டபுள் செஞ்சுரி போஸ்ட் - # 200!
வாத்தியார் ஸ்டைல்ல ஒரு Title.. ஒண்ணுமில்ல... ஒரு சின்ன Tag - அன்புடன் பாலாவிடமிருந்து.
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ப்ளாக் உலகில் 'உலா' வருவதால் ப்ளாகேஸ்வரி. Ofcourse பிடிக்கும்
2) கடைசியா அழுதது எப்போது?
ஒரு வாரத்திற்கு முன் சினேகிதியுடன் சண்டைபோட்டபோது.
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
ரெனால்ட்ஸ் பென்னில் கோழி கிறுக்கலாகவும் பார்க்கர் பென்னில் டைப் பண்ணது போலவும் இருக்கும் என் கையெழுத்து. பார்கர் என் சாய்ஸ்.
4) பிடித்த மதிய உணவு?
ஃபுல் மீல்ஸ் !
5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
"வேற யாருடனாவது" ன்னா? கேள்வி புரியலை. நெறைய ஃப்ரெண்ட்ஸ் எனக்கு.
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
நீச்சல் குளத்துல.
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
Nothing in particular
8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்சது : i) மறதி. எதுவுமே மனசுல வச்சுகறது இல்ல. ஞாபகம் இருந்தாதானே !
ii) மணிக்கணக்கா தூங்கற 'சக்தி!'
iii) பாஸிடிவிட்டி.
பிடிக்காத விஷயம் : கோபம் , பொறுமையின்மை, சோம்பேறித்தனம், எளிதில் போரடித்துவிடுவது
9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
விட்டுலதான் அல்லோல்படறாரு. ப்ளாக்லயும் ஏன் அவரை இழுத்துகிட்டு? Next question please
10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்படி யாருமே இல்லை
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
கறுப்பு + ரஸ்ட் கலர் குர்தா, ரஸ்ட் கலர் சல்வார், அதே கலர் ஸ்டோல்
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
டிப்பு டிப்பு பர்ஸா பானி - ன்னு ஒரு அர்த பழைய ஹிந்தி பாடலை கேட்டுட்டு இருக்கேன். கொடுமைடா! No choice ..
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கறுப்பே அழகு!
14) பிடித்த மணம்?
Anything that's சாப்பாடு!
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
அம்மணி - அக்காவாக பிறந்ததால்
பாமினி - அண்ணியாக (மன்னியாக) வந்ததால்
அம்பி - பதிவு போட்டுட்டு "கமெண்ட் போடவும்" ன்னு சமர்த்தாக ஈமெயில் அனுப்புவதால்
பூ - இவருடைய தமிழ் வலைப்பதிவை மறுபடியும் தொடங்க நான் ஆசைப்படுவதால்
LKS - 'டமில்' தெரிஞ்ச வேறு எந்த வலைப்பதிவரும் எனக்கு அறிமுகம் இல்லாததால்
16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
எல்லா ட்வீட் குறுஞ்செய்திகளுமே
17) பிடித்த விளையாட்டு?
பிக் ஷனரி [Pictionary]
18) கண்ணாடி அணிபவரா?
கணினிக்கு முன்னால் மட்டும்
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
நாலு ஃபைட், அஞ்சு சாங், ஆறு விரசமற்ற காமெடி சீன்ஸ், ஒரு ஹேப்பி க்ளைமேக்ஸ் . மொத்தத்துல நல்ல மசாலா படம்
20) கடைசியாகப் பார்த்த படம்?
டெல்லி 6 (தியேட்டரில்)
சாமி ('ஹோம்' தியேட்டரில்)
21) பிடித்த பருவ காலம் எது?
மும்பையில் ஒரு மழைக்காலம்
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
சிவசங்கரியின் சிறுகதைத் தொகுப்பு - 2 ஆம் பாகம்
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: நான் பாடும் சத்தம்... ஸாரி.. சந்தம்
பிடிக்காதது: வாணலியில் ஸ்க்ரப்பர்/ செங்கல் தேய்க்கும்போதும், உலோகத்தை கத்தியால் கட் பண்ணும்போதும்
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
வேற என்ன - ஆஃபிஸ்தான். பழைய விட்டிற்கும் ஆஃபிஸுக்கும் தினமும் 60 கிலோமிட்டர் பயணம்.
நாட்டை விட்டுன்னு சொன்னா - இந்தப் பக்கம் ஆஸ்திரேலியா , அந்தப் பக்கம் இங்கிலாந்து
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
மற்றவர்களை இமிடேட் செய்வது, பேஸ் வாய்ஸில் பாடுவது
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஆஃபிஸில் பதவி உயர்வுக்காக "எதையும்" செய்பவர்கள் . பிற ஆண் / பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர்கள். Can't accept both.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம், சோம்பேறித்தனம்
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
கென்யா, தான்சானியாவின் வனவிலங்குகள். Wild life safaries.
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
இம்மியளவு இன்ச் குறையாமல் இப்படியே
31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
ரிமோட் சண்டையில்லா சன் டிவி, ராஜ் டிவி, கே டிவி, விஜய் டிவி
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
விளம்பரங்கள் எழுதற பழக்க தோஷத்துல அதே மாதிரி ஒரு லைன்.
வஞ்சனையில்லா சாப்பாடு + அளவில்லாத சந்தோஷம் = வளமான வாழ்க்கை
12 Responses:
Interesting. Guess, this is your first true thamiz posting ;-)
//Anything that's சாப்பாடு!
//
சாப்பாடை விட மாட்டீங்க போல :)
//5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
//
இதுக்கு அர்த்தம், "வாங்க பழகலாம்" டைப்பா நீங்க-ன்னு கேக்கறாங்க! I mean, introvert or extrovert .....
//மும்பையில் ஒரு மழைக்காலம்
//
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே !!!
//16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
எல்லா ட்வீட் குறுஞ்செய்திகளுமே
//
அப்ப, என் வலைப்பதிவில் இட்ட பதிவுகளில் ஒண்ணு கூட தேறாதுன்னு சொல்லாம சொல்றீங்க, 543-ல ஒண்ணு கூட தேறலைன்னு சொல்றது அக்கிரமம் இல்லையா :-)
எ.அ.பாலா
//டபுள் செஞ்சுரி போஸ்ட் - # 200!
//
Congrats and wish you do many more "thanglish" postings :)
#31 - My spouse would say the same thing :)
#27 - too frank observation :))
#8 & #24 - candid & cool...
நல்லா இருந்துச்சு
தமிழ் ப்ளாக இழுத்து மூடிடலாம்னு நினைக்கும் பொது, இப்படி ஒரு டேக் ஆ? Will try!
LOL at tippu tippu barsaa paani!! Hope you are only hearing and not watching it!! அது இன்னும் கொடுமை!
With my limitless limited Tamizh I enjoyed this post
Congrats on double century! Inda laptop-la tappu-tappu-nnu Tamizh adikkaradukkula vidinjidum!
உங்கள் அளவு இல்லாட்டியும் tag எழுத முயற்ச்சிக்கிறேன்.
super ma! and congrats on double century.
i am going to attempt this too... in tamizh. may take a while tho...
ROTFL on your replies.. :))
One more taggedaa? Grr. will try out sooon. :)
yow! naan eppo comment podavumnu mail panninen?
Ithu maathiri tag game-naale unga kudumbame blogger-nnu therinchukitten.
19 answer!! nach
yeranooravadhu post-kku en vaazhthukal!
vazhthukal...super...
Post a Comment