Saturday, November 29, 2008

நேற்று....

நேற்று- வெள்ளி: "ஏதோ ஒரு மாதிரி இருக்குல்ல... சே! என்னவெல்லாம் நடந்திடுச்சு! Very sad very very sad" என்று எழுந்தவுடனேயே கணவரின் பேச்சு. ஆபிஸ் செல்லும் வழியில் காலை 7:45 க்கு வழக்கத்திற்கு மாறாக சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன. 45 நிமிடப் பயணம் 25 நிமிடத்திலேயே முடிந்தது. Our team was doing a splendid job informing people on trains, schools, offices. அப்பொழுதுதான் the real power of Radio என்னவென்று தெரிந்தது. "இன்று ட்ரெயின்கள் ஓடுமா?" விலிருந்து தொடங்கி, "தீவிரவாதிகளை எப்போது மீட்பார்கள்? " போன்ற பலதரப்பட்ட கேள்விகளையும் சந்திக்க நேர்ந்தது. ஏதோ என்னால் முடிந்த உதவியாக எனக்கு தெரிந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், ஆபீஸ் செல்வோரை தொடர்பு கொண்டு தகவல் அளித்துவந்தேன்.


முன்னதாக வியாழக்கிழமை, அலுவலகத்தில் RJ, producer மற்றும் பாஸ் கொண்ட ஆறேழு பேர் மட்டுமே இருந்ததால், Creatives , promos அனைத்தும் மற்ற 31 கிளை அலுவலகத்திற்கு பேக்கேஜ் செய்யப்படுவதற்கு அனுப்பப்பட்டன. மேலும், மற்ற ஸ்டேஷன்கள் உதவியுடன் இந்திய மக்கள் அனைவரும் ரேடியோவில் தங்கள் எண்ணங்களை பேசியவண்ணம் இருந்தனர்.

நேற்று வெள்ளி - காலை 10 மணி

ஆபீஸில் பத்தரை மணிக்குள் அனைவரும் வந்து சேர்ந்தனர். "பா...... ஒழிக்க வேண்டும்" என்றனர் பலர். "என்னுடைய தோழியின் தோழனின் திருமண ரிசெப்ஷன் தாஜ் ஹோட்டலில்... மாப்பிள்ளைத் தோழன் பிரிட்டிஷ் நாட்டிலிருந்து வந்திருந்தான். தீவிரவாதிகளின் குண்டுக்கு பலியானான்" என்றாள் ஒரு Colleague. "இனி மும்பை ஸ்பிரிட், அது இது என்று மூச்சுவிடக்கூடாது , "என்றார் பாஸ்.


இதனிடையே டிவியை கண்கொட்டாமல் பார்த்தபடி பலர். "எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை" என்ற தோரணையில் , போனில் ," இத்தனை கம்மி ரேட்டிற்கு நாங்கள் ad spot விற்கமாட்டோம்", என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூவிக்கொண்டிருந்தால் ஒரு பிரஸ்பதி. அவரவர் கவலை அவரவருக்கு!

"B..... , க்ளைண்டிடமிருந்து கால் வந்தது. இன்று மாலைக்குள் கண்டிப்பாக .ppt அனுப்பவேண்டும். Don't forget!" ஆணை பிரப்பித்தான் ஒருவன், எனக்கு. ஒரு கண் டீவியில், ஒரு கண் லேப்-டாப்பில். இரு காதுகளும் ரேடியோவில் என்று ஏனோ தானோ வேலை.

வெள்ளி மதியம் 1 மணி:சலசலப்பு... "VT ஸ்டேஷனில் மறுபடியும் துப்பாக்கிச் சூடு, ம்ஸ்கான் டாக் யார்டில் குண்டு வீச்சு" என்று SMS-கள் புண்ணியத்தில் (!) தெரியவந்தன. நல்லவேளை, தென் மும்பையில் தொல்லைகாட்சிகள் Black out செய்யப்பட்டிருந்தன. மொபைல்கள் அனைத்தும் Jam செய்யப்பட்டிருந்தன.IBN Live வலைப்பதிவு இந்த VT ஸ்டேஷன் துப்பாக்கிச் சூட்டை உறுதி செய்தது. "Are you okay? ஆபிஸிலேயே இரு. கிளைண்ட் மீட்டிங் ஏதும் வேண்டாம்" என்று மொபைலில் புருஷன். என்னுடைய ப்ரெண்ட் Arj திடீரென அழத்தொடங்கினாள். மஸ்கான் டாக்கில் வேலை செய்யும் அண்ணன் நஸீரின் மொபைல் switch off ஆகியிருந்தது. அனைவரும் மாறி மாறி அதே நம்பரை ட்ரை செய்தோம். அரை மணி நேரத்திற்குப் பிறகு நம்பர் கிடைத்து அவருடன் பேசியதில் நிம்மதி.

மதியம் 2.30 மணி: "எல்லாம் புரளிப்பா" என்று கூவினர் , சுமார் 1 மணிக்கு VT ஸ்டேஷனின் McDonaldsக்கு ஃபோன் செய்து துப்பாக்கிச் சூட்டை 'உறுதி செய்து' எங்களுக்குத் தெரிவித்த சில புண்ணியவான்கள்.

மாலை 3 மணி:
"இன்று கிளையண்ட் கால்களுக்கு ரத்து" என்ற பாஸ்-இன் ஆணையை சிரத்தையுடன் டீவி பார்த்து ஃபாலோ செய்துவந்தனர் என் உடன்பிறப்புக்களான சேல்ஸ் டீம். "அனைவரும் பேட்சுக்களாக வீடு செல்லவும்" என்று சொன்னதுதான் தாமதம். "என் ad spot எப்போது வரும்? என் .ppt எப்போது வரும்?" என்று நாள் முழுக்க நச்சரித்த உடன்பிறப்புக்கள் ஜூட் விட்டனர்.

மாலை 3.30 மணி: "How are you feeling?" என்றாள் என் டெஸ்க் அருகில் அமர்ந்த colleague-RJ . "Angry... terrible..can't explain" , நான். என் முன் மைக்கை நீட்டி "உனக்கு தோணியதை பேசு. கெட்ட வார்த்தையாக இருந்தாலும் பரவாயில்லை. Beep செய்துவிடலாம்" என்றாள் அவள். முதலில் ஹிந்தியில் ஆரம்பித்த நான், ஆங்கிலத்துக்கு மாறினேன். என் முந்தைய பதிவில் கூறியதைத்தான் சொன்னேன். ஆபிஸில் உள்ள அனைவரின் எண்ண அலைகளை bytes-ஆக on-air-இல் போடப்போவதாக் சொன்னார்கள்.

மாலை 4 மணி: ப்ரொக்ராமிங் டீமில் அனைவரும் மும்முரமாக வேலை செய்துவந்தனர். மற்ற டீம்களில் ஒரு சிலர் தவிர அனைவரும் வீடுகளுக்கு கிளம்பிவிட்டிருந்தனர்.

மாலை 7 மணி: வீடு திரும்பிய நானும் டீவியின் முன்னால். துப்பாக்கிச் சூடும், குண்டுவீச்சும் டீவியில் பார்ப்பது ஏதோ சூப்பர் சிங்கர் ரியாலிடி ஷோ பார்ப்பது போன்று வாடிக்கையானது was not a great feeling. டைம்ஸ் நெள், என் டி டி வி, சி என் என் - ஐ பி என், என மாறி மாறி ரிமோட்டில் தாளம்.

இரவு 8.30 மணி -திடீரென ஒரு Thought: "இவர்களுக்கு நம்மைத் தெரியாது, நம் முகம் கூட இவர்களுக்குத் தெரியாது. ஆனால் நமது பாதுகாப்பிற்காக இவர்கள் உயிர் துறந்தனர்" என்பதை எண்ணிப் பார்த்ததில் ஒரு மாதிரியானது. அந்த ஃபீலிங்கை எனக்கு explain பண்ணத் தெரியலை. ... Something like this.

உயிர் நீத்த போலீஸ் ஆபிஸர்கள் - அஷோக் காம்தே, விஜய் சாலஸ்கர், ஹேமந்த் கர்கரே மற்றும் பெயர் தெரியாத பல போலீசார், என் எஸ் ஜீ கமாண்டோஸ், ஆர்மி வீரர்கள் இவர்களை எண்ணிப்பார்த்தோம். அவர்களுக்காக ஒரு நிமிட அஞ்சலிலையும், பத்து நிமிட கண்ணீரும் சிந்தியதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற எண்ணம் மேலும் வாட்டியது.

கடந்த ஞாயிறு பாஸ்போர்ட் reference செக்கிற்காக போலிஸ் ஸ்டேஷனில் வெயிட் செய்ததில் என்னுடைய அரை மணி நேர மதிய தூக்கம் போனதால் போலிஸ் கும்பலையே வெறுத்தது ஞாபகத்திற்கு வந்தது. வார இறுதியில் செல்லும் மால்களில் (Mall), கார் செக்கிங், பர்ஸ் செக்கிங் என்று நூறாயிரம் செக்கிங் நடக்கும் முறையயும் எள்ளி நகையாடியதும், வீ. எஸ் ரோடில் தினமும் நடக்கும் 'நாகா பந்தி'யினால் (சாலையில் Barricadeகள் வைத்து சந்தேகத்திற்குரிய வண்டிகளை செக் செய்யும் முறை) "பத்து நிமிடம் லேட்டாக வீட்டுக்குப் போகிறோமே!" என்று கணவரிடம் புலம்பியதும் நினைவிற்கு வந்தது.

இனி நம்மால் முடிந்த உறுதுணையை போலிசாருக்கு அளிக்கவேண்டும். இது நம் பாதுகாப்பிற்கே என்ற எண்ணம் மக்களிடையே வலியுறுத்தப்படவேண்டும். நமக்காக உயிர்துறந்த போலிஸ் ஆபிஸர்கள், என் எஸ் ஜி கமாண்டோக்கள் , வீரர்கள் மற்றும் இந்த operation-ல் தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு பகல் பாராமல் உழைத்த அனைவரின் உழைப்பையும் முயற்சியையும் தினமும் எண்ணிப்பார்ப்போம். Let’s co-operate better with the Police.

ஆபரேஷன் சைக்லோன்
almost முடிந்துவிட்ட நிலையில் here’s a picture outside the taj that sums it all up.

6 Responses:

RAJI MUTHUKRISHNAN said...

Heart-wrenchingly written, straight from the heart.I agree - let us think of and thank the unsung heroes.

umm oviya said...

can't say more or better B.

Karthik said...

nalla eludhirukeenga!!!

Anonymous said...

இனி நம்மால் முடிந்த உறுதுணையை போலிசாருக்கு அளிக்கவேண்டும். இது நம் பாதுகாப்பிற்கே என்ற எண்ணம் மக்களிடையே வலியுறுத்தப்படவேண்டும். நமக்காக உயிர்துறந்த போலிஸ் ஆபிஸர்கள், என் எஸ் ஜி கமாண்டோக்கள் , வீரர்கள் மற்றும் இந்த operation-ல் தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு பகல் பாராமல் உழைத்த அனைவரின் உழைப்பையும் முயற்சியையும் தினமும் எண்ணிப்பார்ப்போம். Let’s co-operate better with the Police.

....This is all we need now. a sense of belonging to the nation,the belief that we will change the system and we will be responsible for bringing about the change that we want . Only then will the deaths of our precious commandos and cops not be wasted. Thanks for writing this honest and touching post.

பிரவீன் குமார் said...

nice

Boston Bala said...

hmmmm