Wednesday, October 03, 2007

அசத்தல் அட்வர்டைஸ்மென்ட்7

சிறுவயதில், நாம் எல்லோருக்குமே சாப்பாட்டில் எதாவது ஒரு அயிட்டத்தின் மேல் அலாதி பிரியம் உண்டு. என்னைப் போன்ற சாப்பாட்டு ராமிகளுக்கு சிறுவயது என்றில்லை... ஒரு அயிட்டம் என்றில்லை.. இப்பொழுது கூட.. பற்பல ஃபேவரைட் அயிட்டம்ஸ் உண்டு. என் ஐந்து வயது nephewவிற்கு ஒரு காலத்தில்(!) தோசை என்றால் கொள்ளை ஆசை- காலை, மாலை, இரவு நேரம் பாராமல் சதா "தோசே தோசே" என்பான். பின்பு 'தோசே' ' பாஸ்தா உப்புமாவிற்கு' [சேமியா உப்புமா] விட்டுக்கொடுத்தது. இன்றைய தேதியின் ஃபேவரிட் என்ன என்பது அவனுக்கே வெளிச்சம்.

இந்த அசத்தல் அட்வர்டைஸ்மென்ட் 7 - இன் கான்செப்ட் சின்ன குழந்தைகளின் ஃபேவரிட் ஃபுட் அயிட்டம் இவைகளைக் கொண்டு அமைக்கப்பட்டதுதான்.

ஹார்லிக்ஸ் - பொதுவாக ஹார்லிக்ஸ் என்றாலே ஹாஸ்பிடல், உடல் நலமின்மை, அந்த டப்பா மூடியை வாங்கி வர மனைவிமார்கள் கணவன்மாரை நச்சரிக்கும் மலராத நினைவுகள் மட்டுமல்ல - ஹார்லிக்ஸ் அட்வர்டைஸ்மென்டும்தான் நினைவிற்கு வரும். "குடிக்கவேண்டாம் அப்டியே சாப்பிடுவேன்".. அந்த குட்டிப் பையனின் மழலை டயலாக் நினைவிருக்கிறதா? "மனூ... நான் ரொம்ப பிஸீ...." - அந்த சுட்டிப் பையன் மட்டுமா? அம்மாவாக நடித்த த்ரிஷாவும்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். இப்படி ஹார்லிக்ஸ் விளம்பரங்கள் எல்லாமே நம் நினைவில் நீங்கா இடம்பிடித்துவிட்டன.

ஹார்லிக்ஸைவிட ஜூனியர் ஹார்லிக்ஸ் விளம்பரங்கள் படு பாப்புலர். சாப்பிடப் படுத்தும் சுட்டிப்பையன்களை மையமாக வைத்து படு அமர்க்களமாக, துள்ளலாக இந்த விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. லேட்டஸ்டாக தற்போது டிவியில் வந்து கொண்டிருக்கும் ஜூனியர் ஹார்லிக்ஸ் "N for நூடுல்ஸ்" விளம்பரம் மிகப் பிரபலமாகிவிட்டது.

மூன்று வயது சிறுவன் ஒருவன் ஃபரிட்ஜைத் திறந்தவாரே "நூடுல்ஸ் எங்கே?" என்கிறான். வீட்டிலுள்ள கேஸரோல்கள் எல்லாவற்றையும் திறந்து "நூடுல்ஸ் எங்கே?" என்கிறான் அம்மாவை செல்லமாக கோபித்துக் கொண்டே! அம்மா துருவும் சீஸைப் பார்த்து "நூடுல்ஸ்!!" என்கிறான்.அம்மாவின் என்ட்ரி..."மனுவுக்கு இப்ப நூடுல்ஸ் மேல ஆசை வந்தாச்சு..." என்கிறாள். "N for Noodaaals" -இது நம்ம ஹீரோ மனு. ஆரஞ்சு சுளையை உரிக்கிறான்..நூடுல்ஸை தேடி... "இப்படி நூடுல்ஸ் சாப்பிட்டா ஆரோக்கியம் எப்படி கிடைக்கும்? அதனாலதான் ஜூனியர் ஹார்லிக்ஸ்" என்று பிராடக்டைப் பற்றிக் கூறுகிறாள் அம்மா. பின்பு ஜுனியர் ஹார்லிக்ஸில் உள்ள இத்யாதி இத்யாதி போன்றவை விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஸ்வெட்டர் பின்னும் அம்மா எடுக்கும் உல்லன் நூலைப் பார்த்து "நூடுல்ஸ்!!!!!" என்று ஆரவாரிக்கும் மனுவை அம்மா அணைக்க படம் முடிகிறது.

ஒரு படம் - அது 3 மணி நேரப்படமோ, 30 வினாடி விளம்பரப்படமோ - நாமறிந்த யாரையோ, குறிப்பாக குழந்தைகளை நினைவுறுத்தினால் அது கண்டிப்பாக ஹிட்டுதான். இந்த ஜூனியர் ஹார்லிக்ஸ் விளம்பரம் என்னை என் 'தோசே-பாஸ்தா உப்புமா-cereals' nephew-வை ஞாபகப்படுத்துகிறது. எந்த கருத்தையுமே இன்ட்ரெஸ்டிங் visuals-ஆக சொன்னால்தான் மனதில் நிற்கும். ஒரு குட்டி நாய் ஒரு மொபைல் நிறுவனத்தின் டேக்-ஒவர் - பெயர் மாற்றம் எல்லாவற்றையும் விளம்பரத்தில் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டிப்பையன் ஒரு particular ஃபுட் அயிட்டத்தை மட்டுமே சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கிறான். ஆனால் அதையே சாப்பிட்டால் சத்து கிடைக்காதே.. அதனால்... ஜூனியர் ஹார்லிக்ஸ். இந்த ஒரே Beverage- இல் உள்ள பல சத்துக்கள்
குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் என்கிற கருத்தை இன்ட்ரெஸ்டிங்காக , குட்டிக் குழந்தையின் சேட்டையுடன் நமக்கு வழங்கியுள்ளனர்.

இந்த விளம்பரத்தை தயாரித்தவர்கள் ப்ளாக் மேஜிக் மோஷன் பிக்சர்ஸ் ப்ரைவேட் லிமிடெட்(BMMP). இயக்கியவர் அவர்களின் ஆஸ்தான இயக்குனர் பெளத்தாயன் முகர்ஜி. BMMP- இல் உதவி இயக்குனராக சேர்ந்து பற்பல விளம்பரங்களில் அபிஜித் சவுத்ரி- அர்ஜுன் கெளரிசாரியா இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி கடந்த சில வருடங்களாக அவருடைய சொந்த பாணியில் பல விளம்பரங்களை தனித்து இயக்கி வருகிறார்.

இந்த விளம்பரத்தின் ஹீரோ - மனுவாக நடித்த ஆரியன் ஃபெர்னான்டஸுக்கு இதுவே முதல் படம். மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு அண்மையில் குடிபெயர்ந்தது இந்த மூன்று வயது வாண்டின் குடும்பம் . படப்பிடிப்பிற்கு முன்னரே இயக்குனருடன் இரண்டு வெவ்வேறு நாட்களில் rehearsal செய்தாராம் இந்த குட்டி ஹீரோ. இயக்குனர் வீட்டில் நடந்த ஒரு rehearsal இன் போதுதான், இயக்குனரின் 3 வயது மகள் ஆர்ஷா முகர்ஜியுடன் பயங்கர ஜிகிரியாகிவிட்டார் ஆரியன். அதனால் படப்பிடிப்பின்போது ஆரியனை நல்ல மூடில் வைக்க இயக்குனர் தன் மகள் ஆர்ஷாவையும் செட்டிற்கு அழைத்து வந்து அவனுடன் விளையாட வைத்தார். இப்படப்பிடிப்பு மும்பையின் க்ரீன் கிஃப்ட் பங்களாவில் மூன்று நாட்கள் நடைபெற்றது. மூன்று நாட்களும் ஆரியன் சமர்த்தாக இயக்குனர் சொல்படி கேட்டு அழகாக ஒரு professional-ஐ போல் நடித்துக் கொடுத்தான். இந்த புகழ் ஆரியனுக்கு மட்டுமல்ல டப்பிங் செய்த ஷ்ரே எனும் குட்டிப்பையனையும் சேரும். ஷ்ரேவும் இந்த விளம்பரத்தில் நடிக்க shortlist செய்யப்பட்டவர்களுள் ஒருவன். ஆனால் இறுதியில் நடிக்கும் வாய்ப்பு ஆரியனுக்குக் கிடைத்தத

விளம்பரத்தின் கருத்தாக்கம் : JWT, தில்லி. ஒளிப்பதிவாளர் : கார்த்திக் விஜய். ஆர்ட் டைரக்டர்: ஷேகர் & ரிச்சர்டு. படத்தில் மனுவின் obsession நூடுல்ஸ் என்பதால் சைனீஸ் ஸ்டைலில் இசையமைத்தவர் கனிஷ்கா.

இந்தி, பெங்காலி மொழிகளில் விளம்பரத்தில் வரும் குட்டிப் பையனின் on-screen பெயர் 'தோஜோ' . மேலும் அவனுக்குப் பிடித்த சாப்பாடு அயிட்டம் 'செளமீன்' என்கிற நூடுல்ஸ். தமிழிலும் இன்ன பிற தென்னிந்திய மொழிகளில் செளமீன் என்றால் familiar ஆக இருக்காது என்பதால் அதை N for நூடுல்ஸாக தென்னிந்தியைஸ் செய்துள்ளனர்.

ம்ம்ம்... இந்த விளம்பரத்தின் தமிழ் பிரதி என் இன் - பாக்ஸில் கிடைக்க பல நாட்களாகும் என்பதால், ஜுனியர் ஹார்லிக்ஸின் பெங்காலி விளம்பரம் இங்கு இடம்பெறுகிறது. மலையாள காப்பி இவ்விட . மனுவாக இருந்தால் என்ன, தோஜோவாக இருந்தால் என்ன... குட்டிப்பையனின் கிள்ளை மொழியை ரசிக்க is language a barrier?
ps : விளம்பரத்தின் தமிழ் பிரதி கிடைத்தவுடன் ஒரு update போடுகிறேன்

6 Responses:

Karthik Sriram said...

3sha video eppo varum? :P

Anyways, a very catchy ad when it did come out with manu.... naan romba busy hitting a chord with the audience.

LKS

ambi said...

சோக்கா சொன்னீங்க யக்கா. Ad டெக்னிகல் ஆளுகளை பத்தி புட்டு புட்டு வெக்கறதுக்கு இந்த பிளாக் உலகில் உங்கள விட்டா வேற யாரு இருக்கா? :))


//இயக்குனரின் 3 வயது மகள் ஆர்ஷா முகர்ஜியுடன் பயங்கர ஜிகிரியாகிவிட்டார் //

ஹிஹி, அந்த பையன் நம்ம கார்த்தி மாதிரி போலிருக்கு. :p

//3sha video eppo varum? //

@LKS, நீ எந்த வீடியோவை கேக்கற? :p

moneykandaan said...

enn manathai migavum kavarntha vilambarathil athvum ondru...athai thangal sonna vithathil melum antha vilambarathi thondarnthu thavaramal parkavendum endra arvathai erpaduthukirathu...vazthukal.

மங்களூர் சிவா said...

//
ஐ எம் 82 இயர் ஓல்டு கெழவி ப்ளாகிங் ஃப்ரம் மயிலாப்பூர் மாடவீதி
//
இதை விட என்ன பெரிய க்ரியேட்டிவிடி என்ன நம்ம 'ஆட்' தயாரிக்கிறவங்களுக்கு வந்திடப்போகுது.

மத்தபடி பதிவு மொக்கயா இல்லாம நல்லா விசயமா இருந்திச்சு

Appu said...

Highly informative on the people behind the ad!!

k4karthik said...

சூப்பர் மேட்டர்...