Thursday, August 16, 2007

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட்6

ரொம்....ப... நாட்களாக இந்த விளம்பரத்தைப் பற்றி இந்தப் பகுதியில் எழுதவேண்டும் என்று ஆசை என்றாலும் நல்லதொரு தருணத்திற்காக, வெகு நாட்களாக காத்திருந்தேன். அந்த நல்ல தருணம் என்று நான் சொன்னது விளம்பர உலகின் கான்ஸ் லயன்ஸ் விருது அறிவிக்கப்படும் நேரம்தான்.


இந்த வருடம் இந்தியாவின் எதிர்பார்ப்பெல்லாம் இந்த விளம்பரம் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்பதே. இந்தியாவில் பற்பல அட்வர்டைஸிங் அவார்டுகளை அள்ளிக்குவித்த அந்த விளம்பரம்தான் Happydent. 8 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஒரு விளம்பரம் கான்ஸ் ஃபிலிம் லயன்ஸ் விருதை வென்றுள்ளது. சில வருடங்களுக்கு முன், சோனி எரிக்ஸனின் "One black coffee" விளம்பரம் கான்ஸ் ஃபிலிம் லயன்ஸ் வென்றது.

பளபளக்கும் வெண்மை பற்களைக் காண்பிக்க இதுவரை ஒரே வழிதான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. விளம்பரப்படுத்தப்படும் பொருளை பயன்படுத்திய பின்னர், காமிராவின் முன், மாடல் "ஈஈஈ.. " என்று பள்ளிளிக்கும் புராதன முறைதான் அது. ஆனால் இதே கருத்தை மையப்படுத்தி, Happydent என்கிற சூயிங்கம் தயாரிக்கும் பெர்ஃபெட்டி என்கிற க்ளையண்டிற்காக மெக்கான் எரிக்ஸன் விளம்பர நிறுவனம் வடிவமைத்த விளம்பரம் சென்ற வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த 80 செகண்ட் விளம்பரத்தில் வேட்டி, டர்பன் அணிந்த ஒருவன் பரபரப்பாக சைக்கிளில் சென்று கொண்டு இருக்கிறான். அவனுடைய டயர் நதியில் விழுந்துவிட, அது வழியாக செல்லும் காரில் லிஃப்ட் கேட்கிறான். "முஸ்குராலே, ஜக்மகாலே" என்ற பாட்டு (jingle) ஒலிக்கிறது. அந்த காரின் முன் இருக்கும் ஹெட் லைட்டிற்கு பதில், இரு மனித லைட்டுகள் இருப்பதைக் காண்கிறோம்.

கார் லிஃப்ட் தர மறுக்கிறது. நம் ஹீரோ தன் ஓட்டத்தைத் தொடர்கிறார். வழி நெடுக, பற்பல லாம்ப் போஸ்டுகள். எல்லாவற்றிலும் லைட்டுகளுக்கு பதிலாக மனித விளக்குகள். ஸ்விம்மிங் பூல், டென்னிஸ் கோர்ட் அதே போல் விளக்குகளாக மனிதர்கள்.

அவன் அரண்மனையினுள் நுழைகிறான். அங்கும் மனிதவிளக்குகள். மூச்சிரக்க, பால்கனி வழியாக ஷாண்டிலேரை (chandelier) எட்டிப்பிடிக்கிறான் அவன். ஷாண்டிலேரில் தொங்குகிற அவனுடன் பலர் ஏற்கனவே தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த ஷாண்டிலேரின் கீழ் ஒரு டைனிங் டேபிளில் தூங்குமூஞ்சி மகாராஜா சாப்பிடத் தயாராக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

உடனே நம் ஹீரோ, கடகடவென சூயிங்கம்மை எடுத்து வாயினுள் போட்டு மென்று ஒரு பெரிய்ய்ய புன்னகையை உதிர்க்கிறான்.அந்த புன்னகையே ஹெட் லைட்டாக அமைய பாட்டும் "தேரா தில் ரோஷன், தேரா மன் ரோஷன்" என்று ஹை டெம்போவில் கேட்க, ஊரிலுள்ள மற்ற மனித பல்புகளும் எரிய ஆரம்பிக்கின்றன.. பேக்ரவுண்டில் நகரம் முழுதும் வெளிச்சமயாய் பிராடக்ட் தெரிகிறது. வாய்ஸ் - ஓவர் "ஹேப்பி டென்ட் வைட் சூயிங்கம்" என்று சொல்ல படம் முடிகிறது.

சூயிங்கம் என்பது 14 வயதுக்கு கீழ் உள்ளோர் மட்டுமே பயன்படுத்தவது, வாய் துர்நாற்றத்தை போக்குவதே அதன் வேலை - இவ்விரண்டு perceptionகளை மாற்றுகிறது இந்த campaign.Happy Dent குழந்தைகளுக்கான Product மட்டும் இல்லை. பற்களின் சுகாதரத்தை ஜாலியாக,interesting-ஆக கூறுகிறது இந்த விளம்பரம்.

நவரசங்களில் ஒன்றான அற்புதத்தை வெளிப்படுத்துகிறது இந்த விளம்பரம்.
பார்த்தவுடனேயே "ஆஹா...இது வித்தியாசமா இருக்கே!" என்று கூற வைக்கிறது. Happy Dent என்கிற பிராண்டை நினைவில் வைக்க ஒரு different-ஆன creative.

மின்சாரமற்ற ஒரு கற்பனை உலகில் அமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மும்பை அருகிலுள்ள பன்வேல் எனுமிடத்தில் படம்பிடிக்கப்பட்டது. முதற்காட்சியில் தோன்றும் பாலம் முதற்கொண்டு எல்லாமே 'செட்'தான். விளம்பரத்தின் இயக்குனர் ராம் மாத்வானி, தயாரிப்பு: ஈக்வினாக்ஸ் ஃபிலிம்ஸ். படம்பிடித்தவர்: அனில் மெஹ்தா.

இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ஸ்பெஷலாக 20 அக்ரோபேட் கலைஞர்கள் மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். படப்பிடிப்பிற்கு பல நாட்களுக்கு முன்னரே அவர்களுக்கு காட்சியமைப்பின்படி பயிற்சி அளிக்கப்பட்டது. இவற்றிற்கெல்லாம் முன்பாக, இந்த விளம்பர படப்பிடிப்பின் முதற்கட்டமாக ஒரு Story board வரையப்பட்டது. அந்த Story boardஇன் சில ஃப்ரேம்களை இங்கே .jpeg களாக இணைத்துள்ளேன். மேலே நீங்கள் காணும் ஃபோட்டோ அந்த கலைஞர்கள், ஷாண்டிலேரின் திடத்தை பரிசோதிக்க அதில் தொங்கி பயிற்சி செய்தபோது எடுக்கப்பட்டது.

ஸ்டோரி போர்ட், கலைஞர்கள் பயிற்சி, செட் அமைப்பு போன்றவை தவிர்த்து, நடிகர்களுடைய உடையலங்காரம் போன்றவையும் வரைபடமாக, படப்பிடிப்புக்கு வெகு நாட்களுக்கு முன்னரே தயார் நிலையில் இருந்தது. படத்திற்கு இசையமைத்தவர் விளம்பர உலகில் பிரபலமாக விளங்கும் ஷாந்தனூ மொய்த்ரா. இவர் ப்ரினீதா, ஏகலவ்யா போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர். இந்த விளம்பரத்தின் பாடலாசிரியரும் இவரே. கைலாஷ் கேர், ப்ரசூன் ஜோஷி, ப்ரணவ் பிஸ்வாஸ் - உடன் இந்த ஜிங்கிளை மொய்த்ரா பாடியும் உள்ளார். 'சூஃபி' இசை வடிவில் ஜிங்கிள் அமைக்கப்பட்டுள்ளது." 'சூஃபி' இசைக்கு 'லாஜிக்' கிடையாது. It is mystical. அதனால்தான் பாடலை சூஃபி இசையாக வடிவமைத்தோம்," என்று இந்த விளம்பரத்தை கருத்தாக்கம் செய்த McCann Erickson விளம்பர நிறுவனத்தின் Creative director ப்ரசூன் ஜோஷி குறிப்பிடுகிறார்.

'ஸ்வீட் ஃபூட்ஸ் & ஸ்நாக்ஸ்' உபபிரிவில் கான்ஸ் சில்வர் லயனை வென்றதோடு மட்டுமின்றி சிறந்த இசையாக்கத்திற்கான வெண்கலத்தை வென்றுள்ளது இவ்விளம்பரம்.

இந்த விளம்பரம் அட்வர்டைஸிங் உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் actual consumer -ஆகிய உங்களில் எவ்வளவு பேரை Happydent வாங்கச் செய்தது இந்த விளம்பரம்? இது தமிழ் சேனல்களில் இடம்பெறாத விளம்பரம் என்பதை நினைவில் வைத்து, மற்ற சேனல்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்திருந்தால் சொல்லுங்கள்.

விளம்பரத்தை பார்த்ததேயில்லையா? யூடியூப் இருக்க கவலையேன்?


ஹேப்பி டெண்ட் ...ஸ்மைல் ப்ளீஸ்!


4 Responses:

ambi said...

யப்பா! ஒரு விளம்பரத்தை பத்தி இவ்ளோ தகவல்களை அள்ளி அள்ளி தரும் உங்களுக்கு விளம்பர ராணி! என்ற பட்டத்தை வழங்கி அந்த பட்டத்துக்கு சிறப்பு சேர்க்கிறேன். :)

thanks for the info.
seekram desipunditla link kudungkappaa! :)

(*ahem, நாம பேசிய மாதிரியே கமண்ட் போட்டாச்சு! பேசிய தொகையை அக்கவுண்ட் டிரான்ஸ்பர் செய்து விடவும்.) :p

Karthik Sriram said...

I would call this as a wonderful concept whose execution didnt come thro as it was intended. That too especially after reading your blog, I'm even more convinced so....

The Visitor said...

அசத்தல் விமர்சனம்!

Suganya said...

Engal paarvaikku kondu vanthathirkku Nandri!