Friday, May 19, 2006

ஜகஜ்ஜால கில்லாடிகள்-VI

ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ஜெ.எஸ் ஃபிலிம்ஸ், ராஜீவ் மேனன் புரொடக்ஷன்ஸ், இந்த மாதிரி விரல் விட்டு எண்ணக் கூடிய ரொம்ப சில விளம்பர இயக்குனர்கள்தான் சென்னையில இருந்தாங்க. ஆனா 2000 க்கு அப்புறம் மள மள-ன்னு இந்த எண்ணிக்கை வளர்ந்து, இப்ப க்வாலிட்டியா மும்பை முன்னணி விளம்பர இயக்குனர்கள் ரேஞ்சுக்கு விளம்பர தயாரிப்புல சென்னை ஆளுங்களும் சக்கை போடு போடறாங்க. அப்படிப்பட்ட தில்லாலங்கடியில ஒருத்தர்தான் ரோஷ்னி சந்திரன்...நம்ம ஜகஜ்ஜால கில்லாடி லேடி...விளம்பர ராணி... இது நான் அவங்களுக்கு வச்ச பேரு இல்ல. குமுதம் 3ஆம் மே இதழ்ல 86 ஆம் பக்கம் ரோஷ்னி பத்தி எழுதிருக்காங்க. அங்கிருந்து சுட்டதுதான் இந்த போஸ்டின் ஒரு பகுதி [படத்தில்: ரோஷ்னி]

லயோலவுல விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு, ராஜீவ் மேனன்கிட்ட அசிஸ்டென்டா அஞ்சு வருஷம் வேலை செஞ்சாங்க. "ராஜீவ் மேனன் அவருடைய அசிஸ்டென்ட்ஸ நம்பி பொறுப்பை ஒப்படைப்பார். அதனால துணை இயக்குனர்கள் தாமாகவே ஒரு வேலையை செஞ்சு முடிக்கற துணிச்சல் வரும்",ன்னு சொல்றாங்க ரோஷ்னி. "தப்பு பண்ணினாதான் தவறுகள் மூலமா கத்துக்க முடியும்", ன்னு ரரஜீவ் சொல்லுவாறாம். ரோஷ்னி அஞ்சு வருஷம் நல்லா வேலை கத்துகிட்டு, தனியா டைரக்ட் செய்ய முடியும்ங்கிற நம்பிக்கை வந்த பிறகு 'பிரைமரி கலர்ஸ்' ங்கிற புரொடக்ஷன் கம்பெனியை திறந்தாங்க. ராஜீவோட துணை ஒளிப்பதிவாளரா பணி புரிஞ்ச பாஸ்கரை திருமணம் செஞ்சுகிட்டு ஒரு 2 1/2 வயசு தேவதைக்கு அம்மாவாகவும், திறமையான இயக்குனர்ங்கிற பேரோட விளம்பர படங்களும் இயக்கிகிட்டு இருக்காங்க.

Posted by Picasaஇப்பல்லாம் புடவை வாங்கிற எல்லா அம்மணிகளும் வாங்கிறதுக்கி ஒரு ஒரு மாசம் முன்னாடிலேர்ந்தே தங்க சினேகிதிங்க, உறவுக்காரங்க, முக்கியமா அவங்கவங்க புருஷமார்கள் கிட்ட "எந்த கலர்? எந்த கலர்?" ன்னு ஒரே நச்சரிப்பாம். புருஷனுங்க எல்லாரும் "அது யாருப்பா ஜோதிகாவ வெச்சு "எந்த கலர்? எந்த கலர்?" ன்னு டிவியில தடுக்கி விழுந்தா விளம்பரம் பண்றதுன்னு தேடிகிட்டு இருக்காங்களாம். அய்யாக்களே! அது ரோஷ்னிதான்! மதர்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே, ரோஸ் டே, மல்லி டே மாதிரி நாட்களுக்கெல்லாம் கூட புடவை வாங்கலாம்னு ஐடியா குடுக்கறீங்களே ரோஷ்னி, இது நியாயமா?

இதே மாதிரி சில வருஷங்களுக்கு முன்னாடி எல்லா தமிழ்நாட்டு அம்மாக்களும் தங்க பொண்ணுங்களுக்கிட்ட "குளிக்காத! .. மீரா இல்லைன்னா குளிக்காத!" ன்னு ஒரே ரகளை! ஞாபகமிருக்கா? அந்த ரகளைக்கு காரணம் ரோஷ்னிதான்.
ரோஷ்னியோட வெற்றியின் ரகசியம் பொறுமைதான்னு அவங்க நம்பறாங்க. வெகு சில பெண்கள் மட்டுமே விளம்பர டைரக்டரா இருக்காங்க. பெரும்பாலான்வங்க, அவங்க கணவன் டைரக்ட் பண்ற விளம்பரங்களுக்கு புரொட்யூசரா மட்டுமே இருக்காங்க. ஏன்னா விளம்பர டைரக்டருக்கு பொறுப்புகள் ஏராளம். மாடல்ஸ், காஸ்டியூம், பிராபர்டி, பேக் ஷாட், விளம்பர ஏஜென்சி 'கவனிப்பு' ன்னு ஏகப்பட்டது இருக்கு.இதோட குடும்ப பொறுப்புகளும் சேர்ந்து மானேஜ் பண்றது சுலபமில்ல. அந்த விஷயத்துல எல்லாத்தையும் திறம்பட பொறுமையா செய்யறாங்க ரோஷ்னி.

"விளம்பரத்துறையில் நுழையும் பெண்கள் 'அம்மா திட்டறாங்க' ன்னு பாதியிலே போயிடறாங்க"ங்கிறது ரோஷ்னியோட ஆதங்கம். 'பொறுமையா வேலை பாத்தா விளம்பரத்துறையில பெண்கள் அசத்தலாம்" என்பது அவங்க கருத்து.

திறமை, பொறுமை இந்த இரண்டு முக்கியமான குணங்களோட gifted ரோஷ்னி, இன்னும் 2-3 வருஷத்துல இந்தியாவின் முன்னணி விளம்பர இயக்குனர்களில் ஒருத்தரா வருவாங்க-ங்கிறதில சந்தேகமே இல்லை.
நன்றி: குமுதம்

4 Responses:

Syam said...

neenga eppo roshini maathiri vara poreenga...aapada oru valiya ellorukum munnadi first comment..

Anonymous said...

நீங்க சொல்றீங்க, ஆனால், அந்த குளிக்காதே... விளம்பரம், இப்ப (ரொம்ப) ஞாபகத்திலே இல்லேங்கறதக் கவனிச்சீங்களா? அது போல, பலப் பல விளம்பரங்களும், ( 'அர்ஜூன் அம்மா யாரு', 'சண்டேன்னா ரெண்டு', " எக்ஸ்க்யூஸ்மீ, நீங்க எந்த காலேஜ் படிக்கறீங்க... மம்மீ...", 'அதிகமாத் தின்னா குண்டாயிடுவே' etc) ரொம்ப shortlived ஆகத்தான் இருக்கு...இதே ஒரு surf லலிதாஜீ, லிரில் விளம்பரம், ( shunu sen தானே? அநியாயத்துக்கு செத்து போய்ட்டாரேங்க) மாதிரி, நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கிற மாதிரியான விளம்பரங்களை நம்மால தர முடியலீங்களே? நம்மாளுங்களுக்கு 'தெரசுவு' பத்தாதுங்களா? :-)

simplyguru said...

excellent post

யாத்ரீகன் said...

@prakash
அந்த அளவுக்கு longlived விளம்பரமா மாறுறதுக்கு காரணம் அன்று பல விளம்பரங்கள் கெடயாது, இன்னைக்கு நொடிக்கு ஒன்னுனு வந்துகிட்டே இருக்கு.. 15 நாள் புகழ் இன்று 15 நிமிட புகழா அதுனாலயே மாறிட்டதோ ?!