Wednesday, August 08, 2007

சொதப்பல் அட்வர்டைஸ்மென்ட்-1

ஒரு புது Series.

இப்பெல்லாம் எல்லா ப்ராண்ட்ஸூக்கும் ஒரு Celebrity endorser வந்துடறாரு. அது சாம்பார் பொடியோ, ஊறுகாயோ, தயிர் சாதமோ ஒரு Celebrity- சினிமா ஸ்டாரோ, கிரிக்கெட்டெரோ வந்து தலைய காமிச்சுட்டு போடயிடறாங்க. அந்த மாதிரி தலைய காமிக்கறதுல.. அதுவும் ப்ரவுன் விக் வெச்ச தலைய காமிக்கதுல முன்னணி வகிக்கறாரு நம்ம ஏழைக் குடியானவன் அமிதாப் பச்சன். இவரோட குடும்பத்துல இவரோட நாய், பூனை தவிர்த்து மத்த எல்லோருமே மினிமம் 5 பிராண்டுகளை endorse பண்றாங்க. தப்பில்லை. அது அவங்க குடும்ப விவகாரம்.

பாயிண்டுக்கு வருவோம். சமீபகாலமா அண்ணன் அமிதாப் endorse பண்ற 1008 பிராண்டுகள்ள ஒண்ணான காட்பரீ டெய்ரி மில்க் விளம்பரம் ஒண்ணு டிவியில உலவிட்டிருக்கு.. அவரு கார்ல போயிட்டு இருப்பாரு... சுகமா 'கபி கபி மெரெ தில் மே' பாட்டை ஹம் பண்ணுவாரு. அதைக் கேட்ட டிரைவர் "எவ்வளவு இனிமையான பாட்டு.." அப்படீன்னு சொல்வாரு.. இனிமைங்கற வார்த்தையைக் கேட்டவுடனே அண்ணனுக்கு இனிப்பு ஞாபகம் வந்துடும் (தேவுடா!!).உடனே இனிப்பைத் தேடி அவசரமா ஓடும்போது ஒரு கம்பத்துல இடிபட்டு மயங்கி விழுந்திடுவாரு.மயக்க நிலையிலையும் அவரோட மனசாட்சி a.k.a ஆவி a.k.a call-it-whateverக்கு இனிப்பு சாப்பிடற தவிப்பு குறையாததனால ஒரு அழகான பொண்ணோட உடம்புல புகுந்துக்குவாரு. அந்த பொண்ணு கடைக்கு போய், அண்ணனோட கட்டை குரல்ல 'மீட்டா', அதாவது இனிப்பு கேக்கும். Confused- ஆன கடைக்காரரும் அவருக்கு கேட்பரி டைரி மில்கை குடுப்பாரு. அந்த பொண்ணு உடம்புல புகுந்த பச்சன் சாப்பிட்டு உடம்புலெர்ந்து வெளிவந்து கடைசியில படுத்துட்டு இருக்கற அமிதாப் உடம்போட அவரோட ஆவி ஒன்றரக் கலந்து, அந்த டிரைவரோட மட்டமான "Yeh kya hogaya?" ங்கிற stupid expressionஒட விளம்பரம் முடியுது.இந்த மட்டமான விளம்பரத்த பத்தி சொல்லணும்னா ஒரு adல எப்படியெல்லாம் சொதப்ப முடியுமோ அப்படியெல்லாம் சொதப்பி வெச்சிருக்காங்க. ஒரு விளம்பரம் அமைக்க celebrity மட்டும் பத்தாது. ஒரு நல்ல concept தேவை.ஏனோ தானோன்னு ஒரு கதை.கதையமைப்பு ஒகில்வி & மேதர். இந்த அதிமேதாவித்தனமான கான்செப்ட் 1st சொதப்பல் . அமிதாப் ஏதோ கால் மணி நேரம் கால்ஷீட் கொடுத்துட்டு அஞ்சு நிமிஷத்துல படம் பிடிச்ச மாதிரி தெரியுது. ஒரு ஃப்ரேமிங் உண்டா, ஒரு decent cinematographyஉண்டா- ரெண்டுமே அம்பேல். இது 2nd சொதப்ஸ். அந்த பொண்ணு acting wise, less said the better. இது 3rd சொதப்பல்.இப்படி அடுக்கிகிட்டே போகலாம். பBut the one that takes the cake, அந்த sad ending. டிரைவரோட டயலாக். யப்பா! எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறாங்களோ?

இந்த விளம்பரத்துக்கு ஓவர் பில்ட்- யப்பா! ஒரு 15 second விளம்பரம். ஒரு ட்ரெய்லர் மாதிரி.. அதை Teaserன்னு சொல்வோம். "அடுத்து என்ன நடந்தது?" ன்னு ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் கணக்கா. இந்த சொதப்பலை படம்பிடிச்ச தயாரிப்பாளர் Red iceங்கிற அட்வர்டைசிங் Production Company. சூஜித் சர்கார்- ங்கிறவர் டைரக்டர்.

இப்பதிக்கு நான் ஒண்ணுதான் சொல்வேன். Congratulations Amitabh Bacchan-ji Sir, on your National Award for the Best Actor [53rd National Awards]

4 Responses:

Karthik Sriram said...

>>இவரோட குடும்பத்துல இவரோட நாய், பூனை தவிர்த்து மத்த எல்லோருமே மினிமம் 5 பிராண்டுகளை endorse பண்றாங்க.<<

Wasa seriously laughing uncontrollably.

>>
இப்பதிக்கு நான் ஒண்ணுதான் சொல்வேன். Congratulations Amitabh Bacchan-ji Sir, on your National Award for the Best Actor<<

Fluke nu solla vareengala?


Anyways, I'm pissed when all these actors come for ads - they are aiming for cheap publicity wonly.

LKS

ambi said...

ahaa! pashtu edam pochee! en kavalai enakku. :(

//இனிமைங்கற வார்த்தையைக் கேட்டவுடனே அண்ணனுக்கு இனிப்பு ஞாபகம் வந்துடும் //

LOL, he hee enakku kesari nyabagam vandhudum. :p

ohh ithuku peru teaseraa? thanks for the info.
one ex: Arjun amma yaaru?nu TN makkala katha vechaangale!

me also congratulating amitabh ji.

@LKS, kanna not for cheap publicity alone, dabbu osthaanu from Ads.

see after marriage, this surya acts in all hair oil to biskoothu vilambarams.

reason: jothika poori kattai eduthu vilasi irupaanga 4 kaasu sambathikara vazhiya paarunga!nu :p

Hhhmm, veetuku veedu vaasapadi, aptmentuku apartment Lifts. :)

The Visitor said...

LOL@ambi for reason: jothika poori kattai eduthu vilasi irupaanga 4 kaasu sambathikara vazhiya paarunga!nu :p

@blogeswari - Conceptல என்ன சொதப்பல்? Craving for chocolateஐ highlight பண்றாங்க. சரியாத்தானே இருக்கு?

manipayal said...

அம்பி, உங்க கமெண்ட்லயோ போஸ்டுலயோ கேசரியும் பூரிகட்டையும் கட்டயாம் வருதே. லீவு போட்டு யோசிப்பேளா இல்ல வாழ்க்கையே அப்புடி ஆயிடுச்சா?