Monday, December 22, 2008

Mumbai ka maal 4

மும்பையில் எல்லோரும் சதா ஓடிக்கொண்டேயிருப்பார்கள். எங்கே, எதுக்கு என்றெல்லாம் கேட்கக்கூடாது. காலை 7.48 லோக்கல் ரயிலைப் பிடித்து அங்கே ஓர சீட்டை பிடிப்பது தொடங்கி, 9.11 BEST பஸ்ஸை ஸ்டேஷனலிருந்து ஆஃபீஸுக்கு ஓடிப்பிடித்து, ஆபிஸில் அரக்க பரக்க வேலை செய்து மறுபடியும் ஆபீஸ் டு ஸ்டேஷன் மாலை 5.39 பஸ், 6.02 ட்ரெயின், மறுபடியும் ஸ்டேஷனிலிருந்து இரவு 7.43 பஸ்ஸில் கிளம்பி 8 மணிக்கு வீடு வந்து சேர்ந்து, டின்னர் சமைத்து, 'பாலிகா வது' சீரியல் பார்த்துவிட்டு 11.30க்கு கண் அயர்ந்தால் ... இன்னும் 5 மணி நேரத்தில் எழுந்திருத்து குளித்து, சமைத்து, காலை 7.48 லோக்கலை பிடித்து.....

பல சமயம் இவர்களைப் பார்க்க பாவமாக இருக்கும். வீட்டில் நச்சரிக்கும் மாமியார், ஸ்கூல் / காலேஜ் செல்லும் குழந்தைகள், துரும்பு கூட எடுத்துப் போடாத கணவர் - இவர்கள் அனைவருக்கும் சமைத்து, வீட்டுப் பொறுப்புக்களையும் கவனித்துக் கொண்டு, இந்த ட்ரெயின் இழுபறியில் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ என்று தோன்றும்.

இதனால்தான் என்னவோ கூட்டமான ட்ரெயின்களில் "தக்கா மத் மாறோ(தள்ளாதே)" என்று நொடிகொருதரம் நம்மிடம் புலம்பும் லேடிஸைப் பார்க்கும்போதெல்லாம் , இன்றைக்கு காலை டிபனில் ஏதோ கசமுசா = கணவரிடம் திட்டு = அந்த கோபத்தை நம்மிடம் காட்டுகிறார் போல என்று ignore செய்துவிடுவேன். ரொம்ப கத்தினால், ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு அவர்களுடைய irritation-ஐ அதிகமாக்கிவிடுவேன்... cheap thrills!

"திங்கள் முதல் சனி வரை இப்படி ஓடிக்கொண்டேயிருக்கிறார்களே இவர்கள் எங்கே ஷாப்பிங் போவார்கள்? எங்கே கறிகாய் மற்றும் இதர சாமான்களை வாங்குவார்கள்? " என்று கேட்டால் "ட்ரெயினில்தான்", என்று விடை வரும்.

சென்ற வாரம் லேட்டாக எழுந்ததில் வழக்கமாக டாணென்று 7.30 க்கு கிளம்பும் என்(னவரு)னுடைய வண்டியை மிஸ் செய்துவிட்டேன். லேட்டாக கிளம்பியதால் லோக்கல் அன்று ட்ரெயினாய நமஹ தான். காலை 10.30 மணி ட்ரெயின் காலியாக இருந்த்து. ரொம்ப entertaining-ஆகவும் இருந்தது... பின்னே? ட்ரெயினேலேயே window shopping பண்ணேனே!

இதோ, ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா. அவன் கொண்டு வந்த ஹேங்கரில் இருந்த பொருட்களை எண்ணுவதற்குள் நான் இறங்கும் ஸ்டேஷன் வந்துவிட்டது.

Left to right சொல்கிறேன்... எண்ணிக்கொள்ளுங்கள்
Row 1: நெயில் கட்டர், டார்ச் லைட்டர், ரப்பர் பேண்ட், ஊசி நூல், பாத்ரூம் பிரஷ், எரெஸர் செட்.
Row 2: பெளச், க்ளிப்ஸ், கறிகாய் சீவி, பென், ஸ்டேப்ளர் செட், பாத்திரம் ஸ்கரப்பர்
Row 3: நாப்தலீன் பால்ஸ், சீப்பு, கேஸ் லைட்டர், கத்திரிக்கோல், டூத் பிரஷ், டஸ்டர்....

அப்பாடா! எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது என்று திரும்பினால், அவனுடைய இன்னொரு ஹேங்கர்.... தனித்தனியாக ஃபோட்டோ எடுக்க நேரமில்லை. அதனால் அரக்க பரக்க எடுத்த இரு ஃபோட்டோக்கள்.


டைம் ஆச்சு....புடே சலா புடே சலா அதாவது (அடுத்த ப்ளாகிற்கு தாவுங்க) ...
"முன்னாடி போங்க! முன்னாடி போங்க!"

7 Responses:

Vijay said...

Eppadi trani-la photo edukka mudinjudhu. Adhuvum ivlo detailed-aa? Nice :)

a4isms said...

Why Am I unable to see what you have written???
Curiouser and curiouser... Have you noticed that I gatecrash from Akka Sokka's home to yours regularly??? Are you erecting electric fences to ward off stray like me???
Don't take my lollipops away!

Artnavy said...

how to view this in english??

moneykandaan said...

Miga arumai&iyalpaga dinamum mumbai nagaril nadapathu ondru...pugaipadathiru oru shottu!.

ambi said...

Very good narration, i really liked it.

*ahem, Daily train travel praptihasthu! :))

mg said...

You have an award...

apu said...

உங்கள் ப்லாகை ரொம்ப நாள் படித்த்து வறேன். இதுதான் முதல் கமெண்ட். சுப்ப்பர் enjoyable!