அபிநய் தியோ டைரக்ட் செய்தது, 'லோ'-Lowe [முன்னாளில் லிண்டாஸ்] விளம்பர நிறுவனத்தின் க்ரியேட்டிவிடியில்.
பசங்க ரெண்டு பேரும் பாத்ரூமில், ஸ்விம்மிங் பூலில், கிரிக்கெட் கிரவுண்டில், சீசாவில் விளையாடிக் கொண்டடே பேசுவது அழகு.
காஸ்டிங் அற்புதம். படம்பிடித்த விதமும் சூப்பர். என்ஜாய்!
Monday, December 11, 2006
அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 2
Monday, December 04, 2006
விளம்பர விளையாட்டு - 9
விளம்பர விளையாட்டு - 8 க்கான விடைகள்
1.Kwality walls
2.Aachi masala
3. Nokia
Kaps wins. Congrats!
விளம்பர விளையாட்டு - 9, இதோ:
1. பத்து இல்லை எனில் பத்தாது
2. Making travel simple
3. Complete silence
Sunday, December 03, 2006
அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 1
அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் - 1 -Rudaali
தொலைக்காட்சி விளம்பரங்கள்ள யாராவது இறந்த மாதிரி காட்டினாங்கன்னா, அது ஒரு காமெடி விளம்பரமாத்தான் இருக்கும்.
உதாரணத்துக்கு எம்சீல், ரோமா விளம்பரங்கள்.
சமீபத்துல வெளிவந்த விளம்பரங்கள்ள எனக்கு பிடிச்சது இது.
சோகமான ஆரம்பம்.. சுவையான, சுகமான முடிவு. என்ஜாய்!
Monday, May 22, 2006
விளம்பர விளையாட்டு - 8
விளம்பர ஸ்லோகன்கள் இதோ. விளம்பரத்தை கண்டுபிடியுங்க. ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண்.
1. Pleasure up
2. அசத்தலான சமையலுக்கு
3. விழித்திடு இந்தியா விழித்திடு
Friday, May 19, 2006
ஜகஜ்ஜால கில்லாடிகள்-VI
லயோலவுல விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு, ராஜீவ் மேனன்கிட்ட அசிஸ்டென்டா அஞ்சு வருஷம் வேலை செஞ்சாங்க. "ராஜீவ் மேனன் அவருடைய அசிஸ்டென்ட்ஸ நம்பி பொறுப்பை ஒப்படைப்பார். அதனால துணை இயக்குனர்கள் தாமாகவே ஒரு வேலையை செஞ்சு முடிக்கற துணிச்சல் வரும்",ன்னு சொல்றாங்க ரோஷ்னி. "தப்பு பண்ணினாதான் தவறுகள் மூலமா கத்துக்க முடியும்", ன்னு ரரஜீவ் சொல்லுவாறாம். ரோஷ்னி அஞ்சு வருஷம் நல்லா வேலை கத்துகிட்டு, தனியா டைரக்ட் செய்ய முடியும்ங்கிற நம்பிக்கை வந்த பிறகு 'பிரைமரி கலர்ஸ்' ங்கிற புரொடக்ஷன் கம்பெனியை திறந்தாங்க. ராஜீவோட துணை ஒளிப்பதிவாளரா பணி புரிஞ்ச பாஸ்கரை திருமணம் செஞ்சுகிட்டு ஒரு 2 1/2 வயசு தேவதைக்கு அம்மாவாகவும், திறமையான இயக்குனர்ங்கிற பேரோட விளம்பர படங்களும் இயக்கிகிட்டு இருக்காங்க.
இப்பல்லாம் புடவை வாங்கிற எல்லா அம்மணிகளும் வாங்கிறதுக்கி ஒரு ஒரு மாசம் முன்னாடிலேர்ந்தே தங்க சினேகிதிங்க, உறவுக்காரங்க, முக்கியமா அவங்கவங்க புருஷமார்கள் கிட்ட "எந்த கலர்? எந்த கலர்?" ன்னு ஒரே நச்சரிப்பாம். புருஷனுங்க எல்லாரும் "அது யாருப்பா ஜோதிகாவ வெச்சு "எந்த கலர்? எந்த கலர்?" ன்னு டிவியில தடுக்கி விழுந்தா விளம்பரம் பண்றதுன்னு தேடிகிட்டு இருக்காங்களாம். அய்யாக்களே! அது ரோஷ்னிதான்! மதர்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே, ரோஸ் டே, மல்லி டே மாதிரி நாட்களுக்கெல்லாம் கூட புடவை வாங்கலாம்னு ஐடியா குடுக்கறீங்களே ரோஷ்னி, இது நியாயமா?
இதே மாதிரி சில வருஷங்களுக்கு முன்னாடி எல்லா தமிழ்நாட்டு அம்மாக்களும் தங்க பொண்ணுங்களுக்கிட்ட "குளிக்காத! .. மீரா இல்லைன்னா குளிக்காத!" ன்னு ஒரே ரகளை! ஞாபகமிருக்கா? அந்த ரகளைக்கு காரணம் ரோஷ்னிதான்.
"விளம்பரத்துறையில் நுழையும் பெண்கள் 'அம்மா திட்டறாங்க' ன்னு பாதியிலே போயிடறாங்க"ங்கிறது ரோஷ்னியோட ஆதங்கம். 'பொறுமையா வேலை பாத்தா விளம்பரத்துறையில பெண்கள் அசத்தலாம்" என்பது அவங்க கருத்து.
திறமை, பொறுமை இந்த இரண்டு முக்கியமான குணங்களோட gifted ரோஷ்னி, இன்னும் 2-3 வருஷத்துல இந்தியாவின் முன்னணி விளம்பர இயக்குனர்களில் ஒருத்தரா வருவாங்க-ங்கிறதில சந்தேகமே இல்லை.
Wednesday, May 17, 2006
வார்த்தை வித்தை-4
Tuesday, May 16, 2006
விளம்பர விளையாட்டு - 7
Monday, May 15, 2006
வார்த்தை வித்தை-3
வார்த்தை வித்தை-II விடைகள் : வாஞ்சி, வாசி, வா. வாழ்த்துக்கள், சித்தி உங்களுக்கு 1 பாயிண்டு. மொத்தம் சித்தி:1 1/4 மதிப்பெண்கள். யாரோ: 1/4 மதிப்பெண்கள்
வார்த்தை வித்தை-III
க்ளூ 1: பத்து,பத்து,பத்து _ _ _ _
க்ளூ 2: மாலை _ _ _
க்ளூ 3: சரி _ _
வார்த்தை வித்தை-2
Sunday, May 14, 2006
வார்த்தை வித்தை-1
மூன்று க்ளூ தருவேன். ஒவ்வொரு க்ளூவையும் பயன்படுத்தி, அதுக்கேத்த வார்த்தையை கண்டுபிடிக்கணும்.முதல் வார்த்தையின் ஒரு எழுத்தை எடுத்திட்டா, இரண்டாம் வார்த்தை, அதுல ஒரு எழுத்து அம்பேல் ஆனா மூன்றாம் வார்த்தை.
எடுத்துக்காட்டு:
க்ளூ 1: ஜாலம் _ _ _
க்ளூ 2: நடு _ _
க்ளூ 3: திருமண மாதம் _
விடை: வித்தை, விதை, தை
சரி, விளையாடத் தயாரா?
வார்த்தை வித்தை-I
க்ளூ 1: தீபம் _ _ _ _
க்ளூ 2:தாள வாத்தியர் பெயரின் பகுதி _ _ _
க்ளூ 3: டோபா _ _
தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம். மூன்று வார்த்தைகளயும் கண்டுபிடித்து, முதலில் சரியாக சொல்பவருக்கு 1 மதிப்பெண். இரண்டு வார்த்தைகளை கண்டுபிடித்தால் 1/2 மதிப்பெண், ஒரு வார்த்தைக்கு 1/4 மதிப்பெண். ஆனால் முதலில் ஒரே வார்த்தையை கண்டுபிடித்தவரின் துணையுடன் மற்ற இரண்டையும் இன்னொருவர் சரியாகச் சொன்னால், முதல் நபருக்கு 1/4 மதிப்பெண்ணும், இரண்டாமவருக்கு 3/4 மதிப்பெண்ணும் கிடைக்கும்.
ஆல் த பெஸ்ட்!
விளம்பர விளையாட்டு - 6
Friday, May 12, 2006
விளம்பர விளையாட்டு - 5
Thursday, May 11, 2006
விளம்பர விளையாட்டு - 4
ஒகே.. வாழ்த்துக்கள்...கும்மியடிங்க..ஸாரி.. க்ளாப் அடிங்க...அது நெஸ்கஃபே விளம்பரம்தான். கேப்ஸ்-க்கும் ஒரு ஓஹோ!அம்பி, ஒன் மோர் சான்ஸ்,யூ கோட்டை உட்டுஃபைட். சரி,அடுத்தது..
இந்த மனுஷன் எதைப் பார்த்து இப்படி வாயை பொளக்கிறார்? எந்த விளம்பரம் இது?
க்ளூ: விவி-III வின்னரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு சின்ன க்ளூ.இந்த விளம்பரம் என்னோட முந்தைய பதிவு ஒண்ணுத்துல வந்திருக்கு. தலைய தூக்கி பாருங்க. இது நடிகர் போமன் இரானி இல்ல, அஞ்சன் ஸ்ரீவாத்ஸவா. remember வாக்லே கீ துனியா?தலைய தூக்கி பாருங்க.
Wednesday, May 10, 2006
விளம்பர விளையாட்டு -3
விவி-III: அம்பியின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு ஈஸியான கேள்வி. இந்த பொண்ணு எந்த விளம்பரத்துல வர்றா? இது டுபுக்கு விளம்பரம் அல்ல..சும்மா படத்துக்கு அந்த பேரு வெச்சு அப்லோட் பண்ணேன். அஹெம் அஹெம்.. ஸாரி அம்பி, ஐஸ்வர்யா ராய் படத்தை போட முடியல.. அடுத்த முறை உனக்காக, கண்டிப்பா, ஐஸ் ஆண்டியோட லக்ஸ் விளம்பரத்தைப் போடறேன், சரியா? அழுவாத.. வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்..
Tuesday, May 09, 2006
விளம்பர விளையாட்டு - 2
வி.வி-I விடை: எம்.டீ.எச் [சாட்] மசாலா. இந்த விளம்பரத்துக்கும் சரவணா, வசந்த்& கோ. விளம்பரங்களுக்கும் உள்ள ஒற்றுமை:- சரவணா, வசந்த் & கோ. மாதிரியே அவரோட எல்லா விளம்பரங்கள்ளயும் தலைய காட்டுவார் எம்.டீ.எச் ஓனர் [அந்த ரெட் தலைப்பாகை].What a similarity I say?வி.வி-I, no winners :(
Monday, May 08, 2006
சின்னப் புறா ரெண்டு...
ட்வின்ஸ் பொறந்த சந்தோஷத்துல நாங்க பாயசம் செஞ்சு சாப்பிட்டோம் :)
Sunday, May 07, 2006
விளம்பர விளையாட்டு - I
உங்க விளம்பர கோஷன்ட டெஸ்ட் பண்ண ரெடியா?
Thursday, May 04, 2006
ஜகஜ்ஜால கில்லாடிகள்- V
One Black coffee please! - நான் காஃபி கேக்கலை.. எரிக்ஸன் விளம்பரத்தைப் பத்திதான் எழுதறேன்னு கரெக்டா கண்டுபிடிச்சிருப்பீங்க...That's the power of advertisement films! ஒரு டயலாக்க வெச்சே எந்த விளம்பரம்னு சொல்ல முடிஞ்சா, அதுவும் ஏறக்குறைய 8 வருஷங்களுக்கு அப்புறம் அது அந்த விளம்பர டைரக்டருக்கும் ஏஜென்சிக்கும் வெற்றிதானே? எனக்குத் தெரிஞ்சி, கிரிக்கெட் வர்ல்ட் கப் சமயம் அடிக்கடி ஒளிபரப்பான இந்த விளம்பரத்தை, அந்த ப்ளாக் காஃபி லைனுக்கும் அந்த லேடியோட [கவிதா கபூர்] எக்ஸ்பிரஷன் ப்ளஸ் நம்ம ஹீரோவோட embarassement கலந்த ஒரு மாதிரியான பெயர் சொல்ல முடியாத எக்ஸ்பிரஷனுக்கு மட்டுமே நிறைய பேர் ஃபேன்ஸ் ஆனாங்க. கோலிவுட் உலக நாயகன் ஆஸ்கர் அவார்டு வாங்குவாரோ இல்லையோ, நம்ம விளம்பர உலக நாயகன்தான் இந்தியாவுக்கான முதல் கான்ஸ் விருதை எரிக்ஸன் விளம்பரத்துக்காக வாங்கித்தந்தாரு!எவ்வளவு பெருமையான விஷயம் இல்ல?
அடுத்த விளம்பரத்தைப் பத்தி எழுதறத்துக்கு முன்னாடி ஒரு சின்ன apology.எல்லா SBI விளம்பரங்களையும் டைரக்ட் செஞ்சது நம்ம ஜகஜ்ஜால கில்லாடி-I அபிநய் தியோ-ன்னு நெனச்சு, அடுத்த வர்ற விளம்பரத்தை அவரோட பக்கத்துல தவறா போட்டு இருந்தேன். அதை டைரக்ட் செஞ்சது ப்ரசூன்.சீனியர் சிட்டிசன் வாலண்டைன்ஸ் டே கொண்டாடுறாங்க...பாருங்க.தாத்தா, பாட்டியோட நாச்சுரல் ஆக்டிங்க ரசியுங்க.
ஒரு குடும்பம் ஊருக்கு கிளம்ப எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு பஸ்லயும் டிரெயின்லயும் இடிபட்டு கடைசியா ஆட்டோவுல ஒரு பங்களாவுல வந்து இறங்கறாங்க. அதே சமயம் அந்த பங்களாவை விட்டு ஒரு கார் போகறதை அவங்க பாக்கல. இவங்க கதவை தட்ட தட்ட அந்த வீட்டுலேர்ந்து no response."ஏங்க நாம வர்றோம்ன்னு கடுதாசி போட்டீங்கல்ல"ன்னு கணவனைப் பாத்து மனைவி கேக்க, அப்ப ஸார் போஸ்ட் வந்து ஒரு கடுதாசிய இவங்க கையில திணிச்சுட்டு போகறாரு. பாவம்! இவங்க போட்ட லெட்டரை இவங்களே கலெக்ட் செஞ்சுக்க வேண்டிய பரிதாபம்! அப்செட்டா திரும்பவும் ஊருக்கே கிளம்பராங்க. வாய்ஸ் ஓவர் சொல்லுது "யாஹூ.சிஓ.ஐஎன்-ல ஒரு மெயில் அனுப்பலாமே?" கட் பண்ணா தலைவர் "டியர் பிரதர்..." னு ஈமெயில் அனுப்பத் தொடங்க[மெயில் சப்ஜெக்ட்:கமிங் ஃபார் ஏ ஹாலிடே], அந்த பக்கம் கட் பண்ணா, "உங்க தம்பி குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு வர்றாராம்"ன்னு ஈமெயில் படிச்சுகிட்டே அண்ணி, அண்ணன்கிட்ட சலிப்போட சொல்றாங்க. இதை கேட்ட அண்ணன்காரன் தன் பசங்ககிட்ட "எல்லாத்தையும் பேக் பண்ணுங்க.. ஓடணும்"ங்கிறார். "டூ யு யாஹூ?" ன்னு வாய்ஸ் ஓவர் சொல்ல படம் முடியுது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்ல படிச்சதால ப்ரசூனோட டீடெய்லிங் பக்காவா இருக்கும். யாஹூ குடும்பங்களை யதார்த்தமா சித்தரிச்சு, அவங்க காஸ்டியூம், ப்ராப்ஸ், வீடு, சிவப்பு கார், டேபிள் இன்ன பிற அயிட்டம் எல்லாத்தையும் கவனமா செஞ்சிருக்காரு டைரக்டர். இந்த காமெடி விளம்பரத்துல எந்த கதாபாத்திரமும் காரிகேச்சரா சித்தரிக்கப்படலை, யாருமே காமெடியா பேசவோ, நடிக்கவோ இல்ல. ஆனா விளம்பரத்தைப் பாத்தப்புறம் நம்மள அறியாம நம்ம முகத்துல ஒரு சின்ன ஸ்மைல் வர்றது உறுதி.
ட்ரக் மேல உக்காந்துகிட்டிருக்காரு ஒரு ராஜஸ்தானி கிராமத்து ஆள். அடுத்த ஷாட்டுல அந்த ஓடுற ட்ரக் மேல, அவருக்கு பக்கத்துல, பின்னாடி, முன்னாடி ஃபுல்லா ஆட்கள். ட்ரக் உள்ளாறயும் மக்கள்.. ட்ரக் வெளியில அதோட ஒட்டிக்கிட்டு ட்ரக்க புடிச்சுகிட்டே மக்கள்.. ஓருத்தர் மேல ஒருத்தர் உட்காராத குறையா மக்கள் மக்கள் மக்கள்.. ட்ரக் பின்னாடி கட் பண்ணா அங்க "ஃபெவிகால்-தி அல்டிமேட் அட்ஹெசிவ்" ன்னு எழுதியிருக்கு. ஆஹா! ஃபெவிகால்-னு எழுதியிருக்கும் போதே அதுக்கு இவ்வளவு பேரையும் விழாம பிடிச்சு வெச்சியிருக்கற சக்தியா? அட்றா சக்கை!அட்றா சக்கை!அட்றா சக்கை! பல அவார்டுகளை அள்ளிக் குடுத்த ப்ரசூனின் கைவண்ணம் இந்த விளம்பரம். ஃபெவிகாலுக்கு நெறைய விளம்பரங்கள் பண்ணியிருக்காரு ப்ரசூன். ஃபெவிகாலின் ஆஸ்தான விளம்பர இயக்குனர் இவரு.
நீங்க க்ளோசப்புக்கு மாறலையா? ப்ரசூன் அண்ணாச்சி கே.எல் சைகல் ஸ்டைல்ல பலகுரல் மன்னன் சேத்தன் சஷிதல்ல 'க்யா ஆஃப் க்ளோசப் கர்தே ஹே?' னு பாட வச்சு, தமிழுக்காக திருச்சி லோகநாதன் ஸ்டைல்ல 'க்ளோசப்புக்கு மாறலையா?' னு ஒரு ஜிங்கிள் வச்சு, அதுக்கு ஏத்த மாதிரி ரெட்ரோ ஸ்டைல்ல சூப்பரா விளம்பரம் பண்ணியும் நீங்க க்ளோசப்புக்கு மாறலயா?
அடுத்த விளம்பரத்தைப் பத்தி சொன்னா அவ்வளவுதான்! "கலக்கற ப்ரசூன்! புது ஜூரி, புது விளம்பரம், புது அவார்டு.. பிரமாதம்"-னு நீங்களே சொல்லப்போறீங்க! ஏஷியன் பெயிண்ட்ஸ்- பிரமாதம்!
மரணத்தின் பிடியில் ஒரு வயதான கிழவர். அவரோட பெட்டுக்கிட்ட ஒரு நர்ஸ், டாக்டர், லாயர், கிழவரோட உறவினர்கள்.. குறிப்பா, ரெளடி லுக்குல அவரோட பையன்.. பையங்கிட்ட உயில நீட்டுறாரு லாயர்.அதைப் படிச்ச பையனுக்கு செம அதிருப்தி."என்னப்பா இதுல என்னோட [இங்க] வந்து போகற செலவே ஆயிடுமே" ன்னு அப்பாகிட்ட சலிச்சுகறான் .அப்பா ம்சியல. அப்பா காதுல ஏதோ முணுமுணுக்குறான் அவன். உடனே பணிஞ்ச அப்பா கிழவர் உயில்ல ஏதோ எழுதறாரு... அதுதான் அவன் பங்குல மூணு எக்ஸ்ட்ரா ஜீரோவை.சந்தோஷமான பையன், நர்ஸ்கிட்ட "ம்ம்..அவருக்கு மருந்தை குடு" ன்னு ஆர்டர் போடறான். அப்படியே உயில கையுல எடுத்துகிட்டு அந்த ஜீரோக்களை கண்கொட்டாம பாத்துகிட்டு வந்த பையனோட மகிழ்ச்சியில, வில்லன் மாதிரி ஒழுகுற கூரைலேர்ந்து ஒரு துளி மழைத் தண்ணி.. அது அப்படியே வந்து உயில்ல இருக்கற பற்பல ஜீரோக்களுக்கு முன்னாடியிருக்குற '1'ங்கிற நம்பர அழிச்சிடுது...உயில்ல அவன் பேருக்கு நேரா ஆறு ஜீரோ மட்டுமே மிச்சமிருக்கு.. "ஒரு துளி நீர் உங்க வாழ்க்கையையே மாத்திடும்..வீட்டுல எப்போமே எம்-சீல் இருக்கட்டும்" ன்னு அறிவுறுத்துது வாய்ஸ் ஓவர்.கடைசி ஷாட்டுல பேக்ரவுண்டுல கிழவர் சாக, மகன் "அப்ப்ப்பா" ன்னு அழறான். அவன் எதுக்கு அழறான்னு சொல்லவும் வேணுமா?கிழவரா நடிக்க, மகனா மனோஜ் பாவா.விளம்பரத்துல ஆக்சுவல் சிச்சுவேஷன்- ஒரு ஆள் சாகக் கிடக்குறாரு. ஆனா அதை வச்சே காமெடி பண்ண முடியும்ன்னு நிரூபிச்சிருக்காரு ப்ரசூன்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா, பெவி க்விக், பெமினா, பல அவார்டு வாங்கின செண்டர் ஷாக்.. இப்படி இவரு கைவண்ணத்தில் உருவான கார்காய்ஸ் காவியங்கள் ஏராளம்.. ஏராளம்!
ப்ரசூன்கிட்ட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம் ஏஜென்சி ஆளுங்கள அவரு ட்ரீட் பண்ணறவிதம். பொதுவாவே ஏஜென்சிலேர்ந்து க்ரியேட்டிவ், சர்வீஸிங், ஃபிலிம் டிபார்ட்மென்ட் மக்கள் எல்லாரும் தங்களை ஒரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி நெனச்சுப்பாங்க. அவங்க உடுர பீட்டரும், பேசற பேச்சும், 'அந்த ஷாட்டை இப்படி வை, அப்படி கட் பண்ணு'னு ஷூட்டிங், எடிட்டிங்-ல டைரக்டரோட வேலையில interfere பண்ணற ரவுசும் அனுபவப்பட்டாதான் தெரியும். டைரக்டருங்களும் இவங்கள பகைச்சுக்க முடியாம [அடுத்த ஃபிலிம் இவங்க தயவுல வேணுமே!] கல்யாணத்துல பொண்ணு வீட்டுக்காரங்க மாதிரி பூம் பூம் மாடு மாதிரி சொல்றதுக்கெல்லாம் தலைய ஆட்டுவாங்க. ஆனால் ப்ரசூன் அண்ணன் நேர் எதிர். இவருக்கு ஸ்கிரிப்ட் பிடிக்கலைன்னா படத்தை டைரக்ட் பண்ண மாட்டாரு. எடிட்டிங் ஸ்டூடியோவ விட்டு ஏஜென்சி ஆளுங்க ஒரு காத தூரம் தள்ளியே நிக்கணும்.ஃபிலிம் எடிட் பண்ணி முடிச்சப்புறம் ஃபைனல் ப்ரசென்டேஷன்போது மட்டுமே ஏஜென்சிக்கு என்ட்ரீ.ஏஜென்சி ஆளுங்க ரொம்ப ரவுசு விட்டா "போடா" ன்னு ஃபிலிம திரும்ப தந்திடுவாரு. மத்த டைரக்டருங்க எல்லாம் ஏஜென்சி வாசல்ல ஃபிலிம் பிச்சைக்காக ஏங்கி காத்திருக்க ப்ரசூன் மாதிரி, தாது, அபினய், ப்ரஹலாத் கக்கர் மாதிரி ஒரு சில டைரக்டர்ஸ் வாசல்ல மட்டுமே ஏஜென்சி ஆளுங்க தவங்கிடக்கறதை பாக்கலாம்.
ஒரு குட் நியூஸ்-இந்த வருஷம் கான்ஸ் விருது ஜூரியில ப்ரசூனும் ஒரு மெம்பர்.இவங்க குடும்பத்துல ஜூரியா இருக்கறது ஒண்ணும் புதுசில்ல. ப்ரசூனோட அண்ணன் விளம்பர வித்தகர் பியுஷ் பாண்டேவும் சில வருஷங்களுக்கு முன்னாடி ஜூரி மெம்பர்தான். ப்ரசூனோட அக்காதான் 'சோலி கே பீசே க்யா ஹை' புகழ் ஈலா அருண்.
Sunday, April 30, 2006
ஜே.ஜே
நேத்து சன் டிவியில ஜே.ஜே படம் பாத்துகிட்டு இருந்தேன்.அப்பதான் நாமளும் இப்ப அட்வர்டைஸிங்ல ஃபேமஸ் ஆயிருக்கற ஜே.ஜே-வை பத்தி ஏன் எழுதக்கூடாதுன்னு தோணிச்சு.ஸோ, ப்ரெசென்டிங் ஜகஜ்ஜால ஜப்பானி (J.J) ஆமீர்கான்!!!
ஒரு டிபிக்கல் ஜப்பானி டூரிஸ்ட் [cap, காமிரா, chinki கண்கள் வீதம்] தங்களோட சாதாரண ஹோட்டலுக்கு நுழையறதைப் பார்த்த ஹோட்டல் சர்வர், மானேஜர் எல்லாம் செம குஷியாயிடறாங்க. உடனே அவர் கிட்ட மெனு கார்டை தர்றாங்க. அதுல எல்லா சாப்பாடு அமெளண்டுக்கு பக்கத்திலயும் ஒரு ஜீரோ எழுத்து மூலமா கூட்டப்பட்டிருக்கு.சமோசா - 100, பேல்பூரி - 200.. இந்த மாதிரி... "அத சாப்பிடு, இதை சாப்பிடு"ன்னு ஜப்பானிக்கு ஒரே ராஜ உபசாரம் பண்ணறாங்க.
அவர் எல்லாத்தையும் விட்டுட்டு "எனக்கு தண்டா(குளிர்ந்த) சமோசா வேணும்" ங்கிறார். "தண்டா சமோசாவா?" எல்லாரும் முழிக்க அவரு "ஆமாம் தண்டா சமோசாதான் வேணும்" ன்னு அடம் பிடிக்கறார். ஜில்லுன்னு ஒரு சமோசான்னு ஒண்ணு கிடையாதுன்னு அவங்க சொல்ல நம்மாளு கிச்சனுக்கு ஓடிப்போய் சமோசாவையும் ரெண்டு கோக் பாட்டிலையும் எடுத்துகிட்டுவந்து "இது என்ன?" ன்னு கோக் பாட்டிலைக் காமிச்சு ரெஸ்டாரன்ட் ஆளுங்ககிட்ட கேக்கறாரு. அவங்க "தண்டா" ன்னு சொல்ல, "இது என்ன" ன்னு சமோசாவைப் பாயிண்ட் பண்ணி கேக்கறார். அவங்களும் கோரஸா "சமோசா" ன்னு சொல்ல, ங்கிறார். ரெண்டுத்தயும் மாறி மாறி காமிக்க, அவங்க தண்டா-சமோசா ன்னு சொல்ல இவரு தண்டாவையும் சமோசாவும் கேட்டது புரிய வருது. ஒஹோ!அப்படியா சேதின்னு டியூப் லைட்டுங்களுக்கு உறைக்குது. அப்பறம் அந்த ஜப்பானி நெசம்மாவே ஜப்பானியா இல்லையாங்கிறது தான் சஸ்பென்ஸ்.
Asusual, ஆமிர் அண்ணாச்சி ஏ-கிளாஸ். மேக்-அப்பை கவனியுங்க. அட!அட! அட! உண்மையாவே ஜப்பானி மாதிரியே இருக்கறாரு. அவரோட ஆக்டிங் சிம்ப்ளி சிங் சங் சூ [ஸிபர்ப்-ங்கிறதை ஜப்பானியில சொன்னேன்..ஹி ஹி ஹி]ஓவ்வொரு கோக் விளம்பரத்திலயும் கலக்கறாரு.
எனக்கு ஒரு ஆசை. ஒரு தமிழனா "அய்யோ ஜீ! வாட்டு ஜீ" ன்னு , நெத்தியில விபூதிப் பட்டை போடாத டிபிக்கல் விளம்பரங்கள் potray பண்ணற தமிழ் ஆளா இல்லாம, ஒரு நார்மல் தமிழ் குடிமகனா ஆமிர் ஒரு கோக் அவதாரம் எடுக்கணும். என் ஆசை நிறைவேறுமா? பிரசூன் ஜோஷி சார்! ஆர் யூ லிஸனிங்?
Friday, April 28, 2006
ஜகஜ்ஜால கில்லாடிகள் - IV
12 வருஷமா அட்வர்டைஸிங் ஏஜென்சியில வேலை செஞ்சிட்டு பிளாக் மேஜிக் மோஷன் பிக்சர் கம்பெனிய கொல்கத்தாவுல தொடங்கி ஏழு வருஷமா மும்பையில கமர்ஷியல்ஸ் டைரக்ட் பண்ணிகிட்டு இருக்காரு.
ஆமிர் கான் ஒரு வேலைய செஞ்சா பர்ஃபெக்டா பண்ணுவாருன்னு கேள்வி பட்ருக்கோம்.. ஆமிர் முதன்முதலா endorse பண்ண பெரிய பிராண்ட் கோகா கோலா. முதன் முதலா பஞ்சாபியா பஞ்சாபி குடிகளுக்கு முன்னாடி கோக் குடிச்சு, அப்புறம் நேபாளியா, பெங்காலியா, ஹைதரபாதியா, பீகாரியா.. போன வருஷம் பாபியா(அண்ணி) கலக்கினாரு. ஆமிர பாபி ஆக்கினது தாதுதான். ஒரு ஆண பெண்ணா வேடம் போட்டு சீரியஸா நடிக்கவைக்கறது கத்தி மேல நடக்கற மாதிரி. கொஞ்சம் இந்த பக்கம் வந்துட்டாலும் 'அந்த' மாதிரி அர்த்தம் ஆயிடும். ஒரு ப்ராடக்ட ஒரு ஆண், பெண் வேடமிட்டு endorse பண்ணது இதுதான் முதல் முறைன்னு நெனக்கறேன். தாது ஒரு illustrator-ஆ வேல செஞ்சதுனால, ஆமிரோட லுக்-க க்ரெக்டா visualize பண்ணி கொண்டு வர முடிஞ்சது அவரால.
இப்ப லேடஸ்டா வர்ற ஐஸ்வர்யா ராயோட கோக்-தண்டே கா தடுகா படத்தை இயக்கினவரும் தாதுதான். பெர்சனால எனக்கு ஐஸ்வர்யாவோட ஆக்டிங் கொஞ்சம் over the top ஆ தெரிஞ்சது. ஆனா அந்த சல்வார் கமீஸ் பொண்ணு டோஸ் குடுக்கற கேரக்டருக்கு அந்த ஆக்டிங் தேவைதான்னு தோணுது.
பப்பர பப்பர பெய்ய்ய்ன்... விளம்பர உலகின் ஜாம்பவான் ஜகஜ்ஜால கில்லாடிகள் Part V-ல பராக் பராக் பராக்...
ஸ்ட்ரிங்ஸ்
சிதார்,சந்தூர்,சரோத்,தில்ருபா,சாரங்கி இந்த மாதிரி predominantly நார்த் இந்தியன் ஸ்ட்ரிங்ஸ் வாத்தியங்கள் தமிழ் சினிமா பாடல்கள்ள நிறையவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கு.
தளபதி படத்துல வரும் சின்னத்தாயவள் பாட்டுல உள்ள சோகத்த வெளிப்படுத்தின கரெக்டான வாத்தியம் சாரங்கிதான்.அந்த பாட்டுல beginning பீஸ்-லயும் நடுவுலயும் உஸ்தாத் சுல்தான் கான் வாசிப்புல சோகம் அப்படியே இழையோடும்.சுல்தான் கான் நல்லா பாடவும் செய்வாரு. அலைபாயுதே சினேகிதனே பாட்டுல "கானொரு காமரி காலு"ங்கிற அர்த்தமுள்ள(தெலுங்கு?) வரிகளை பாடினவர் உஸ்தாத் தான்.
ரீஸண்டா காக்க காக்க-ல 'உயிரின் உயிரே' பாடல்ல பாடகர் கே.கே[அட அட அட! என்ன வாய்ஸ்! அவர பத்தி தனி போஸ்ட் அப்புறம்] "முழுதும் வேர்க்கின்றேன்"ன்னு ரெண்டு வாட்டி பல்லவியில பாடி முடிச்சப்புறம் ஆரம்பிக்கற சிதார் மியூசிக் சாதாரணமா ஆரம்பிச்சு, அப்புறம் டிரம்ஸோட போட்டி போட, அத என்ஜாய் பண்ண ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி 'தடார்' ன்னு முடிஞ்சிடும். ஹாரிஸ்! ஜனார்தனன இன்னும் கொஞ்சம் நேரம் வாசிக்க விட்டுருக்கலாம்ல?
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்-ல 'கண்ணாமூச்சி ஏனடா' பாட்டுல, ஐஸ் அக்கா மயில் கழுத்து கலர் பாவாடை தாவாணில, மயில் தோகைய கையில வச்சு கெட்டு ஆடற sequenceல நிலாத்ரி குமாரின் சிதார் டான்ஸ் ஐஸ் டான்ஸவிட ஏ-கிளாஸ். ஆனா ஏ.ஆர். அங்கிளும் சிதாருக்கு இருபது செகண்ட் கூட கொடுக்காதது அநியாயம்!
தில்ரூபா-ன்னு ஒரு வாத்தியம் [பார்க்க படம் கீழே].உயிரே படத்துல (தமிழ் தில்சே) சந்தோஷ கண்ணீரே ங்கிற பாட்டுல அனுபல்லவிக்கு அப்புறம் சரோஜாவோட தில்ரூபா செம சூப்பர். இந்த மாதிரி ஒரு வாத்தியம் இருக்குன்னு இந்த பாட்டுக்கப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது. சரோஜாவ சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில பாத்ததா நியாபகம்
தமிழ் சினிமா பாடல்கள்ள உங்களுக்கு பிடிச்ச நார்த் இந்தியன் வாத்தியம் எது?
Wednesday, April 26, 2006
ஜகஜ்ஜால கில்லாடிகள் - III
ப்ளைவுட் விளம்பரம்ன்னாலே ரம்பமா இருக்கும்ங்கறத மாத்தி சூப்பரானா அட்வர்டைஸ்மென்ட் ஒண்ண க்ரீன்ப்ளை ப்ளைவுட்டுக்காக ஃபிலிம் பண்ணவங்கதான் பெங்களூரச் சேர்ந்த நிர்வாணா ஃபிலிம்ஸ், - ஸ்னேகா & ப்ரகாஷ் வர்மா.ஸ்னேகாதான் ப்ரொட்யூஸர், ப்ரகாஷ் டைரக்டர். இவங்க ரெண்டு பேருமே 'ட்ரெண்ட்ஸ்' விளம்பரப் பட கம்பெனியில பிரபல விளம்பர டைரக்டர் வி.கே.ப்ரகாஷ் கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டர்ஸா வேலை செஞ்சவங்க.சில வருஷங்களுக்கு முன்னாடி நிர்வாணா ஃபிலிம்ஸ தொடங்கி இப்ப சக்கை போடு போட்டுட்டு இருக்காங்க.
காரைக்குடியில ஒரு லோக்கல் பஸ்ஸுல அம்மா-அப்பாவோட போயிட்டிருக்குற ஒரு சர்தார்ஜி பையன் பழங்கால வீடு ஒண்ணுத்த பாத்ததுமே "வண்டி நிறுத்துங்க!!"ன்னு தமிழ்ல சொல்றான்.. அவனோட பேரண்ட்ஸ் 'இதென்ன புது பாஷை"ன்னு விழிக்க, அவன் அப்படியே இறங்கி, அந்த வீட்டுக்குள்ளாற போறான்..ஏதோ யோசிச்சுக்கிட்டே "என் வீடு! என் டேபிள்! என் சாவித்திரி" ன்னு ஒரு சின்ன மேஜையில 'சாவித்திரி'ன்னு எழுதியிருக்கிறத பாத்துகிட்டே சொல்லறான். வீட்டுக்குள்ள எல்லாரும் பேந்த பேந்த விழிக்க, ஃப்ளாஷ் பாக்குல கட் பண்ணா அந்த காலத்து ஜமீந்தார் லுக்கோட ஒரு இளைஞன் மேஜையில 'சாவித்திரி'ன்னு காதலோட எழுதிகிட்டு இருக்காரு. கட்-பேக் டு சின்ன பையன். அந்த வீட்டுல இருக்குற ஒரு செட்டிநாட்டுக் கிழவி "ஸ்வாமி! ஸ்வாமி!"ன்னு அந்த பையன்கிட்ட ஓடி வர்றா..அவனும் 'சாவித்திரி! சாவித்திரி' ன்னு பாட்டிய பாத்து உருகறான். கட் டு ஒரு பழங்கால தாத்தா ஃபோட்டோ-ஈஸி சேர்ல சாஞ்சபடி. கடைசி ஷாட்டுல சர்தார்ஜி பையனும், பாட்டியும் "சாவித்திரி! ஸ்வாமி" ன்னு உருகி உருகி சொல்லிகிட்டே இருக்காங்க. VO "க்ரீன்ப்ளை ப்ளைவுட்... ஜென்ம ஜென்மத்துக்கும் தொடரும் பந்தம்" ன்னு சொல்லி, படம் முடியுது. இருக்குற 30 (அ) 40 செகண்டுக்குள்ளாற கதையையும் சொல்லி, ப்ராடக்ட்ட நல்லா மக்கள் மனசுல பதிய வெக்கறது கஷ்டமான வேலைதான். இந்த ஃபிலிம்ல அந்த வேலைய ரொம்பவே சிறப்பா செஞ்சிருக்காங்க வர்மாஸ்.
ஹச் விளம்பரம் - ம்ம்ம்.. உங்க முகத்துல ஒரு wide smile தெரியுதே! பிரபல ஹச்- நாய் & பையன் விளம்பரத்துக்கு மயங்காதவங்க யாரு?"You and I.. in this beautiful world.. green grass, blue sky...in this beautiful world".அண்மையில காலமான ஓ&எம்-மின் க்ரீயேட்டிவ் டைரக்டர் வி.மகேஷோட கற்பனையில வளர்ந்த பையனுக்கும் நாய்க்கும் உயிர் கொடுத்தது வர்மாஸ்தான். இசை:ரூபர்ட். ஒளிப்பதிவு:டானி போப் .
நிர்வாணாவோட பாராஷுட் சம்பூர்ணாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது ஸ்கிரிப்டா, இல்ல படம் பண்ணப்பட்டவிதமா, மாடலோட எக்ஸ்ப்ரஷன்ஸான்னு pinpoint பண்ணி சொல்லத் தெரியல. overall, ஒரு கேஷுவல் அப்ரோச் இருக்கு இவங்க ஃபிலிம்ஸ்ல.
காஸ்டிங், காஸ்டிங் ன்னு நான் அடிக்கடி எழுதறேன்.கரெக்டான faces ஏன் முக்கியம்னு ப்ரகாஷ் சொல்லறத படிங்க... இங்க பாருங்க.
தொடங்கின மூணு வருஷத்துலயே இந்தியாவின் most sought after ஃபிலிம் மேக்கர்ஸ்ல ஒருத்தரா இருக்காரு ப்ரகாஷ். இவங்க ஷோரீல் உங்க பார்வைக்கு.
'கருப்பு மந்திரம்' பண்ணி ஒரு திரைப்படத்திற்காக பெஸ்ட் டெப்யூ டைரக்டருக்கான நேஷனல் அவார்டு வாங்கின பெங்காலி பாபுவை ஜ.கி IV-ல பாக்கலாமா?
Tuesday, April 11, 2006
ஜகஜ்ஜால கில்லாடிகள் -Part II
Monday, April 10, 2006
ஜகஜ்ஜால கில்லாடிகள்
விளம்பரப் பட script நல்லா இருந்தா மட்டும் போதாது. அத டைரக்ட் பண்ண நல்ல இயக்குனர்கள் இருந்தாதான், copywriter எழுதியிருக்குற script க்கே full effect கிடைக்கும்.இந்த ஜகஜ்ஜால கில்லாடிகள் பகுதியில உங்களுக்கு அறிமுகமில்லாத விளம்பரப்பட டைரக்டர்ஸ் பத்தி எழுதப் போறேன்.
ok, என்னோட அடுத்த டைரக்டர் ஒரு ராஜ பரம்பரைய சேர்ந்தவர்....
Sunday, April 09, 2006
Aruval -vs- Blade
In the coming Assembly elections, the Mylapore constituency is witnessing the clash of the sharpeners - S Ve Shekar (AIADMK) and Napolean (DMK).
Neppo's mylapore manifesto (mm) includes a free veshti for every Mylaporean. The unique thing about the veshti is that it comes madichyfyed and can only be worn on top of a kodu potta drawer.You cannot un-madichyfy the veshti and it is apt for the Madras veyyil, so says Nepz.
S V's Mylapore manifesto, on the other hand, has a free orange colour t-shirt for every family. The speciality of the T-shirt is that if you are size 'Large', you will be given a 'Medium' size shirt, if you are an 'XL', 'L' for you and so on, and thus helps you show off your toppai. He promises that he will not use public money or for that matter,his own to buy the T-shirts.These T-shirts will be borrowed from Rex Fashions.
----------------------------------------------------------------------------------
If Neppo wins, he has promised a free aruval for every Mylaporean family..This will come handy for the Mylaporean taaikulam and they can use it during their 'Kozhayadi' sandais.The Aruva has a sound system attached to it and it says "Deeeei.." in Neppo's voice whenever one takes it out.
S V has promised to give a blade to each family. The blade too, comes with a sound sytem and whenever the blade is used by men for a shave or by women to ward off bus pokkiris, it will automatically say "Amma jinguchaa..." S V adds that the blade symbolizes his 'kadi' jokes.
Aruval-a Blade-a ?
Pongi ezhundu vaakaliyungal Mylapore makkalae!
Thursday, April 06, 2006
Brokeback Mountain - ஒரு கிழிசல்
இனிமே யாராவது "ப்ரோக்பாக் மவுன்டென் ஆஹா, ஒஹோ "ன்னு சொல்லட்டும்.. I will break their back! படமாய்யா அது? "ஆஸ்கர் நாமினி, sensitive potrayal of gays.. poignant...அது, இது"-ன்னு அளந்த அளப்பையெல்லாம் படிச்சுட்டு, அந்த பாழாப்போன ஆஸ்கர் அவார்டு ஃபங்ஷனையும் டிவில பாத்து உச்சு கொட்டிட்டு ("அய்யோ, ப்ரோக்பாக் மவுன்டென் வின் பண்ணலயே"ங்கிற ஏக்கத்துல), என்னை warn பண்ண புருஷனையும் அலட்சியப்படுத்திட்டு, அவுகளையும் கூட்டிட்டு, வேகாத வெய்யில்ல தியேட்டர்ல டிக்கட் வாங்கிட்டு இந்த கண்ட்றாவிய பாக்கப்போனேன்.
ராமராஜன்,தேவர் படத்துலயுந்தான் மிருகங்க காட்சி நெறய வருது.அதுக்காக, போட்ட காட்சியவே திரும்ப திரும்ப போடறாங்க? அந்த குதிரங்க மேயற காட்சியயே, எவ்ளோவாட்டிதாங்க பாக்குறது?
ரெண்டு ஹீரோவுல ஒருத்தன் பேசுறதே புரியமாட்டேங்குது ! அஷ்ஷு, புஷ்ஷு ன்னு பேசினான்.நா எதோ ஜார்ஜு புஷ்ஷப்பத்திதான் பேசுறானோன்னு நெனச்சுகிட்டிருந்தேன்..கெளபாய் ஆக்ஸெண்ட்டாமில்ல! மாட்டுப்பயக பேசுறது மனுஷனுக்கு எப்டீங்க புரியும்? கஷ்டம்டா!
குதிர மேயுறதயே காட்டி, படத்த ஒண்றர மணிக்கு இளுக்கறாங்க.அப்புறம் அந்த ரெண்டு பேரோட காதல், அவுக கஸ்மாலம், ச்ச்சீ![மொற பொண்ணுங்களோட] கண்ணாலம்,கொளந்த குட்டீ எல்லாத்தையும் காட்டிபுட்டாங்க.. அப்புறம் அந்த ரெண்டு மாட்டுப்பயக ஜாலிலோ ஜிம்கானா பண்ணறதையும் காட்டுறாங்க.
படம் முடியற 10 நிமிஷத்துக்கு முன்னாடி, எங்க தியேட்டருல, கரண்டு கட்டாயிடுச்சு! படம் முடிஞ்சிருச்சுன்னு நெனச்சு 20 பேரு கெளம்பிட்டாங்க! அப்பதான் தியேட்டர் மானேஜர் ஓடி வந்து "யோவ்! படம் இன்னும் முடியலய்யா" ன்னு ஞானோதயம் சொன்னாரு!" அதுதாங்க படத்துலயே ரொம்ப காமெடியான பார்ட்டு! அதுவரைக்கும் சோந்துருந்த தியேட்டர் மக்கள் ஒரே சிரிப்பு!
ப்ரோக்பாக் மவுன்டென பத்தி,பேப்பரு, டிவி, இன்டர்னெட்டு எல்லத்துலயுந்தான் படிச்சேன்.ஆனா ஒருத்தர் கூட ஷாட்டுக்கு ஷாட்டு கண்றாவியா ஸ்க்ரீனுல தெரியுற அந்த 'பூம் மைக்'கப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?நம்ம சவுண்டு பார்டியும் சத்தம் போடாம குந்திகுனுக்குறாரு?
ஆனா ஒண்னு நெசம்பா. ப்ரோக்பாக் மவுன்டெனுக்கு ஏன் 'பெஸ்டு ஃபிலிம்' ஆஸ்காரு கிடைக்கலன்னு எனக்கு இப்போ புரியுது. ஆஸ்காரு ஜூரி, படம் பாக்க உக்காந்தப்ப அங்க கரண்டு கட் ஆயிருக்கும். அவுகளும், படம் முடிஞ்சிருச்சுய்யா-ன்னு எளுந்து போயிருப்பாக! அப்படியே முளுசா படம் பாத்திருந்தாலும் அவுகளுக்கு புரிஞ்சிருக்குமா? அத விடுங்க டைரக்டர் ஆங் லீ அண்ணாச்சிக்கே புரிஞ்சிருக்குமான்னு சந்தேகந்தெய்ய்ன்!
இனிமே யாராவது ப்ரோக்பாக் மவுன்டென்-னு சொன்னா அவுக முதுக ஒடச்சுருவேன்!
Saturday, April 01, 2006
Friday, March 31, 2006
சிவாஜி சுடோகு!
எல்லோரும் சிவாஜி பட ஸ்டில்ஸ தங்களோட பிளாக் ல போட்டு கலக்கறாங்க. தலைவர் ஸ்டில்ல போடலாம்னு யோசிக்கறதுக்குள்ள நம்ம ஏவிஎம் சரவணன் அண்ணாச்சி தடாலங்கடியா கேஸ் போட்டுட்டாரே. இப்போதிக்கு என்ஸாய் திஸ்:-
சி வா ஜி
வா யி லே
ஜி லே பி
Left-to-right படிச்சாலும் top-to-bottom படிச்சாலும் அதே வரும்...சுடோகு மாதிரி!
Thursday, March 30, 2006
அன்புள்ள சினேகிதி...
Raquel Motila of California and Tasha Riddle of Oregon have been best friends since fifth grade
and are both pregnant with twins.They experience morning sickness and sore feet at the same time and even share their due date: June 7th.
And this is what they sing to each other every day.
பர்கர்களின் பாட்ஷா
மெக்டோனல்ட்ஸ்-ல இருபது ரூபா குடுத்து பர்கர் வாங்கி சாப்டறத்துக்கு பதிலா அஞ்சே ரூபாவுல அசத்தலான ஐட்டம்... ஜம்போ கிங் வடா பாவ்!
செம டேஸ்டு! டயட் வடாபாவும் கெடைக்குது... ஆறு ரூபா.
மும்பைல எல்லா மெயின் ரயில் ஸ்டேஷனுக்கு பக்கத்திலயும் இவங்க கடை இருக்கு.
ஜம்போ கிங் வடா பாவுல 2.69% கொழுப்புச் சத்தும் 5% ப்ரோட்டீனும் இருக்கு.
இத மாதிரி நம்ம ஊருலயும் ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.
ஜம்போ கிங் மாதிரி ' சீனா தானா வடை' ன்னு பேரு வெக்கலாமா?
தாமரையே! தாமரையே!
'Paartha Mudhal naale' from Vettaiyadu vilayadu is my latest 'Oru Maalai'.
Taamarai-Harris Jayaraj-Gowtham Menon-Bombay Jayshree combo has worked out again, brilliantly!
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தால் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்...
தூக்கம் மறந்து நான் உனை பார்த்த காட்சி கனவாக வந்ததென்று நினைத்தேன்...
The only sad part of the song is Unni Menon.. such a big disappointment..nasal , lifeless voice singing such a beautful song
:(
Thank you,
http://ammanchi.blogspot.com/2006/03/blog-post_28.html
Monday, March 27, 2006
என் இனிய ஹிந்தி மக்களே!
Saturday, March 25, 2006
மகேந்திர சிங் டோனியும் மைசூர் சாண்டல் சோப்பும்
Mahendra Singh Dhoni is the new cricketer turned endorser on the block!
Check him out, endorsing Mysore Sandal soap in a commercial which is shoddier than the 'TNSC vangi' ad (Remember the Chittu-k-kuruvi flying to its nest?). Now who's next? Gautam Gambhir on Gopal pal podi?
காந்திமதி ஸ்டைல்ல சொல்லணும்னா
மகேந்திர சிங் டோனி மைசூர் சாண்டல் சோப்ப வாங்கினானேன்னு
கௌதம் காம்பீர் கோபால் பல் பொடி வாங்கினானாம்!
Friday, March 24, 2006
இன்டர்நெட்டில் உங்கள் டப்பாவாலா
லஞ்ச் டைமில் பல ஆபீஸ் செல்லும் மும்பைகர்கள் எதிர்பார்க்கும் டப்பாவாலா இப்போது நெட்டில்! MyDabbaWala.com.