Showing posts with label code red. Show all posts
Showing posts with label code red. Show all posts

Friday, June 22, 2007

Holi

ஓர் காலைப் பொழுதில் "ஹரே ராம்" சொல்லிக் கொண்டே எழுந்திருக்கும் தாத்தா பழைய மர்ஃபி ரேடியோவை ஆன் செய்கிறார். ஹோலி பற்றிய பாட்டு ஒலிக்கிறது. அதை கேட்டு அந்த ஹாஸ்டலின் ஒவ்வொரு ஸ்டூடண்டும் மெதுவாக எழுந்து கொள்கின்றனர். வண்ணங்களை கையில் அள்ளுகின்றனர்...பலூன்களில் கலர் நிரப்பி, ஒருவர் மேல் ஒருவர் வண்ணமடித்து,ஹோலி விளையாடுகின்றனர்.
பிச்காரி எனப்படும் பிஸ்டனில் கலர் தண்ணீர் நிரப்பி வானத்தில் பீய்ச்சடிக்கிறான் சிறுவன். அது தன்மேல் வந்து வீழ அவனுக்கு ஒரே சந்தோஷம். தாடி தாத்தாவையும் விட்டு வைப்பதில்லை சிறுவர்கள். அவர் மேல் வண்ணத்தை அப்பி, அவரை நெகிழச் செய்கின்றனர். பால்காரர் கொண்டுவரும் பாலிலும் கலர் கலவை.. கொண்டாட்டம். சூடாக சமைக்கப்படும் கரஞ்சியை நுகர்கிறான் சிறுவன். கேட்கவேண்டுமா? ஒரு கை கரஞ்சியை எடுக்கிறது. அனைவரும் சுவைக்கின்றனர்.

ஹோலி கொண்டாட்டம் முடிய,பாட்டும் முடிகிறது. சிறுவர்கள் ஷவரில் சந்தோஷமாக கும்பலாக குளிக்கும் காட்சி. கலர் நிறைந்த புத்தகத்தை, படிகளை , ரோடியோவை சுத்தம் செய்கிறார் தாத்தா... அவர் சுத்தம் செய்யச் செய்யத்தான் தெரிகிறது... [படம் பார்க்க ]


இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் இதன் இசை. விளம்பரப் பட இசையின் ஜாம்பவான் ஜுக்கு என்கிற ரஜத் டோலாக்கியா இதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் எதைப் பற்றியது, என்ன சொல்ல வருகிறது என நாம் யோசிக்க ஒரு வினாடி கூட நம் கவனத்தை திசை திருப்பாமல் இசையும், வரிகளும் நம்மை கட்டிப் போடுவது உண்மை. கலர் கான்வாஸை வண்ணமயமாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர். அமிதாபா சிங். எடிட்டிங்கும் சிறப்பாக உள்ளது.
படம் முடியும் தருவாயில் அந்த சிறுவன் தாத்தாவைக் கேட்கும் கேள்வி, நெகிழ்ச்சி. நடித்த தாத்தா, பால்காரர் இருவரைத் தவிர மற்ற சிறுவர்கள் எல்லோரும் மும்பை தாதரில் உள்ள கமலா மெஹ்தா பள்ளியில் படிப்பவர்கள்.
இவ்வருட விளம்பர கான்ஸ் ஃபெஸ்டிவலில் கான்ஸ் ஃபிலிம் லயன்ஸின் உபபிரிவான Fund raising and appeal பிரிவில் இக்குறுவிளம்பரப் படம் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. தயாரிப்பாளர்கள் கோட் ரெட், இயக்குனர்கள் கஜ்ராஜ் ராவ் & சுப்ரத் ரே, எழுதிய மனீஷ் பட் மற்றும் ரகு பட் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ebai@vsnl.net க்கு உடனே ஈமெயில் செய்யுங்கள்.