ட் பண்ணுங்க....நான் உங்களுக்கு தின்ன எதாவது தர்றேன்" என்பாறாம். உடனே இரண்டும் சமர்த்தாக நடித்துக்கொடுக்குமாம். கேட்கவே வேடிக்கையாக இருக்குல்ல? இவ்விளம்பரத்தின் ஒளிப்பதிவாளர், அர்விந்த் கண்ணபிரான், மை பிரதர் நிகில் போன்ற படங்களை படம்பிடித்தவர் ஆவார்.

இவ்விளம்பரத்தின் ஹீரோக்கள் இருவருமே ஹீரோயின்கள்.. ஹி.. ஹி.. புரியலையா? ரெண்டுமே female orangutans. ஆண் ஒராங்குட்டான்கள் ரொம்ப wild, மேய்ப்பது கடினமாம். அதனால் இருவரில் ஒருவரை அலங்கார பூஷணியாக்கிவிட்டு மற்றொன்றிக்கு போஸ்ட் புரொடக்ஷனில் கொஞ்சம் கலர் ஏற்றி மெருகூட்டியுள்ளார்கள். பெளத்தாயன் முகர்ஜியின் மனதில் ஸ்டோரி போர்டு, எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்துமே தெள்ளத் தெளிவாக இருந்ததால், பல NG [Not good / not granted] டேக்குககளையும் ஒ.கே-வாக்கினார் அவர். உதாரணத்திற்கு ஒராங்குடான் கையை கீழிருந்து மேலுயர்த்தும் காட்சி ஒன்று ஒ.கே-ஆனது. அதை உல்டா செய்து ரிவர்ஸ் ஷாட்டில் மேலிருந்து கீழ்வருமாறு செய்த்துள்ளார். விளம்பரம் படம்பிடிக்கப்பட்ட இடம் : குவாலாலம்பூரிலிருந்து இரண்டு மணி நேரம் தொலைவிலுள்ள மலாக்கா. சரி, குரங்குகளின் சேட்டை விளம்பரத்தை இப்ப பார்க்கலாமா?

btw, இந்த ஒராங்க்குடான்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்கிறீர்களா? கேதரின் ஜீட்டா ஜோன்ஸ் - வீசா விளம்பரம்.. ஞாபகம் வருதா? அவரோடு நடித்த மரீனாதான் இருவரில் ஒரு அழகி. மரீனா இருக்க சனா கான் எதுக்கு?

PS # 1: வெகு நாட்களுக்குப் பிறகு தமிழில் பதிவு... மனநிறைவு!

PS#2: விளம்பரங்களைப் பற்றிய பதிவு எழுத எழுத ஒன்று நன்றாக விளங்கியது... ஐ வாண்ட் டு கெட் பேக் டு அட்வர்டைஸிங் ஃபிலிம்ஸ்.

Wednesday, October 03, 2007

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட்7

சிறுவயதில், நாம் எல்லோருக்குமே சாப்பாட்டில் எதாவது ஒரு அயிட்டத்தின் மேல் அலாதி பிரியம் உண்டு. என்னைப் போன்ற சாப்பாட்டு ராமிகளுக்கு சிறுவயது என்றில்லை... ஒரு அயிட்டம் என்றில்லை.. இப்பொழுது கூட.. பற்பல ஃபேவரைட் அயிட்டம்ஸ் உண்டு. என் ஐந்து வயது nephewவிற்கு ஒரு காலத்தில்(!) தோசை என்றால் கொள்ளை ஆசை- காலை, மாலை, இரவு நேரம் பாராமல் சதா "தோசே தோசே" என்பான். பின்பு 'தோசே' ' பாஸ்தா உப்புமாவிற்கு' [சேமியா உப்புமா] விட்டுக்கொடுத்தது. இன்றைய தேதியின் ஃபேவரிட் என்ன என்பது அவனுக்கே வெளிச்சம்.

இந்த அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 7 - இன் கான்செப்ட் சின்ன குழந்தைகளின் ஃபேவரிட் ஃபுட் அயிட்டம் இவைகளைக் கொண்டு அமைக்கப்பட்டதுதான்.

ஹார்லிக்ஸ் - பொதுவாக ஹார்லிக்ஸ் என்றாலே ஹாஸ்பிடல், உடல் நலமின்மை, அந்த டப்பா மூடியை வாங்கி வர மனைவிமார்கள் கணவன்மாரை நச்சரிக்கும் மலராத நினைவுகள் மட்டுமல்ல - ஹார்லிக்ஸ் அட்வர்டைஸ்மென்டும்தான் நினைவிற்கு வரும். "குடிக்கவேண்டாம் அப்டியே சாப்பிடுவேன்".. அந்த குட்டிப் பையனின் மழலை டயலாக் நினைவிருக்கிறதா? "மனூ... நான் ரொம்ப பிஸீ...." - அந்த சுட்டிப் பையன் மட்டுமா? அம்மாவாக நடித்த த்ரிஷாவும்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். இப்படி ஹார்லிக்ஸ் விளம்பரங்கள் எல்லாமே நம் நினைவில் நீங்கா இடம்பிடித்துவிட்டன.

ஹார்லிக்ஸைவிட ஜூனியர் ஹார்லிக்ஸ் விளம்பரங்கள் படு பாப்புலர். சாப்பிடப் படுத்தும் சுட்டிப்பையன்களை மையமாக வைத்து படு அமர்க்களமாக, துள்ளலாக இந்த விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. லேட்டஸ்டாக தற்போது டிவியில் வந்து கொண்டிருக்கும் ஜூனியர் ஹார்லிக்ஸ் "N for நூடுல்ஸ்" விளம்பரம் மிகப் பிரபலமாகிவிட்டது.

மூன்று வயது சிறுவன் ஒருவன் ஃபரிட்ஜைத் திறந்தவாரே "நூடுல்ஸ் எங்கே?" என்கிறான். வீட்டிலுள்ள கேஸரோல்கள் எல்லாவற்றையும் திறந்து "நூடுல்ஸ் எங்கே?" என்கிறான் அம்மாவை செல்லமாக கோபித்துக் கொண்டே! அம்மா துருவும் சீஸைப் பார்த்து "நூடுல்ஸ்!!" என்கிறான்.அம்மாவின் என்ட்ரி..."மனுவுக்கு இப்ப நூடுல்ஸ் மேல ஆசை வந்தாச்சு..." என்கிறாள். "N for Noodaaals" -இது நம்ம ஹீரோ மனு. ஆரஞ்சு சுளையை உரிக்கிறான்..நூடுல்ஸை தேடி... "இப்படி நூடுல்ஸ் சாப்பிட்டா ஆரோக்கியம் எப்படி கிடைக்கும்? அதனாலதான் ஜூனியர் ஹார்லிக்ஸ்" என்று பிராடக்டைப் பற்றிக் கூறுகிறாள் அம்மா. பின்பு ஜுனியர் ஹார்லிக்ஸில் உள்ள இத்யாதி இத்யாதி போன்றவை விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஸ்வெட்டர் பின்னும் அம்மா எடுக்கும் உல்லன் நூலைப் பார்த்து "நூடுல்ஸ்!!!!!" என்று ஆரவாரிக்கும் மனுவை அம்மா அணைக்க படம் முடிகிறது.

ஒரு படம் - அது 3 மணி நேரப்படமோ, 30 வினாடி விளம்பரப்படமோ - நாமறிந்த யாரையோ, குறிப்பாக குழந்தைகளை நினைவுறுத்தினால் அது கண்டிப்பாக ஹிட்டுதான். இந்த ஜூனியர் ஹார்லிக்ஸ் விளம்பரம் என்னை என் 'தோசே-பாஸ்தா உப்புமா-cereals' nephew-வை ஞாபகப்படுத்துகிறது. எந்த கருத்தையுமே இன்ட்ரெஸ்டிங் visuals-ஆக சொன்னால்தான் மனதில் நிற்கும். ஒரு குட்டி நாய் ஒரு மொபைல் நிறுவனத்தின் டேக்-ஒவர் - பெயர் மாற்றம் எல்லாவற்றையும் விளம்பரத்தில் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டிப்பையன் ஒரு particular ஃபுட் அயிட்டத்தை மட்டுமே சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கிறான். ஆனால் அதையே சாப்பிட்டால் சத்து கிடைக்காதே.. அதனால்... ஜூனியர் ஹார்லிக்ஸ். இந்த ஒரே Beverage- இல் உள்ள பல சத்துக்கள்
குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் என்கிற கருத்தை இன்ட்ரெஸ்டிங்காக , குட்டிக் குழந்தையின் சேட்டையுடன் நமக்கு வழங்கியுள்ளனர்.

இந்த விளம்பரத்தை தயாரித்தவர்கள் ப்ளாக் மேஜிக் மோஷன் பிக்சர்ஸ் ப்ரைவேட் லிமிடெட்(BMMP). இயக்கியவர் அவர்களின் ஆஸ்தான இயக்குனர் பெளத்தாயன் முகர்ஜி. BMMP- இல் உதவி இயக்குனராக சேர்ந்து பற்பல விளம்பரங்களில் அபிஜித் சவுத்ரி- அர்ஜுன் கெளரிசாரியா இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி கடந்த சில வருடங்களாக அவருடைய சொந்த பாணியில் பல விளம்பரங்களை தனித்து இயக்கி வருகிறார்.

இந்த விளம்பரத்தின் ஹீரோ - மனுவாக நடித்த ஆரியன் ஃபெர்னான்டஸுக்கு இதுவே முதல் படம். மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு அண்மையில் குடிபெயர்ந்தது இந்த மூன்று வயது வாண்டின் குடும்பம் . படப்பிடிப்பிற்கு முன்னரே இயக்குனருடன் இரண்டு வெவ்வேறு நாட்களில் rehearsal செய்தாராம் இந்த குட்டி ஹீரோ. இயக்குனர் வீட்டில் நடந்த ஒரு rehearsal இன் போதுதான், இயக்குனரின் 3 வயது மகள் ஆர்ஷா முகர்ஜியுடன் பயங்கர ஜிகிரியாகிவிட்டார் ஆரியன். அதனால் படப்பிடிப்பின்போது ஆரியனை நல்ல மூடில் வைக்க இயக்குனர் தன் மகள் ஆர்ஷாவையும் செட்டிற்கு அழைத்து வந்து அவனுடன் விளையாட வைத்தார். இப்படப்பிடிப்பு மும்பையின் க்ரீன் கிஃப்ட் பங்களாவில் மூன்று நாட்கள் நடைபெற்றது. மூன்று நாட்களும் ஆரியன் சமர்த்தாக இயக்குனர் சொல்படி கேட்டு அழகாக ஒரு professional-ஐ போல் நடித்துக் கொடுத்தான். இந்த புகழ் ஆரியனுக்கு மட்டுமல்ல டப்பிங் செய்த ஷ்ரே எனும் குட்டிப்பையனையும் சேரும். ஷ்ரேவும் இந்த விளம்பரத்தில் நடிக்க shortlist செய்யப்பட்டவர்களுள் ஒருவன். ஆனால் இறுதியில் நடிக்கும் வாய்ப்பு ஆரியனுக்குக் கிடைத்தத

விளம்பரத்தின் கருத்தாக்கம் : JWT, தில்லி. ஒளிப்பதிவாளர் : கார்த்திக் விஜய். ஆர்ட் டைரக்டர்: ஷேகர் & ரிச்சர்டு. படத்தில் மனுவின் obsession நூடுல்ஸ் என்பதால் சைனீஸ் ஸ்டைலில் இசையமைத்தவர் கனிஷ்கா.

இந்தி, பெங்காலி மொழிகளில் விளம்பரத்தில் வரும் குட்டிப் பையனின் on-screen பெயர் 'தோஜோ' . மேலும் அவனுக்குப் பிடித்த சாப்பாடு அயிட்டம் 'செளமீன்' என்கிற நூடுல்ஸ். தமிழிலும் இன்ன பிற தென்னிந்திய மொழிகளில் செளமீன் என்றால் familiar ஆக இருக்காது என்பதால் அதை N for நூடுல்ஸாக தென்னிந்தியைஸ் செய்துள்ளனர்.

ம்ம்ம்... இந்த விளம்பரத்தின் தமிழ் பிரதி என் இன் - பாக்ஸில் கிடைக்க பல நாட்களாகும் என்பதால், ஜுனியர் ஹார்லிக்ஸின் பெங்காலி விளம்பரம் இங்கு இடம்பெறுகிறது. மலையாள காப்பி இவ்விட . மனுவாக இருந்தால் என்ன, தோஜோவாக இருந்தால் என்ன... குட்டிப்பையனின் கிள்ளை மொழியை ரசிக்க is language a barrier?




ps : விளம்பரத்தின் தமிழ் பிரதி கிடைத்தவுடன் ஒரு update போடுகிறேன்

Thursday, August 16, 2007

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட்6

ரொம்....ப... நாட்களாக இந்த விளம்பரத்தைப் பற்றி இந்தப் பகுதியில் எழுதவேண்டும் என்று ஆசை என்றாலும் நல்லதொரு தருணத்திற்காக, வெகு நாட்களாக காத்திருந்தேன். அந்த நல்ல தருணம் என்று நான் சொன்னது விளம்பர உலகின் கான்ஸ் லயன்ஸ் விருது அறிவிக்கப்படும் நேரம்தான்.


இந்த வருடம் இந்தியாவின் எதிர்பார்ப்பெல்லாம் இந்த விளம்பரம் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்பதே. இந்தியாவில் பற்பல அட்வர்டைஸிங் அவார்டுகளை அள்ளிக்குவித்த அந்த விளம்பரம்தான் Happydent. 8 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஒரு விளம்பரம் கான்ஸ் ஃபிலிம் லயன்ஸ் விருதை வென்றுள்ளது. சில வருடங்களுக்கு முன், சோனி எரிக்ஸனின் "One black coffee" விளம்பரம் கான்ஸ் ஃபிலிம் லயன்ஸ் வென்றது.

பளபளக்கும் வெண்மை பற்களைக் காண்பிக்க இதுவரை ஒரே வழிதான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. விளம்பரப்படுத்தப்படும் பொருளை பயன்படுத்திய பின்னர், காமிராவின் முன், மாடல் "ஈஈஈ.. " என்று பள்ளிளிக்கும் புராதன முறைதான் அது. ஆனால் இதே கருத்தை மையப்படுத்தி, Happydent என்கிற சூயிங்கம் தயாரிக்கும் பெர்ஃபெட்டி என்கிற க்ளையண்டிற்காக மெக்கான் எரிக்ஸன் விளம்பர நிறுவனம் வடிவமைத்த விளம்பரம் சென்ற வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த 80 செகண்ட் விளம்பரத்தில் வேட்டி, டர்பன் அணிந்த ஒருவன் பரபரப்பாக சைக்கிளில் சென்று கொண்டு இருக்கிறான். அவனுடைய டயர் நதியில் விழுந்துவிட, அது வழியாக செல்லும் காரில் லிஃப்ட் கேட்கிறான். "முஸ்குராலே, ஜக்மகாலே" என்ற பாட்டு (jingle) ஒலிக்கிறது. அந்த காரின் முன் இருக்கும் ஹெட் லைட்டிற்கு பதில், இரு மனித லைட்டுகள் இருப்பதைக் காண்கிறோம்.

கார் லிஃப்ட் தர மறுக்கிறது. நம் ஹீரோ தன் ஓட்டத்தைத் தொடர்கிறார். வழி நெடுக, பற்பல லாம்ப் போஸ்டுகள். எல்லாவற்றிலும் லைட்டுகளுக்கு பதிலாக மனித விளக்குகள். ஸ்விம்மிங் பூல், டென்னிஸ் கோர்ட் அதே போல் விளக்குகளாக மனிதர்கள்.

அவன் அரண்மனையினுள் நுழைகிறான். அங்கும் மனிதவிளக்குகள். மூச்சிரக்க, பால்கனி வழியாக ஷாண்டிலேரை (chandelier) எட்டிப்பிடிக்கிறான் அவன். ஷாண்டிலேரில் தொங்குகிற அவனுடன் பலர் ஏற்கனவே தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த ஷாண்டிலேரின் கீழ் ஒரு டைனிங் டேபிளில் தூங்குமூஞ்சி மகாராஜா சாப்பிடத் தயாராக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

உடனே நம் ஹீரோ, கடகடவென சூயிங்கம்மை எடுத்து வாயினுள் போட்டு மென்று ஒரு பெரிய்ய்ய புன்னகையை உதிர்க்கிறான்.அந்த புன்னகையே ஹெட் லைட்டாக அமைய பாட்டும் "தேரா தில் ரோஷன், தேரா மன் ரோஷன்" என்று ஹை டெம்போவில் கேட்க, ஊரிலுள்ள மற்ற மனித பல்புகளும் எரிய ஆரம்பிக்கின்றன.. பேக்ரவுண்டில் நகரம் முழுதும் வெளிச்சமயாய் பிராடக்ட் தெரிகிறது. வாய்ஸ் - ஓவர் "ஹேப்பி டென்ட் வைட் சூயிங்கம்" என்று சொல்ல படம் முடிகிறது.

சூயிங்கம் என்பது 14 வயதுக்கு கீழ் உள்ளோர் மட்டுமே பயன்படுத்தவது, வாய் துர்நாற்றத்தை போக்குவதே அதன் வேலை - இவ்விரண்டு perceptionகளை மாற்றுகிறது இந்த campaign.Happy Dent குழந்தைகளுக்கான Product மட்டும் இல்லை. பற்களின் சுகாதரத்தை ஜாலியாக,interesting-ஆக கூறுகிறது இந்த விளம்பரம்.

நவரசங்களில் ஒன்றான அற்புதத்தை வெளிப்படுத்துகிறது இந்த விளம்பரம்.
பார்த்தவுடனேயே "ஆஹா...இது வித்தியாசமா இருக்கே!" என்று கூற வைக்கிறது. Happy Dent என்கிற பிராண்டை நினைவில் வைக்க ஒரு different-ஆன creative.

மின்சாரமற்ற ஒரு கற்பனை உலகில் அமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மும்பை அருகிலுள்ள பன்வேல் எனுமிடத்தில் படம்பிடிக்கப்பட்டது. முதற்காட்சியில் தோன்றும் பாலம் முதற்கொண்டு எல்லாமே 'செட்'தான். விளம்பரத்தின் இயக்குனர் ராம் மாத்வானி, தயாரிப்பு: ஈக்வினாக்ஸ் ஃபிலிம்ஸ். படம்பிடித்தவர்: அனில் மெஹ்தா.

இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ஸ்பெஷலாக 20 அக்ரோபேட் கலைஞர்கள் மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். படப்பிடிப்பிற்கு பல நாட்களுக்கு முன்னரே அவர்களுக்கு காட்சியமைப்பின்படி பயிற்சி அளிக்கப்பட்டது. இவற்றிற்கெல்லாம் முன்பாக, இந்த விளம்பர படப்பிடிப்பின் முதற்கட்டமாக ஒரு Story board வரையப்பட்டது. அந்த Story boardஇன் சில ஃப்ரேம்களை இங்கே .jpeg களாக இணைத்துள்ளேன். மேலே நீங்கள் காணும் ஃபோட்டோ அந்த கலைஞர்கள், ஷாண்டிலேரின் திடத்தை பரிசோதிக்க அதில் தொங்கி பயிற்சி செய்தபோது எடுக்கப்பட்டது.

ஸ்டோரி போர்ட், கலைஞர்கள் பயிற்சி, செட் அமைப்பு போன்றவை தவிர்த்து, நடிகர்களுடைய உடையலங்காரம் போன்றவையும் வரைபடமாக, படப்பிடிப்புக்கு வெகு நாட்களுக்கு முன்னரே தயார் நிலையில் இருந்தது. படத்திற்கு இசையமைத்தவர் விளம்பர உலகில் பிரபலமாக விளங்கும் ஷாந்தனூ மொய்த்ரா. இவர் ப்ரினீதா, ஏகலவ்யா போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர். இந்த விளம்பரத்தின் பாடலாசிரியரும் இவரே. கைலாஷ் கேர், ப்ரசூன் ஜோஷி, ப்ரணவ் பிஸ்வாஸ் - உடன் இந்த ஜிங்கிளை மொய்த்ரா பாடியும் உள்ளார். 'சூஃபி' இசை வடிவில் ஜிங்கிள் அமைக்கப்பட்டுள்ளது." 'சூஃபி' இசைக்கு 'லாஜிக்' கிடையாது. It is mystical. அதனால்தான் பாடலை சூஃபி இசையாக வடிவமைத்தோம்," என்று இந்த விளம்பரத்தை கருத்தாக்கம் செய்த McCann Erickson விளம்பர நிறுவனத்தின் Creative director ப்ரசூன் ஜோஷி குறிப்பிடுகிறார்.

'ஸ்வீட் ஃபூட்ஸ் & ஸ்நாக்ஸ்' உபபிரிவில் கான்ஸ் சில்வர் லயனை வென்றதோடு மட்டுமின்றி சிறந்த இசையாக்கத்திற்கான வெண்கலத்தை வென்றுள்ளது இவ்விளம்பரம்.

இந்த விளம்பரம் அட்வர்டைஸிங் உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் actual consumer -ஆகிய உங்களில் எவ்வளவு பேரை Happydent வாங்கச் செய்தது இந்த விளம்பரம்? இது தமிழ் சேனல்களில் இடம்பெறாத விளம்பரம் என்பதை நினைவில் வைத்து, மற்ற சேனல்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்திருந்தால் சொல்லுங்கள்.

விளம்பரத்தை பார்த்ததேயில்லையா? யூடியூப் இருக்க கவலையேன்?


ஹேப்பி டெண்ட் ...ஸ்மைல் ப்ளீஸ்!


Friday, June 22, 2007

Holi

ஓர் காலைப் பொழுதில் "ஹரே ராம்" சொல்லிக் கொண்டே எழுந்திருக்கும் தாத்தா பழைய மர்ஃபி ரேடியோவை ஆன் செய்கிறார். ஹோலி பற்றிய பாட்டு ஒலிக்கிறது. அதை கேட்டு அந்த ஹாஸ்டலின் ஒவ்வொரு ஸ்டூடண்டும் மெதுவாக எழுந்து கொள்கின்றனர். வண்ணங்களை கையில் அள்ளுகின்றனர்...பலூன்களில் கலர் நிரப்பி, ஒருவர் மேல் ஒருவர் வண்ணமடித்து,ஹோலி விளையாடுகின்றனர்.
பிச்காரி எனப்படும் பிஸ்டனில் கலர் தண்ணீர் நிரப்பி வானத்தில் பீய்ச்சடிக்கிறான் சிறுவன். அது தன்மேல் வந்து வீழ அவனுக்கு ஒரே சந்தோஷம். தாடி தாத்தாவையும் விட்டு வைப்பதில்லை சிறுவர்கள். அவர் மேல் வண்ணத்தை அப்பி, அவரை நெகிழச் செய்கின்றனர். பால்காரர் கொண்டுவரும் பாலிலும் கலர் கலவை.. கொண்டாட்டம். சூடாக சமைக்கப்படும் கரஞ்சியை நுகர்கிறான் சிறுவன். கேட்கவேண்டுமா? ஒரு கை கரஞ்சியை எடுக்கிறது. அனைவரும் சுவைக்கின்றனர்.

ஹோலி கொண்டாட்டம் முடிய,பாட்டும் முடிகிறது. சிறுவர்கள் ஷவரில் சந்தோஷமாக கும்பலாக குளிக்கும் காட்சி. கலர் நிறைந்த புத்தகத்தை, படிகளை , ரோடியோவை சுத்தம் செய்கிறார் தாத்தா... அவர் சுத்தம் செய்யச் செய்யத்தான் தெரிகிறது... [படம் பார்க்க ]


இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் இதன் இசை. விளம்பரப் பட இசையின் ஜாம்பவான் ஜுக்கு என்கிற ரஜத் டோலாக்கியா இதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் எதைப் பற்றியது, என்ன சொல்ல வருகிறது என நாம் யோசிக்க ஒரு வினாடி கூட நம் கவனத்தை திசை திருப்பாமல் இசையும், வரிகளும் நம்மை கட்டிப் போடுவது உண்மை. கலர் கான்வாஸை வண்ணமயமாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர். அமிதாபா சிங். எடிட்டிங்கும் சிறப்பாக உள்ளது.
படம் முடியும் தருவாயில் அந்த சிறுவன் தாத்தாவைக் கேட்கும் கேள்வி, நெகிழ்ச்சி. நடித்த தாத்தா, பால்காரர் இருவரைத் தவிர மற்ற சிறுவர்கள் எல்லோரும் மும்பை தாதரில் உள்ள கமலா மெஹ்தா பள்ளியில் படிப்பவர்கள்.
இவ்வருட விளம்பர கான்ஸ் ஃபெஸ்டிவலில் கான்ஸ் ஃபிலிம் லயன்ஸின் உபபிரிவான Fund raising and appeal பிரிவில் இக்குறுவிளம்பரப் படம் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. தயாரிப்பாளர்கள் கோட் ரெட், இயக்குனர்கள் கஜ்ராஜ் ராவ் & சுப்ரத் ரே, எழுதிய மனீஷ் பட் மற்றும் ரகு பட் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ebai@vsnl.net க்கு உடனே ஈமெயில் செய்யுங்கள்.

Tuesday, June 12, 2007

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 4

தன் பேண்ட் லூப்பில் ஒரு வாட்சை மாட்டிக்கொண்டு எங்கேயோ கிளம்பிக் கொண்டிருக்கிறான் ஒருவன். வழியில் தலைகீழாக நின்றுகொண்டு அவனையே பார்க்கின்றனர் பல இளம் பெண்கள். அவர்களை வினோதமாகப் பார்த்துக்கொண்டே நடக்கிறான் அந்த இளைஞன். கடைசி ஷாட்டில் "What's the time yaar?" என்று தலைகீழ் நின்றபடி ஒரு பெண் இன்னொரு தலைகீழ் பெண்ணிடம் கேட்கிறாள். அப்போதுதான் உரைக்கிறது அவனுக்கு, எல்லோர் பார்வையும் அவன் ஃபாஸ்ட்ராக் வாட்ச் பக்கம் என்று.

இந்த விளம்பரத்தில் எனக்கு பிடித்தது.. you guessed it right.. அந்த எல்.ஆர்.ஈஸ்வரி ஸ்டைல் Soundtrack தான். "உலகமே மாறிப் போச்சு.. மாறிப் போச்சு.. " என்பதிலிருந்து Product tagline "ஹவ் மெனி.. ஹவ் மெனி.. ஹவ் மெனி.."என்ற rephrase.. ஆடிமாசத்தில் கோவிலில் ஒலிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் போல்...இலந்தப் பயம்.. இலந்தப் பயம் பாடல் போல்.. கலக்கிட்டீங்க!

ஒரு தமிழ் பாடலை ஓரு pan indian விளம்பரத்திற்கு sound track -ஆக பயன்படுத்தியது இதுதான் முதன்முறைன்னு நினைக்கறேன். By the way, ஜூனியர் ஹார்லிக்ஸின் ஃபேமஸ் "இபாங், ஒபாங், ஜபாங்" பெங்காலி மொழின்னு உங்களுக்கு தெரியுமா?

ஃபாஸ்ட்ராக் விளம்பரம் இதோ! என்ஜாய்!

Friday, May 25, 2007

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட்3



"தொங்கம் தொங்கம் தோயே.. தொங்கம் தொங்கம் தோயே... "
இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.. ஆனா என்ன மொழின்னு யோசிக்கறீங்களா?இது அன்டார்டிகாவுல எஸ்கிமோஸ் பேசற Language தான்.

போன வருஷம் ஒரு Happy Dent ன்னா இந்த வருஷம் ஒரு Hutch (eskimo). அது எப்படிதான் இந்த Hutch ஆளுங்க மட்டும் இப்படி யோசிச்சு அத நல்லா execute உம் பண்ணிடறாங்களோ தெரியல

  • Shots of Chinki looking men , children in heavy winter outfits - filmed at various locations on the boat, on the road, climing etc.
  • Cut to a shot of an old man with a mobile looking bewildered as he sees these Chinki people around him at home.
  • Cut to product window
  • Cut to old man smiling


இப்படி சிம்பிளா ஒரு ஸ்க்ரிப்டை பாத்தா, இதுல என்ன பெரிசா இருக்குன்னு சொல்லத் தோணும்.. அதை execute பண்ண விதத்தைப் பாருங்க

நல்ல சினிமாட்டோகிராஃபி, நல்ல Casting..குறிப்பா அந்த கிழவர். எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த மும்பை பாண்டூ சொறிஞ்சிகிட்டே விடற லுக்கு... அந்த பனியன் கிழவர்.. எல்லாமே ரியல் மக்கள் (Non actors) ன்னு நெனைக்கறேன்.

அப்புறம் ofcourse அந்த Soundtrack தொங்கம் தொங்கம்... அட அட அட.. அசத்திட்டீங்க போங்க.. பிடிங்க.. அடுத்த வருஷம் பற்பல அவார்ட்ஸ் உங்களுக்குத்தான்!!

இந்த அட்வர்டைஸ்மென்டோட இன்னொரு எடிட்.

Monday, December 11, 2006

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 2


அபிநய் தியோ டைரக்ட் செய்தது, 'லோ'-Lowe [முன்னாளில் லிண்டாஸ்] விளம்பர நிறுவனத்தின் க்ரியேட்டிவிடியில்.

பசங்க ரெண்டு பேரும் பாத்ரூமில், ஸ்விம்மிங் பூலில், கிரிக்கெட் கிரவுண்டில், சீசாவில் விளையாடிக் கொண்டடே பேசுவது அழகு.

காஸ்டிங் அற்புதம். படம்பிடித்த விதமும் சூப்பர். என்ஜாய்!

Sunday, December 03, 2006

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 1

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் - 1 -Rudaali

தொலைக்காட்சி விளம்பரங்கள்ள யாராவது இறந்த மாதிரி காட்டினாங்கன்னா, அது ஒரு காமெடி விளம்பரமாத்தான் இருக்கும்.
உதாரணத்துக்கு எம்சீல், ரோமா விளம்பரங்கள்.

சமீபத்துல வெளிவந்த விளம்பரங்கள்ள எனக்கு பிடிச்சது இது.
சோகமான ஆரம்பம்.. சுவையான, சுகமான முடிவு. என்ஜாய்!