Monday, May 22, 2006

விளம்பர விளையாட்டு - 8

விளம்பர ஸ்லோகன்கள் இதோ. விளம்பரத்தை கண்டுபிடியுங்க. ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண்.

1. Pleasure up
2. அசத்தலான சமையலுக்கு
3. விழித்திடு இந்தியா விழித்திடு

Friday, May 19, 2006

ஜகஜ்ஜால கில்லாடிகள்-VI

ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ஜெ.எஸ் ஃபிலிம்ஸ், ராஜீவ் மேனன் புரொடக்ஷன்ஸ், இந்த மாதிரி விரல் விட்டு எண்ணக் கூடிய ரொம்ப சில விளம்பர இயக்குனர்கள்தான் சென்னையில இருந்தாங்க. ஆனா 2000 க்கு அப்புறம் மள மள-ன்னு இந்த எண்ணிக்கை வளர்ந்து, இப்ப க்வாலிட்டியா மும்பை முன்னணி விளம்பர இயக்குனர்கள் ரேஞ்சுக்கு விளம்பர தயாரிப்புல சென்னை ஆளுங்களும் சக்கை போடு போடறாங்க. அப்படிப்பட்ட தில்லாலங்கடியில ஒருத்தர்தான் ரோஷ்னி சந்திரன்...நம்ம ஜகஜ்ஜால கில்லாடி லேடி...விளம்பர ராணி... இது நான் அவங்களுக்கு வச்ச பேரு இல்ல. குமுதம் 3ஆம் மே இதழ்ல 86 ஆம் பக்கம் ரோஷ்னி பத்தி எழுதிருக்காங்க. அங்கிருந்து சுட்டதுதான் இந்த போஸ்டின் ஒரு பகுதி [படத்தில்: ரோஷ்னி]

லயோலவுல விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு, ராஜீவ் மேனன்கிட்ட அசிஸ்டென்டா அஞ்சு வருஷம் வேலை செஞ்சாங்க. "ராஜீவ் மேனன் அவருடைய அசிஸ்டென்ட்ஸ நம்பி பொறுப்பை ஒப்படைப்பார். அதனால துணை இயக்குனர்கள் தாமாகவே ஒரு வேலையை செஞ்சு முடிக்கற துணிச்சல் வரும்",ன்னு சொல்றாங்க ரோஷ்னி. "தப்பு பண்ணினாதான் தவறுகள் மூலமா கத்துக்க முடியும்", ன்னு ரரஜீவ் சொல்லுவாறாம். ரோஷ்னி அஞ்சு வருஷம் நல்லா வேலை கத்துகிட்டு, தனியா டைரக்ட் செய்ய முடியும்ங்கிற நம்பிக்கை வந்த பிறகு 'பிரைமரி கலர்ஸ்' ங்கிற புரொடக்ஷன் கம்பெனியை திறந்தாங்க. ராஜீவோட துணை ஒளிப்பதிவாளரா பணி புரிஞ்ச பாஸ்கரை திருமணம் செஞ்சுகிட்டு ஒரு 2 1/2 வயசு தேவதைக்கு அம்மாவாகவும், திறமையான இயக்குனர்ங்கிற பேரோட விளம்பர படங்களும் இயக்கிகிட்டு இருக்காங்க.

Posted by Picasaஇப்பல்லாம் புடவை வாங்கிற எல்லா அம்மணிகளும் வாங்கிறதுக்கி ஒரு ஒரு மாசம் முன்னாடிலேர்ந்தே தங்க சினேகிதிங்க, உறவுக்காரங்க, முக்கியமா அவங்கவங்க புருஷமார்கள் கிட்ட "எந்த கலர்? எந்த கலர்?" ன்னு ஒரே நச்சரிப்பாம். புருஷனுங்க எல்லாரும் "அது யாருப்பா ஜோதிகாவ வெச்சு "எந்த கலர்? எந்த கலர்?" ன்னு டிவியில தடுக்கி விழுந்தா விளம்பரம் பண்றதுன்னு தேடிகிட்டு இருக்காங்களாம். அய்யாக்களே! அது ரோஷ்னிதான்! மதர்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே, ரோஸ் டே, மல்லி டே மாதிரி நாட்களுக்கெல்லாம் கூட புடவை வாங்கலாம்னு ஐடியா குடுக்கறீங்களே ரோஷ்னி, இது நியாயமா?

இதே மாதிரி சில வருஷங்களுக்கு முன்னாடி எல்லா தமிழ்நாட்டு அம்மாக்களும் தங்க பொண்ணுங்களுக்கிட்ட "குளிக்காத! .. மீரா இல்லைன்னா குளிக்காத!" ன்னு ஒரே ரகளை! ஞாபகமிருக்கா? அந்த ரகளைக்கு காரணம் ரோஷ்னிதான்.
ரோஷ்னியோட வெற்றியின் ரகசியம் பொறுமைதான்னு அவங்க நம்பறாங்க. வெகு சில பெண்கள் மட்டுமே விளம்பர டைரக்டரா இருக்காங்க. பெரும்பாலான்வங்க, அவங்க கணவன் டைரக்ட் பண்ற விளம்பரங்களுக்கு புரொட்யூசரா மட்டுமே இருக்காங்க. ஏன்னா விளம்பர டைரக்டருக்கு பொறுப்புகள் ஏராளம். மாடல்ஸ், காஸ்டியூம், பிராபர்டி, பேக் ஷாட், விளம்பர ஏஜென்சி 'கவனிப்பு' ன்னு ஏகப்பட்டது இருக்கு.இதோட குடும்ப பொறுப்புகளும் சேர்ந்து மானேஜ் பண்றது சுலபமில்ல. அந்த விஷயத்துல எல்லாத்தையும் திறம்பட பொறுமையா செய்யறாங்க ரோஷ்னி.

"விளம்பரத்துறையில் நுழையும் பெண்கள் 'அம்மா திட்டறாங்க' ன்னு பாதியிலே போயிடறாங்க"ங்கிறது ரோஷ்னியோட ஆதங்கம். 'பொறுமையா வேலை பாத்தா விளம்பரத்துறையில பெண்கள் அசத்தலாம்" என்பது அவங்க கருத்து.

திறமை, பொறுமை இந்த இரண்டு முக்கியமான குணங்களோட gifted ரோஷ்னி, இன்னும் 2-3 வருஷத்துல இந்தியாவின் முன்னணி விளம்பர இயக்குனர்களில் ஒருத்தரா வருவாங்க-ங்கிறதில சந்தேகமே இல்லை.
நன்றி: குமுதம்

Wednesday, May 17, 2006

வார்த்தை வித்தை-4

சித்தி கலக்கல். விடை: ஆயிரம், ஆரம், ஆம்.
மொத்தம் : சித்தி : 2 1/4 [ரெண்டேகால்] பாயிண்டுகள். யாரோ: 1/4 [கால்] பாயிண்டு.

வார்த்தை வித்தை-4

க்ளூ 1: அடையாளம் _ _ _ _
க்ளூ 2: கோபம் _ _ _
க்ளூ 3: செல்ஃபோன் _ _

Update: பிரகாஷ், கங்கிராட்ஸ்!
பாயிண்ட்ஸ் விவரம் : சித்தி : 2 1/4
பிரகாஷ்: 1
யாரோ : 1/4

Tuesday, May 16, 2006

விளம்பர விளையாட்டு - 7

விவி-6: http://blogeswari.blogspot.com/2006/05/2.html -இல் வந்த அதே விளம்பரம்தான் இதுவும்.. லைஃப்பாய் :)


இங்க ரெண்டு பேரு சல்சா ஜல்சா பண்றாங்க.. அவங்க யாரு? எந்த விளம்பரம் இது? விளம்பரம் பேரை சொன்னா ஒரு பாயிண்டு. நடனமாடறவங்க பேருக்கு தலா அரை பாயிண்டு.
Update: பாவைக்கு பாயிண்டுகள் 1 1/2 . Hide and Seek biscuits... Hrithik Roshan and Isha sharvani. மதிப்பெண்கள் விவரம்:
கும்மி : 3 மதிப்பெண்கள்
பாவை: 2 மதிப்பெண்கள்

Monday, May 15, 2006

வார்த்தை வித்தை-3

வார்த்தை வித்தை-II விடைகள் : வாஞ்சி, வாசி, வா. வாழ்த்துக்கள், சித்தி உங்களுக்கு 1 பாயிண்டு. மொத்தம் சித்தி:1 1/4 மதிப்பெண்கள். யாரோ: 1/4 மதிப்பெண்கள்

வார்த்தை வித்தை-III

க்ளூ 1: பத்து,பத்து,பத்து _ _ _ _
க்ளூ 2: மாலை _ _ _
க்ளூ 3: சரி _ _

வார்த்தை வித்தை-2

வார்த்தை வித்தை-I விடைகள் : விளக்கு, விக்கு, விக்.சித்திக்கு 1/4 பாயிண்டுதான். ஏன்னா, 'விக்கு' இரண்டாம் வார்த்தை, மூன்றாவது அல்ல.
'யாரோ'வுக்கும் கால் பாயிண்டுதான். நன்றி கும்மி. என்ன, விளம்பர விளையாட்டை முடிக்கவே இல்லையே?
வார்த்தை வித்தை-II
க்ளூ 1: மணியாச்சி _ _ _
க்ளூ 2: படி _ _
க்ளூ 3: போகாதே _
இங்கே முதன் முறையாக வந்திருப்பவர்கள் http://blogeswari.blogspot.com/2006/05/i_14.html பார்க்கவும்.

Sunday, May 14, 2006

வார்த்தை வித்தை-1

மூன்று க்ளூ தருவேன். ஒவ்வொரு க்ளூவையும் பயன்படுத்தி, அதுக்கேத்த வார்த்தையை கண்டுபிடிக்கணும்.முதல் வார்த்தையின் ஒரு எழுத்தை எடுத்திட்டா, இரண்டாம் வார்த்தை, அதுல ஒரு எழுத்து அம்பேல் ஆனா மூன்றாம் வார்த்தை.

எடுத்துக்காட்டு:

க்ளூ 1: ஜாலம் _ _ _
க்ளூ 2: நடு _ _
க்ளூ 3: திருமண மாதம் _

விடை: வித்தை, விதை, தை

சரி, விளையாடத் தயாரா?

வார்த்தை வித்தை-I

க்ளூ 1: தீபம் _ _ _ _
க்ளூ 2:தாள வாத்தியர் பெயரின் பகுதி _ _ _
க்ளூ 3: டோபா _ _

தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம். மூன்று வார்த்தைகளயும் கண்டுபிடித்து, முதலில் சரியாக சொல்பவருக்கு 1 மதிப்பெண். இரண்டு வார்த்தைகளை கண்டுபிடித்தால் 1/2 மதிப்பெண், ஒரு வார்த்தைக்கு 1/4 மதிப்பெண். ஆனால் முதலில் ஒரே வார்த்தையை கண்டுபிடித்தவரின் துணையுடன் மற்ற இரண்டையும் இன்னொருவர் சரியாகச் சொன்னால், முதல் நபருக்கு 1/4 மதிப்பெண்ணும், இரண்டாமவருக்கு 3/4 மதிப்பெண்ணும் கிடைக்கும்.

ஆல் த பெஸ்ட்!

விளம்பர விளையாட்டு - 6

hmm.. பாவைக்கு அரை பாயிண்டு, கும்மிக்கு அரை பாயிண்டு. விளம்பர விளையாட்டு-V க்கான விடை டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்.

இந்த பையன் ஃபோன் பண்ற விளம்பரம் எது? இதைப் பத்தியும் வலைஞ்சிருக்கேன்.குட் லக்!

Friday, May 12, 2006

விளம்பர விளையாட்டு - 5

ஆஹா! இரண்டரை பாயிண்ட் எடுத்திருக்கீங்க,கும்மி! தலை நிமிர்ந்து நடங்க.. 'சர் உடா கே பியோ'- இதுதான் கோகா கோலா-வோட பேஸ் லைன்.. அதுதான் தலைநிமிர்ந்து நடங்கன்னு நம்ம பாஷைல மருவி.. ஹி..ஹி..கும்மி, கங்கிராட்ஸ் அகேய்ன்!விளம்பர விளையாட்டு -IV வின்னர் நீங்கதான். அது கோகாகோலா -ஆமிர் கான் ஜப்பானி விளம்பரம்.அஞ்சன் ஸ்ரீவாத்ஸவாவோட சாயத்தை ஆமிர் மெனு கார்டை காட்டி வெளுக்க, அப்ப அஞ்சன் பேந்த பேந்த விழிக்க..அந்த எக்ஸ்பிரஷந்தான் வி.வி-IV ல நீங்க பாத்தது..


Demolition man டோனி வர்ற எந்த விளம்பரம் இது? இப்பல்லாம் டோனி, விளம்பர கான்ட்ராக்ட்ஸ் சைன் பண்ற வேகம், அவரு விளாசர ரன் ரேட் வேகத்தைவிட அதிகமா கீது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்றாரு போல. அது சரி, அப்புறம் டென்னிஸ் எல்போ, கிரிக்கெட் முட்டி,கால்ஃப் புஜம் -இங்கெல்லாம் அடி பட்டு ஊட்டுல குந்திகினா எவனும் சீண்ட மாட்டான். வாட் சே?
க்ளூ: இதே பிராடக்டை ஒரு தமிழ் நடிகர்.. ஒகே..ஒகே.. ஹார்ட்-த்ராப் நடிகர் endorse பண்ணறாரு.

Thursday, May 11, 2006

விளம்பர விளையாட்டு - 4

ஒகே.. வாழ்த்துக்கள்...கும்மியடிங்க..ஸாரி.. க்ளாப் அடிங்க...அது நெஸ்கஃபே விளம்பரம்தான். கேப்ஸ்-க்கும் ஒரு ஓஹோ!அம்பி, ஒன் மோர் சான்ஸ்,யூ கோட்டை உட்டுஃபைட். சரி,அடுத்தது..இந்த மனுஷன் எதைப் பார்த்து இப்படி வாயை பொளக்கிறார்? எந்த விளம்பரம் இது?

க்ளூ: விவி-III வின்னரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு சின்ன க்ளூ.இந்த விளம்பரம் என்னோட முந்தைய பதிவு ஒண்ணுத்துல வந்திருக்கு. தலைய தூக்கி பாருங்க. இது நடிகர் போமன் இரானி இல்ல, அஞ்சன் ஸ்ரீவாத்ஸவா. remember வாக்லே கீ துனியா?தலைய தூக்கி பாருங்க.

Wednesday, May 10, 2006

விளம்பர விளையாட்டு -3

வோக்கேஸ்!விளம்பரவிளையாட்டு- II வுல 'சோப்பு' னு சொன்னதால, குமரகுரு அலைஸ் கும்மிக்கு அரை பாயிண்டு குடுக்கலாம்னு நெனைக்கறேன். அது, லைஃப்பாய் சோப்பு விளம்பரம். அதுல நடிச்சவங்க அனு ஹாசன். டைரக்டர்: நிர்வாணா ஃபிலிம்ஸ்.விவி-III: அம்பியின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு ஈஸியான கேள்வி. இந்த பொண்ணு எந்த விளம்பரத்துல வர்றா? இது டுபுக்கு விளம்பரம் அல்ல..சும்மா படத்துக்கு அந்த பேரு வெச்சு அப்லோட் பண்ணேன். அஹெம் அஹெம்.. ஸாரி அம்பி, ஐஸ்வர்யா ராய் படத்தை போட முடியல.. அடுத்த முறை உனக்காக, கண்டிப்பா, ஐஸ் ஆண்டியோட லக்ஸ் விளம்பரத்தைப் போடறேன், சரியா? அழுவாத.. வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்..

Tuesday, May 09, 2006

விளம்பர விளையாட்டு - 2

வி.வி-I விடை: எம்.டீ.எச் [சாட்] மசாலா. இந்த விளம்பரத்துக்கும் சரவணா, வசந்த்& கோ. விளம்பரங்களுக்கும் உள்ள ஒற்றுமை:- சரவணா, வசந்த் & கோ. மாதிரியே அவரோட எல்லா விளம்பரங்கள்ளயும் தலைய காட்டுவார் எம்.டீ.எச் ஓனர் [அந்த ரெட் தலைப்பாகை].What a similarity I say?வி.வி-I, no winners :(


வி.வி-II - இந்த பெண்ணோட புகைப்படம் எந்த விளம்பரத்திலேர்ந்து எடுக்கப்பட்டது? உத்துப் பாருங்க... இவங்க ஒரு குணச்சித்திர நடிகை cum லைன் ப்ரொட்யூசர்.இந்த விளம்பரம் இப்ப டீவியில அடிக்கடி வருது.
ps: ஒரு A Category மூக்கு நடிகருடன் விளம்பரத்துல பணிபுரியற வாய்ப்பு வந்துருக்கு. [நான் நடிக்கறேன்னு சொல்லலியே?ஹி ஹி].Details later. அவரு நாசர் இல்லப்பா...கீப் கெஸ்ஸிங்.

Monday, May 08, 2006

சின்னப் புறா ரெண்டு...

ரெண்டு வாரமா எங்க வீட்டு பால்கனியில ரெண்டு முட்டைகளை அடை காத்து வந்த அம்மா புறாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமைதான் டெலிவரி ஆச்சு.
ட்வின்ஸ் பொறந்த சந்தோஷத்துல நாங்க பாயசம் செஞ்சு சாப்பிட்டோம் :)

பேரு என்ன வைக்கலாம்? சீசனுக்கு ஏத்த மாதிரி ஒல்ட் இஸ் கோல்டா 'அம்மா' & 'கலைஞர்' னு வெக்கலாமா? இல்ல யங்(!) ஜெனரேஷனுக்கு பொறுத்தமா 'விஜி' , 'சரத்', 'நெப்போலியன்','சிம்ரன்' ன்னு வெக்கலாமா? தேர்தல் ரிசல்ட் வந்தப்புறம் சூட்டபிளா வச்சுக்கலாம்? Waat say?

Sunday, May 07, 2006

விளம்பர விளையாட்டு - I

ஏதாவது ஒரு விளம்பரத்திலேர்ந்து ஒரு ஃப்ரேமை நான் இங்க போஸ்ட் பண்ணுவேன். அது எந்த விளம்பரம்னு நீங்க கண்டுபிடிக்கணும்.
உங்க விளம்பர கோஷன்ட டெஸ்ட் பண்ண ரெடியா?
முதல் போஸ்ட் :- இந்த விளம்பரத்துக்கும் சரவணா ஸ்டோர்ஸ் & வசந்த்&கோ. விளம்பரங்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.அதுதான் க்ளூ. இது எந்த விளம்பரம்னு கண்டுபிடிங்க. ஆல் த பெஸ்ட்!

Thursday, May 04, 2006

ஜகஜ்ஜால கில்லாடிகள்- V

ப்ரசூன் பாண்டே- விளம்பர உலகின் முடிசூடா மன்னன்...ஜகஜ்ஜால ஜாம்பவான். ப்ரஹலாத் கக்கர் விளம்பர டைரக்டர்களில் சூப்பர் ஸ்டார்னா, ப்ரசூன் பாண்டே விளம்பர 'உலக நாயகன்'. செயிண்ட் க்சேவியர் காலேஜ் மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிசைன் மாணவர். லிண்டாஸ்ல க்ரியேடிவ் டைரக்டரா இருந்துட்டு, ஹைலைட் ஃபிலிம்ஸ்ல டைரக்டரா பணிபுரிஞ்சாரு. அப்புறம் தனியா சில வருஷங்களுக்கு முன்னாடி கார்காய்ஸ்னு ஒரு ப்ரொடக்ஷன் கம்பெனிய தொடங்கி விளம்பரங்களை இயக்கிகிட்டு வர்றாரு. "கார்காய்ஸ்? அப்படின்னா என்ன? "ன்னு கேக்கறவங்களுக்கு ஒரு கொசுறுத் தகவல்: தனியா ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தை தொடங்கி, அதுக்கு என்ன பேரு வைக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கறப்பதான், ப்ரசூன் வீட்டுச் செல்லக் குட்டி.. அவரோட பொண்ணு, எதையோ வரைஞ்சி அப்பாகிட்ட காமிச்சா, அந்த பேப்பரைப் பாத்த ப்ரசூன் "அது என்ன?"ன்னு கேக்க, "இது தான் கார்காய்ஸ்"னு பதில் சொல்லிருக்கு பொண்ணு. ப்ரசூனுக்கு அந்த பேரும் வரைபடமும் பிடிச்சுப்போக, படம் லோகோவா மாற, கார்காய்ஸ் கம்பெனி பேரா உருவெடுத்தது. கார்காய்ஸ பாருங்க.. க்யூட்+டார்டாய்ஸ்= கார்காய்ஸ்?ப்ரசூன் வீட்டு சின்னக் குட்டியும் விளம்பர மொழி பேசுமோ?

One Black coffee please! - நான் காஃபி கேக்கலை.. எரிக்ஸன் விளம்பரத்தைப் பத்திதான் எழுதறேன்னு கரெக்டா கண்டுபிடிச்சிருப்பீங்க...That's the power of advertisement films! ஒரு டயலாக்க வெச்சே எந்த விளம்பரம்னு சொல்ல முடிஞ்சா, அதுவும் ஏறக்குறைய 8 வருஷங்களுக்கு அப்புறம் அது அந்த விளம்பர டைரக்டருக்கும் ஏஜென்சிக்கும் வெற்றிதானே? எனக்குத் தெரிஞ்சி, கிரிக்கெட் வர்ல்ட் கப் சமயம் அடிக்கடி ஒளிபரப்பான இந்த விளம்பரத்தை, அந்த ப்ளாக் காஃபி லைனுக்கும் அந்த லேடியோட [கவிதா கபூர்] எக்ஸ்பிரஷன் ப்ளஸ் நம்ம ஹீரோவோட embarassement கலந்த ஒரு மாதிரியான பெயர் சொல்ல முடியாத எக்ஸ்பிரஷனுக்கு மட்டுமே நிறைய பேர் ஃபேன்ஸ் ஆனாங்க. கோலிவுட் உலக நாயகன் ஆஸ்கர் அவார்டு வாங்குவாரோ இல்லையோ, நம்ம விளம்பர உலக நாயகன்தான் இந்தியாவுக்கான முதல் கான்ஸ் விருதை எரிக்ஸன் விளம்பரத்துக்காக வாங்கித்தந்தாரு!எவ்வளவு பெருமையான விஷயம் இல்ல?

Posted by Picasa அடுத்த விளம்பரத்தைப் பத்தி எழுதறத்துக்கு முன்னாடி ஒரு சின்ன apology.எல்லா SBI விளம்பரங்களையும் டைரக்ட் செஞ்சது நம்ம ஜகஜ்ஜால கில்லாடி-I அபிநய் தியோ-ன்னு நெனச்சு, அடுத்த வர்ற விளம்பரத்தை அவரோட பக்கத்துல தவறா போட்டு இருந்தேன். அதை டைரக்ட் செஞ்சது ப்ரசூன்.சீனியர் சிட்டிசன் வாலண்டைன்ஸ் டே கொண்டாடுறாங்க...பாருங்க.தாத்தா, பாட்டியோட நாச்சுரல் ஆக்டிங்க ரசியுங்க.

ஒரு குடும்பம் ஊருக்கு கிளம்ப எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு பஸ்லயும் டிரெயின்லயும் இடிபட்டு கடைசியா ஆட்டோவுல ஒரு பங்களாவுல வந்து இறங்கறாங்க. அதே சமயம் அந்த பங்களாவை விட்டு ஒரு கார் போகறதை அவங்க பாக்கல. இவங்க கதவை தட்ட தட்ட அந்த வீட்டுலேர்ந்து no response."ஏங்க நாம வர்றோம்ன்னு கடுதாசி போட்டீங்கல்ல"ன்னு கணவனைப் பாத்து மனைவி கேக்க, அப்ப ஸார் போஸ்ட் வந்து ஒரு கடுதாசிய இவங்க கையில திணிச்சுட்டு போகறாரு. பாவம்! இவங்க போட்ட லெட்டரை இவங்களே கலெக்ட் செஞ்சுக்க வேண்டிய பரிதாபம்! அப்செட்டா திரும்பவும் ஊருக்கே கிளம்பராங்க. வாய்ஸ் ஓவர் சொல்லுது "யாஹூ.சிஓ.ஐஎன்-ல ஒரு மெயில் அனுப்பலாமே?" கட் பண்ணா தலைவர் "டியர் பிரதர்..." னு ஈமெயில் அனுப்பத் தொடங்க[மெயில் சப்ஜெக்ட்:கமிங் ஃபார் ஏ ஹாலிடே], அந்த பக்கம் கட் பண்ணா, "உங்க தம்பி குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு வர்றாராம்"ன்னு ஈமெயில் படிச்சுகிட்டே அண்ணி, அண்ணன்கிட்ட சலிப்போட சொல்றாங்க. இதை கேட்ட அண்ணன்காரன் தன் பசங்ககிட்ட "எல்லாத்தையும் பேக் பண்ணுங்க.. ஓடணும்"ங்கிறார். "டூ யு யாஹூ?" ன்னு வாய்ஸ் ஓவர் சொல்ல படம் முடியுது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்ல படிச்சதால ப்ரசூனோட டீடெய்லிங் பக்காவா இருக்கும். யாஹூ குடும்பங்களை யதார்த்தமா சித்தரிச்சு, அவங்க காஸ்டியூம், ப்ராப்ஸ், வீடு, சிவப்பு கார், டேபிள் இன்ன பிற அயிட்டம் எல்லாத்தையும் கவனமா செஞ்சிருக்காரு டைரக்டர். இந்த காமெடி விளம்பரத்துல எந்த கதாபாத்திரமும் காரிகேச்சரா சித்தரிக்கப்படலை, யாருமே காமெடியா பேசவோ, நடிக்கவோ இல்ல. ஆனா விளம்பரத்தைப் பாத்தப்புறம் நம்மள அறியாம நம்ம முகத்துல ஒரு சின்ன ஸ்மைல் வர்றது உறுதி.

ட்ரக் மேல உக்காந்துகிட்டிருக்காரு ஒரு ராஜஸ்தானி கிராமத்து ஆள். அடுத்த ஷாட்டுல அந்த ஓடுற ட்ரக் மேல, அவருக்கு பக்கத்துல, பின்னாடி, முன்னாடி ஃபுல்லா ஆட்கள். ட்ரக் உள்ளாறயும் மக்கள்.. ட்ரக் வெளியில அதோட ஒட்டிக்கிட்டு ட்ரக்க புடிச்சுகிட்டே மக்கள்.. ஓருத்தர் மேல ஒருத்தர் உட்காராத குறையா மக்கள் மக்கள் மக்கள்.. ட்ரக் பின்னாடி கட் பண்ணா அங்க "ஃபெவிகால்-தி அல்டிமேட் அட்ஹெசிவ்" ன்னு எழுதியிருக்கு. ஆஹா! ஃபெவிகால்-னு எழுதியிருக்கும் போதே அதுக்கு இவ்வளவு பேரையும் விழாம பிடிச்சு வெச்சியிருக்கற சக்தியா? அட்றா சக்கை!அட்றா சக்கை!அட்றா சக்கை! பல அவார்டுகளை அள்ளிக் குடுத்த ப்ரசூனின் கைவண்ணம் இந்த விளம்பரம். ஃபெவிகாலுக்கு நெறைய விளம்பரங்கள் பண்ணியிருக்காரு ப்ரசூன். ஃபெவிகாலின் ஆஸ்தான விளம்பர இயக்குனர் இவரு.

நீங்க க்ளோசப்புக்கு மாறலையா? ப்ரசூன் அண்ணாச்சி கே.எல் சைகல் ஸ்டைல்ல பலகுரல் மன்னன் சேத்தன் சஷிதல்ல 'க்யா ஆஃப் க்ளோசப் கர்தே ஹே?' னு பாட வச்சு, தமிழுக்காக திருச்சி லோகநாதன் ஸ்டைல்ல 'க்ளோசப்புக்கு மாறலையா?' னு ஒரு ஜிங்கிள் வச்சு, அதுக்கு ஏத்த மாதிரி ரெட்ரோ ஸ்டைல்ல சூப்பரா விளம்பரம் பண்ணியும் நீங்க க்ளோசப்புக்கு மாறலயா?

அடுத்த விளம்பரத்தைப் பத்தி சொன்னா அவ்வளவுதான்! "கலக்கற ப்ரசூன்! புது ஜூரி, புது விளம்பரம், புது அவார்டு.. பிரமாதம்"-னு நீங்களே சொல்லப்போறீங்க! ஏஷியன் பெயிண்ட்ஸ்- பிரமாதம்!

மரணத்தின் பிடியில் ஒரு வயதான கிழவர். அவரோட பெட்டுக்கிட்ட ஒரு நர்ஸ், டாக்டர், லாயர், கிழவரோட உறவினர்கள்.. குறிப்பா, ரெளடி லுக்குல அவரோட பையன்.. பையங்கிட்ட உயில நீட்டுறாரு லாயர்.அதைப் படிச்ச பையனுக்கு செம அதிருப்தி."என்னப்பா இதுல என்னோட [இங்க] வந்து போகற செலவே ஆயிடுமே" ன்னு அப்பாகிட்ட சலிச்சுகறான் .அப்பா ம்சியல. அப்பா காதுல ஏதோ முணுமுணுக்குறான் அவன். உடனே பணிஞ்ச அப்பா கிழவர் உயில்ல ஏதோ எழுதறாரு... அதுதான் அவன் பங்குல மூணு எக்ஸ்ட்ரா ஜீரோவை.சந்தோஷமான பையன், நர்ஸ்கிட்ட "ம்ம்..அவருக்கு மருந்தை குடு" ன்னு ஆர்டர் போடறான். அப்படியே உயில கையுல எடுத்துகிட்டு அந்த ஜீரோக்களை கண்கொட்டாம பாத்துகிட்டு வந்த பையனோட மகிழ்ச்சியில, வில்லன் மாதிரி ஒழுகுற கூரைலேர்ந்து ஒரு துளி மழைத் தண்ணி.. அது அப்படியே வந்து உயில்ல இருக்கற பற்பல ஜீரோக்களுக்கு முன்னாடியிருக்குற '1'ங்கிற நம்பர அழிச்சிடுது...உயில்ல அவன் பேருக்கு நேரா ஆறு ஜீரோ மட்டுமே மிச்சமிருக்கு.. "ஒரு துளி நீர் உங்க வாழ்க்கையையே மாத்திடும்..வீட்டுல எப்போமே எம்-சீல் இருக்கட்டும்" ன்னு அறிவுறுத்துது வாய்ஸ் ஓவர்.கடைசி ஷாட்டுல பேக்ரவுண்டுல கிழவர் சாக, மகன் "அப்ப்ப்பா" ன்னு அழறான். அவன் எதுக்கு அழறான்னு சொல்லவும் வேணுமா?கிழவரா நடிக்க, மகனா மனோஜ் பாவா.விளம்பரத்துல ஆக்சுவல் சிச்சுவேஷன்- ஒரு ஆள் சாகக் கிடக்குறாரு. ஆனா அதை வச்சே காமெடி பண்ண முடியும்ன்னு நிரூபிச்சிருக்காரு ப்ரசூன்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, பெவி க்விக், பெமினா, பல அவார்டு வாங்கின செண்டர் ஷாக்.. இப்படி இவரு கைவண்ணத்தில் உருவான கார்காய்ஸ் காவியங்கள் ஏராளம்.. ஏராளம்!

ப்ரசூன்கிட்ட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம் ஏஜென்சி ஆளுங்கள அவரு ட்ரீட் பண்ணறவிதம். பொதுவாவே ஏஜென்சிலேர்ந்து க்ரியேட்டிவ், சர்வீஸிங், ஃபிலிம் டிபார்ட்மென்ட் மக்கள் எல்லாரும் தங்களை ஒரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி நெனச்சுப்பாங்க. அவங்க உடுர பீட்டரும், பேசற பேச்சும், 'அந்த ஷாட்டை இப்படி வை, அப்படி கட் பண்ணு'னு ஷூட்டிங், எடிட்டிங்-ல டைரக்டரோட வேலையில interfere பண்ணற ரவுசும் அனுபவப்பட்டாதான் தெரியும். டைரக்டருங்களும் இவங்கள பகைச்சுக்க முடியாம [அடுத்த ஃபிலிம் இவங்க தயவுல வேணுமே!] கல்யாணத்துல பொண்ணு வீட்டுக்காரங்க மாதிரி பூம் பூம் மாடு மாதிரி சொல்றதுக்கெல்லாம் தலைய ஆட்டுவாங்க. ஆனால் ப்ரசூன் அண்ணன் நேர் எதிர். இவருக்கு ஸ்கிரிப்ட் பிடிக்கலைன்னா படத்தை டைரக்ட் பண்ண மாட்டாரு. எடிட்டிங் ஸ்டூடியோவ விட்டு ஏஜென்சி ஆளுங்க ஒரு காத தூரம் தள்ளியே நிக்கணும்.ஃபிலிம் எடிட் பண்ணி முடிச்சப்புறம் ஃபைனல் ப்ரசென்டேஷன்போது மட்டுமே ஏஜென்சிக்கு என்ட்ரீ.ஏஜென்சி ஆளுங்க ரொம்ப ரவுசு விட்டா "போடா" ன்னு ஃபிலிம திரும்ப தந்திடுவாரு. மத்த டைரக்டருங்க எல்லாம் ஏஜென்சி வாசல்ல ஃபிலிம் பிச்சைக்காக ஏங்கி காத்திருக்க ப்ரசூன் மாதிரி, தாது, அபினய், ப்ரஹலாத் கக்கர் மாதிரி ஒரு சில டைரக்டர்ஸ் வாசல்ல மட்டுமே ஏஜென்சி ஆளுங்க தவங்கிடக்கறதை பாக்கலாம்.

ஒரு குட் நியூஸ்-இந்த வருஷம் கான்ஸ் விருது ஜூரியில ப்ரசூனும் ஒரு மெம்பர்.இவங்க குடும்பத்துல ஜூரியா இருக்கறது ஒண்ணும் புதுசில்ல. ப்ரசூனோட அண்ணன் விளம்பர வித்தகர் பியுஷ் பாண்டேவும் சில வருஷங்களுக்கு முன்னாடி ஜூரி மெம்பர்தான். ப்ரசூனோட அக்காதான் 'சோலி கே பீசே க்யா ஹை' புகழ் ஈலா அருண்.
"என்னங்க? ஜகஜ்ஜால கில்லாடில ஒரு லேடிகூட இல்லையா?"ன்னு நீங்க கேக்கறது காதுல விழுது. விளம்பர ராணி வந்துகிட்டே இருக்காங்க.